பதச் சேதம் | சொற் பொருள் |
| மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய் வலிய தானவர் மார்பு இடம் | மா: மாமரம், முதல்: வேர், தடிந்து: வெட்டி (வீழ்த்தி), தண்: குளிர்ச்சி, மல்கு: நிறைந்த, தானவர்: அரக்கர்கள் |
| வழி கண்டு கமல பவனத்தனை சிறையிட்டு மகவான்தனை சிறைவிடுத்து | கமல பவனத்தன்: பிரமன் (தாமரையில் வாசம் செய்பவன்) மகவான்: இந்திரன் |
| ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில் உம்பர்சொல் துதி பெற்று | ஓம: ஹோம, இருடி: ரிஷி; உம்பர்: வானோர், தேவர் |
| நா உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில் ஒப்பு இல் புகழ் பெற்ற வை வேல் | நா உடைய: வாக்கு வன்மை உடைய, கீரன்: நக்கீரன், வை வேல்: கூர்மையான வேல் |
| சோமகலச ப்ரபா அலங்கார தர ஜடா சூடி கால அந்த காலர் | கலச: கிண்ணம் (போன்ற) சோம: (பிறைச்) சந்திரன்; ப்ரபா: ஒளி, அலங்கார தர: அலங்காரத்தைத் தரித்து, ஜடா சூடி: சடையில் சூடி, யமனுக்கு முடிவு கட்டிய திருவடியை உடையவர் |
| துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம் துரக கேசரம் அம்பரம் | துங்க: தூய, ரக்ஷக: காக்கின்ற, த்ரோண: வில், கட்க(ம்): வாள், குலிசம்: வஜ்ராயுதம், சூலம்: திரிசூலம், துரக: குதிரை, கேசரம்: சிம்மம், அம்பரம்: கடல் (இந்த இடத்தில்) |
| சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண திகம்பர த்ரியம்பக மகா தேவ நந்தன கஜாநந சகோதர குகன் செம்பொன் திருக்கை வேலே. | சேம: க்ஷேம, வடவா: வடவமுகாக்கினி(யை), அம்புயம்: (திருமஞ்சன—அபிஷேக) நீராகவும், சங்கை ஆபரணமாகவும், திக்+அம்பர: திசையே ஆடையாகக் கொண்ட நக்னர் (நக்க பிரான்), த்ரியம்பக: முக்கண்ணர், மகாதேவர், நந்தன: புதல்வன், கஜஆநந: (ஆநனம்: முகம்) யானை முகன், சகோதரனான குகனுடைய சிவந்த அழகிய திருக்கரத்திலுள்ள வேலே அது. |

மாமுதல் தடிந்து ... மாமரத்தை வேரோடு அழித்ததும்

(கடலுக்குள் மாமர வடிவில் பதுங்கிக் கொண்ட சூரபத்மனை ஸம்ஹரித்து)

தண் மல்கு கிரி ஊடுபோய் ... குளிர்ச்சி நிறைந்து விளங்கும் மலைகளைத் துளைத்துச் சென்றதும்

வலிய தானவர் மார்பிடம் ... அந்த மலைகளை இருப்பிடமாகக் கொண்ட அரக்கர்களின் வலிமையான மார்புகளைப்,

வழி கண்டு ... பிளந்து திறந்து, வழியேற்படுத்தியதும்,

கமலபவனத்தனை ... தாமரையைத் தன் இருப்பிடமாகக் கொண்ட பிரமனை

சிறை இட்டு ... சிறையில் அடைத்ததும்

(பிரணவத்தின் பொருளைச் சொல்லாத காரணத்துக்காக பிரமனைச் சிறை செய்தது)

மகவான் தனை ... இந்திரனை

(மகம் என்றால் வேள்வி. நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன் இந்திரப் பதவியை அடைகிறான். எனவே மகவான்)

சிறை விடுத்தும் ... (சூரபத்மன் அடைத்து வைத்திருந்த) சிறையிலிருந்து விடுவித்ததும்,

ஓம இருடி தலைவர் ஆசி பெற்று ...ஹோமங்களைச் செய்யும் முனிவர் தலைவர்களுடைய (முனிபுங்கவர்களுடைய) வாழ்த்தைப் பெற்றதும்,

உயர் வானில் உம்பர் சொல் துதி பெற்று ... உயர வானில் தேவலோகத்திலுள்ள அமரர்களால் துதிக்கப்பட்டதும்,

நா உடைய கீரன் தனது பாடல் பெற்று ... வாக்கு வன்மை உடைய நக்கீரனுடைய பாடலைப் பெற்றதும்,

உலகுதனில் ஒப்பில் புகழ் பெற்ற வை வேல் ... எல்லா உலகங்களிலும் தனக்கு நிகரில்லை என்னும்படி புகழ்பெற்ற கூர்மையான வேலாயுதம்

(மாமர வடிவில் நின்ற சூரனை அழித்ததும், மலைகளையும் அரக்கர் மார்புகளையும் பிளந்ததும், பிரமனைச் சிறையடைத்ததும், இந்திரனைச் சிறைவிடுத்ததும், முனிவர்களுடைய வாழ்த்தையும், தேவர்களுடைய துதியையும் பெற்றதும், நக்கீரனால் துதிக்கப்பட்டதும், இணையில்லாத புகழையுடையதுமான கூரான வேலாயுதம் யாருடையதோ என்று கேட்டால்,)

கலச சோம ... கலசம் போன்ற பிறைச்சந்திரனுடைய,

பிரபா அலங்கார ... பிரபையாகிய (ஒளியாகிய) அலங்காரத்தை,

ஜடா சூடி தர ... ஜடாமுடியில் சூடித் தரித்துள்ளவரும்,

கால அந்த காலர் ... யமனுக்கும் மரணத்தை விளைவித்த பாதத்தை உடையவரும்,

துங்க ரட்சக துரோண ... தூய்மை (அமைந்து) உலகத்தைப் பாதுகாக்கும் பிநாகம் என்னும் வில்லை ஏந்தியவரும்,

கட்கம் குலிசம் சூல ... சந்திரஹாசம் என்ற வாளைக் கொண்டவரும், வஜ்ராயுதத்தையும் திரிசூலத்தையும் தாங்குபவரும்,

துரக ... குதிரையின் உருவத்தைக் கொண்டு,

(கடலுக்கடியில் உள்ள வடவமுகாக்கினி குதிரை முகம்போன்ற வடிவுடையது)

கேசரம் ... சிங்கம் (போன்ற பொலிவுடன்),

அம்பரம் ... சமுத்திரத்தை,

சேம ... பாதுகாத்து வரும்,

வடவா ... வடவாமுகாக்னியை,

(கடல்நீர் அளவுக்கு மீறிப் பெருகாமல் அதைக் குடித்து வருவதான வடவமுகாக்கினி, கடல், கரையைத் தாண்டாமல் பாதுகாவலாக இருக்கிறது)

அம்புய ... அபிஷேக நீராக,

பரண ... கொள்பவரும்,

சங்கு ஆபரண ... (இடதுபுறத்தில்) சங்காலான வளையல்களையும் குழையையும் அணிந்திருப்பவரும் (இவை உமையம்மையின் ஆபரணங்கள்)

திகம்பர ... திசைகளையே ஆடையாக உடைய நக்னர் அல்லது நக்கபிரானும்,

த்ரியம்பக ... முக்கண்ணரும் ஆகிய,

மகா தேவ நந்தன ... சிவபெருமானின் குமாரனும்,

கஜானன சகோதர ... யானைமுனாகிய விநாயகப் பெருமானின் சகோதரனுமாகிய,

குகன் ... முருக மூர்த்தியின்,

செம் பொன் திருக் கை வேலே ... அழகிய பொன் போன்ற கரத்தில்
தங்கும் வேலாயுதமே அது.

மகாதேவர் சடாமுடியில் பிறைச்சந்திரனை அணிந்தவர், காலஸம்ஹார மூர்த்தியாக விளங்குபவர், பிநாகம் என்கிற வில்லையும், சந்திரஹாசம் என்கிற வாளையும், வஜ்ராயுதத்தையும், திரிசூலத்தையும் தாங்குபவர், கடல் தனது கரையைக் கடக்காத வண்ணம் அதைப் பருகிப் பாதுகாப்பதான வடவமுகாக்கினியைத் தனக்கு அபிஷேக நீராகக் (திருமஞ்சனமாகக்) கொள்பவர், சங்கு வளையல்களையும் குழையையும் தரித்த உமையை இடதுபுறத்தில் கொண்டவர், நக்கபிரான், முக்கண் மூர்த்தி — இப்படிப்பட்ட சிவபெருமானின் குமாரனும், விநாயகனின் தம்பியுமான குகப்பெருமானின் அழகிய, சிவந்த கரத்தில் இருப்பதான வேலே அது.

நக்கீரரை மலைக்குகையில் அடைத்திருந்த சிறையிலிருந்து மீட்டதை:

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும்

கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா – முன்னம்

பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட

தனிவேலை வாங்கத் தகும்

என்று திருமுருகாற்றுப் படையின் இறுதியில் அமைந்துள்ள பத்து வெண்பாக்களுள் ஒன்று சொல்கிறது. நக்கீரனை அடைத்திருந்த குன்றைத் தகர்த்த முருகா, என் துன்பமாகிய மலையைத் தூளடிப்பதற்காக இன்னமும் ஒருமுறை அந்த வேலை வீசுவது தகும்.

அங்கமே சூடினாய் அனலாடினாய்

என்று திருப்புகலூர் பதிகத்தின் இரண்டாம் பாடலில் அப்பர் பெருமான் பாடுவது, (அனல் ஆடினாய்) வடவமுகாக்கினியை தனக்கு அபிஷேகமாகக் கொள்வதைக் குறிக்கிறது என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
தினப்பலன்கள் - கும்பம்
வழிகாட்டி உதவுங்கள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை