சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 74

மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

Updated On :28 நவம்பர் 2015, 6:36 am

மயில் விருத்தத்தின் எட்டாவது பாடலில்—இதுவரையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அதே சந்தமென்றாலும்—வேகம் அதிகரிப்பதைப் பார்க்கலாம்.  ஒலிப்பதிவிலும் கேட்கலாம்.  இந்தப் பாடலில் வாசுகி என்றொரு பெயர் வருவதைப் பார்க்கலாம்.  இது (எண்திசை யானைகளைப் போல) உலகைத் தாங்கியுள்ள எட்டு நாகங்களிலொன்று.  கிழக்கு திசையைத் தாங்குவது.  பிற நாகங்கள்: அனந்தன், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன். இத்தனை நாகங்களையும் எடுத்து உதறுகின்றது மயில்.  இறுதியடிகளில் ஒலிக்கும் சந்த ஜாலம் இன்பம் பயப்பது.

செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
   சிந்தப் புராரி யமிர்தந்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
   தீவிஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல
   சங்கார கோர நயனத்

தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு
   சண்டப்பர சண்டமயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய
   விருத்தன் திருத்த ணிகைவாழ்

வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை
   வெளிப்பட வுணர்த்தி யருளித்

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
   சுவாமிவா கனமா னதோர்

துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
   துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235061048&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.