மயில் விருத்தம் எட்டாவது பாடலின் பொருளைக் காண்போம்.
பதச் சேதம் | சொற் பொருள் |
செக்கர் அளகேச சிக(ர) ரத்நம் புரி ராசிநிரை சிந்தப் புராரி அமிர்தம்
| செக்கர்: சிவந்த; அளகேச(ன்): குபேரன்; புரி: விளங்கும்; ராசிநிரை: வரிசையான கூட்டங்கள்; புராரி: புரங்களை அழித்தவன், சிவன். புராரி அமிர்தம்: சிவன் உண்ட அமுதம் எது? ஆலகால விஷம்! |
திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள் தீ விஷங் கொப்புளிப்பச்
| பகுவாய்: பிளவுபட்ட வாய், விஷத்தைக் கக்க. |
சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல சங்கார கோர நயனத்
| சக்ரகிரி: அண்டத்தின் புறமலையான சக்ரவாள கிரி; சங்கார: ஸம்ஹார, கோர நயன: கொடிய விழி(யையுடைய) |
தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு சண்டப் பிரசண்ட மயிலாம்
| தறுகண்: (இங்கே) கொடிய; பணாமுடி: படத்தை உடைய தலை; சண்ட: வேகம் நிறைந்த, பிரசண்ட: வீரம் மிகுந்த |
விக்ரம கிராதகுலி புனமீது உலாவிய விருத்தன் திருத்தணிகை வாழ்
| விக்ரம: பராக்கிரமம்; கிராத(ர்): வேடர்; கிராதகுலி: வேடர் குலத்தில் பிறந்தவள் (வள்ளி); புனம்: வயல், தினைப்புனம், விருத்தன்: கிழவடிவம் கொண்டவன் |
வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்து எனை வெளிப்பட உணர்த்தி அருளித்
| பழைய வினையாகிய சஞ்சிதம்; என்னை வெளிப்பட உணர்த்தி: நான் யார் என்பதை எனக்கு உணர்த்தி, |
துக்க சுக பேதம் அற வாழ்வித்த கந்தச் சுவாமி வாகனமானது ஓர்
| சுக துக்கங்களுக்கிடையே பேதம் பாராட்டாத, சுகத்தையும் பொருட்படுத்த, துக்கத்தையும் பொருட்படுத்தாத நிலையில் என்னை வாழ்வித்தவன் |
துரக கஜ ரத கடக விகட தட நிருதர் குல துஷ்டர் நிஷ்டூர மயிலே.
| துரக: குதிரை, கஜ: யானை, ரத: தேர், கடக(ம்): காலாள்; விகட: மிகுந்த அளவுள்ள; தட: பெருமை மிக்க; நிருதர்: அரக்கர், நிஷ்டூர(ம்): கொடுமை |

செக்கர் அளகேச சிக ரத்நபுரி ராசிநிரை என்பதை, ராசிநிரை, செக்கர் அளகேச சிகர, ரத்ன புரி என்று அன்வயப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராசி நிரை ... (வாசுகிப் பாம்பின்) வரிசையான (படங்களின்) கூட்டம்,

(எட்டுதிசை நாகங்களில் கிழக்கு திசைக்கு உரிய நாகம் வாசுகி. வாசுகி, தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடகன் ஆகிய ஏழு நாகங்களும் ஆதிசேடனுக்குத் தம்பியர். கஸ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்தவர் என்பது மஹாபாரதம் ஆதிபர்வத்திலே சொல்லப்படுகிறது.)

செக்கர் அளகேச ... அளகேசன் என்பது குபேரனுடைய பெயர். சிவந்த நிறத்தைக் கொண்டவனான குபேரனுடைய செல்வத்தை ஒத்ததான,

புரி சிகர ரத்ன ... விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை,

(வாசுகிப் பாம்பின் தலையிலே நிறைந்திருக்கும் நாகரத்னங்கள், குபேரனுடைய சம்பத்தைப் போல ஏராளமானவை. அந்த ரத்தினங்கள்,)

சிந்த ... சிதற,

புராரி அமிர்தம் ... திரிபுரங்களை அழித்வரான சிவனார் முன்னர் அமிர்தமென உண்டதாகிய ஆலகால விஷம்,

திரும்பப் பிறந்தது என ... இன்னொரு முறை (கடலுக்குள்ளிருந்து) எழுந்துவிட்டதோ என்று, (அனைவரும் அஞ்சுமாறு),

ஆயிரம் பகு வாய்கள் ... பிளவு பட்ட ஆயிரம் வாய்களும்,

தீ விஷம் கொப்புளிப்ப ... தீயைப் போன்ற விஷமானதுநெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க,

சக்ர கிரி சூழ வரு மண்டலங்கள் ... சக்ரவாளகிரியால் சூழப்பட்ட உலகங்கள் யாவையும்,

சகல சங்கார ... எல்லாவற்றையும் சம்ஹரிக்க (அழிக்க—வல்ல),

கோர நயன ... கொடூரமான பார்வையை உடைய,

தறுகண் வாசுகி ... வீரமும் கொடுமையும் உள்ள வாசுகியின்,

பணாமுடி எடுத்து உதறும் ... படக்கூட்டங்களை தன் அலகிலே கொத்தித் தூக்கி உதறி எறிகின்ற,

சண்டப் பிரசண்ட மயிலாம் ... உக்ரமும் வேகமும் கொண்ட மயில் (அது யாருடையதோ என்று கேட்டால்),

விக்ரம கிராதகுலி ... பராக்கிரமம் நிறைந்த வேடர் குலத்தில் உதித்தவளான வள்ளி (காத்திருந்த),

புன மீது உலாவிய ... தினைப் புலத்துக்குச் சென்று உலவியவன்;

விருத்தன் ... (வள்ளியை மணப்பதற்காக) கிழ உருவம் எடுத்தவன்,,

திருத்தணிகை வாழ் வேலாயுதன் ... திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் வேலாயுதன்,

பழ வினை துயர் அறுத்து ... தொன்மையான வினைகளின் துயரத்திலிருந்து விடுவித்து,

(செய்கின்ற வினை, ஆகாமியம்; நுகர்கின்ற வினை, பிராரப்தம்; பழவினை, சஞ்சிதம்)

எனை வெளிப்பட உணர்த்தி அருளி ... நான் யார் என்று உபதேச பூர்வமாக எனக்கு உணர்த்தி அருளியவனும்,

(தன்னை உணர்வதே ஞானம். இதையே,

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

துக்க சுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி ... சுகத்துக்கும் துக்கத்துக்கும் வேற்றுமை பாராட்டாத, இந்நிலைகளைக் கடந்த அத்வைத நிலையில் என்னை நிலைநிறுத்தி வாழ்வளித்தவனுமாகிய கந்தச் சுவாமியின்,

வாகனமானது ... வாகனமாக திகழும்,

ஓர் ... ஒப்பற்ற,

துரக ரத கஜ கடக ... குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்டதும்,

விகட தட ... பெருமை உள்ளதும் அகன்றதுமான,

நிருதர் குல துஷ்டர் ... அசுரர்குல தீயோர்களுக்குக்

நிஷ்டூர மயிலே ... கொடுமையைக் காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது.

குபேரனுடைய மொத்த செல்வத்தையும் தன் ஆயிரம் தலைகளில் விளங்கும் மணிகளாகக் கொண்டிருப்பதும்; பரமசிவனார் ஆதியில் உண்டதான ஆலகால விஷம் இன்னொருமுறை கடலிலிருந்து எழுந்துவிட்டதோ என்று அனைவரும் அஞ்சுமாறு, பிளவுபட்ட தன் ஆயிரம் வாய்களிலிருந்தும்—அந்த வாசுகி—விஷத்தைக் கக்கும்படியாக; வெறும் பார்வையாலேயே சக்கரவாளகிரிக்கு உட்பட்ட அனைத்து அண்டங்களையும் எரித்து அழித்துவிடக்கூடிய கொடூரமான பார்வையை உடைய—அந்த வாசுகிப் பாம்பின்—அத்தனைப் படங்களையும் ஒரே கொத்தாகப் பற்றித் தன் அலகால் உதறக்கூடிய மயில் இது.. இத்தகைய மயில் யாருடையது என்று கேட்பீர்களானால்,)

பேராற்றல் கொண்ட வேடர்குலத்தில் தோன்றியவளான வள்ளி, காத்துவந்த தினைப்புனத்தில் கிழவடிவம் கொண்டு உலாவியவன்; திருத்தணிகையில் உறைபவன்; வேலாயுதன்; பழவினையின் கட்டிலிருந்து என்னை விடுவித்து, நான் யார் என்பதை எனக்கு உபதேசித்து அருளியவன்; துன்பம், இன்பம் என்ற பேத உணர்ச்சிகளைக் கடந்ததாகிய அத்துவித நிலையில் என்னை இருத்தி வாழ்வித்தவன், (இப்படிப்பட்ட) கந்தனுடைய வாகனமான, ஒப்பற்ற மயில்; குதிரை, தேர், யானை, காலாட் படைகளைக் கொண்டு பெருமையும் அகன்றதுமான அசுரர்குல துஷ்டர்களுக்குக் கொடுமையை விளைவித்து அழிக்கின்ற அதே மயில்தான் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரசாரத்தில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட வேட்பாளா்கள்

திருவேங்கடத்தில் ஜான் பாண்டியன் பிரசாரம்!

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை