தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 6

இப்போது, திருப்புகழின் எண் வரிசையில் இரண்டாம் பாடலான, ‘பக்கரை விசித்ரமணி’ பாடலின் பொருளைப் பார்ப்போம்.

Updated On :18 செப்டம்பர் 2015, 9:44 am

இப்போது, திருப்புகழின் எண் வரிசையில் இரண்டாம் பாடலான, ‘பக்கரை விசித்ரமணி’ பாடலின் பொருளைப் பார்ப்போம்.

இதுவும் விநாயகர் துதிதான். முதலில் முருகனைத் துதித்துவிட்டு, பிறகு விநாயகரைத் துதிக்கிறது இப்பாடல்.

பக்கரை விசித்திர மணி பொன் க(ல்)லணை இட்ட நடை

பட்சி எனும் உக்ர துரகமும்

மிக அரிய குறிப்புகளைத் தருகிறது இந்தப் பாடல்.

குதிரைச் சவாரி செய்பவர்கள், இரண்டு பக்கத்திலும் காலை நுழைத்து வைத்துக்கொள்வதற்காக, உலோகத்தால் ஆன ஒன்றைப் பயன்படுத்துவார்கள். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் தெரியும்.

Story image

இதற்குத்தான் தமிழில் பக்கரை என்று பெயர். இந்தப் பாகங்களுக்கெல்லாம் தமிழில் என்ன கலைச்சொல்லைச் சொல்வது என்று தேடுபவர்களுடைய கவனத்துக்கு இதை வைக்கிறேன். இதை அங்கவடி என்றும் சொல்வார்கள்.

பக்கரை விசித்ரமணி என்றால், விசித்ரமான அழகுடைய (சித்ரம் என்றால் அழகான, வி-சித்ரம் என்றால் அழகை மீறிய, ஓவியத்தில் எழுத முடியாத) மணிகளால் செய்யப்பட்ட பக்கரை.

அடுத்ததாக, பொற்கலணை என்கிறார். கலணை என்றால் சேணம் (saddle). பொன்னாலாகிய சேணம். பக்கரை விசித்ரமணியையும் பொற்கலணையையும் இட்டு நடப்பதால், ‘பொற்கலணை இட்ட நடை’. இதென்ன, குதிரைக்குப் போடும் பாகங்களின் பெயர் வரிசையாக இருக்கிறதே என்று தோன்றலாம். ஆமாம். குதிரையைத்தான் சொல்கிறார். ஒரேயொரு வித்தியாசம். இது நடக்கும் குதிரையன்று; பறக்கும் குதிரை. பட்சியெனும் உக்ரதுரகமும்… என்றால், இந்த stirrup. Saddle எல்லாம் அணிந்த பறவையாகிய, உக்ரம் நிறைந்த மயிலென்னும் துரகம். குதிரை.

அப்ப அங்க கமுநீப என்றிருப்பது? பட்சியெனும் உக்ரதுரகமும், நீப என்று பிரித்துக்கொள்ள வேண்டும். நீப என்றால் கடம்பு, கடப்ப மலர். கந்தர் அலங்காரத்தில் சொல்கிறாரே -

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

இந்தக் கடம்புதான் நீபம். முருகனுக்குப் பிரியமான மலர். ‘தாதவிழ் கடப்பந் தாரான் தான்இரு நுதலைக் காக்க’ என்று சண்முக கவசத்தில், பாம்பன் ஸ்வாமிகள் பாடுகிறாரே, அதே கடம்புதான் இது. கடப்பம். இந்த நீப-த்தை அடுத்த அடியில் வரும் பக்குவ மலர்த் தொடையும் என்பதோடு கூட்டிக்கொள்ள வேண்டும். பட்சி எனும் உக்ர துரகத்தில் ஏறி, கடப்ப மாலையை அணிந்துகொண்டு,

அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்

குவடு என்றால் மலை. அக்குவடு என்பது அந்தக் கிரெளஞ்ச மலையைத் தூளாக்கும்படி முருகன் வீசியதான, அவன் அருட்கரத்தில் உள்ளதாகிய வேல். மயிலைச் சொன்னார். இப்ப வேலைச் சொன்னார். (கிரெளஞ்ச பர்வதத்தைத் தூளடித்த வரலாற்றை, இப்போது செய்துகொண்டிருக்கும் யாப்பியல் விளக்கம் முடிந்த பிறகு பார்ப்போம்).

திக்கு அது மதிக்க வரு குக்குடமும்

திக்கு மதிக்க வருகின்ற குக்குடம். அதாவது சேவல். இப்ப இந்த மதி-த்தல் என்பதிலுள்ள இரண்டாம் எழுத்தாகிய தி என்பதன் உச்சரிப்பு dhi இல்லை, thi. மthiத்தல் என்றால் கடைதல் என்று பொருள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை மதித்தனர் என்றால், ஏதோ மரியாதை செய்தார்கள் என்று பொருளில்லை, கடைந்தார்கள் என்று பொருள். அப்படி, இந்தச் சேவல் இருக்கிறதே, அது திசைகளையெல்லாம் கடையும்படியாகத் தன் சிறகுகளை வீசி அடித்துக்கொள்கிறதாம். மயிலாச்சு, வேலாச்சு, சேவலும் ஆச்சு. அடுத்தது?

ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்

ரக்ஷை அல்லது ரட்சை. இரட்சிக்கும். காக்கும். இரட்சிப்பைத் தருவதாகிய சின்ன அடிகள். குழந்தை முருகனுடை அடிகள் சின்ன அடிகள்தானே?

அடுத்ததாக, முற்றிய பன்னிரு தோளும் என்றார்.

மாதர்களுடைய தோளை இளந்தோள் என்றால், மாலோன் மருகனுடைய தோளை முற்றிய தோள் எனலாமோ? அதுவுந்தான். முற்றுகையிட்டனர் என்கிறோமே, அப்படியென்றால் என்ன? எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டனர் என்பதுதானே? முற்றிய தோள் என்றால், முருகனுடைய திருவுருத்தை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துள்ளனவாகிய பன்னிரண்டு தோள்கள் என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்.

செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு

என எனக்கு அருள்கை மறவேனே...

செய் என்றால் வயல்.

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்

செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.

என்று தசரதன் தன் நாட்டைப் பாதுகாத்த விதத்தைப் பாடுகிறான் கம்பன். ஏழையொருவன் தன் வயலை எப்படிக் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாப்பானோ அப்படி, ‘வறிஞன் ஓம்பும் ஓர் செய் என’ தசரதன் நாட்டைக் காத்தானாம்.

செய்ப்பதி என்றால்? செய் என்றால் வயல், பதி என்றால் ஊர். வயலூர். திருவண்ணாமலையில் ‘முத்தைத்தரு’ என்று அடியெடுத்துக் கொடுத்த பெருமான், அருணகிரி குருநாதரின் கனவில் தோன்றி, ‘வயலூருக்கு வா’ என்று சொன்னாராம். வயலூரையும் வைத்து (அங்கே) திருப்புகழை விருப்பமொடு செப்பு என்று அவருக்கு உத்தரவிட்டாராம். இப்படி எனக்கு திருப்புகழைச் சொல் என்று அருளியதை என்றும் மறவேன் என்கிறார் குருநாதர்.

அடுத்ததாக, விநாயகர் புகழ் விரிகிறது.

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய், எட்பொரி, அவல் துவரை, இளநீர், வண்டெச்சில், பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு, வெள்ளரிப் பழம், இடிப்பல் வகை, தனிமூலம், மிக்க அடிசில், கடலை பட்சணம் எனக் கொள் ஒரு….

பட்டியல் பெரிசா இருக்கிறதா? விநாயகர் பட்சணம் (பக்ஷிப்பது, உண்பது) எதையெல்லாம் என்றால்,

இக்கு (கரும்பு), அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பலவகையான பருப்புகள், நெய், எள் பொரி, அவல், துவரை, இளநீர், வண்டுஎச்சில், பயறு, வகைவகையான அப்பங்கள், பச்சரிசி பிட்டு, வெள்ளரிக்காய் அல்லது பழம், (தேங்காயைத் தேங்காயென்றும் சொல்லலாம், தெங்கம்பழமென்றும் சொல்லலாம். அதுபோல), பயறு, இடிப்பல் வகையென்றால், இடித்து உண்டாக்கும் மாவுவகைப் பண்டங்கள். தனி மூலம் என்பது வேர், கிழங்கு ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றோடு கடலை…

வண்டுஎச்சில் என்றால்? வேற என்ன? தேன்தான்!

மாறுபட்ட மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்

ஊறுபட்ட கல்லின்மீது ஊற்றுகின்ற மூடர்காள்

என்றாரே சிவவாக்கியர். அவர் சொல்லும் வண்டெச்சிலும் தேன்தான். தேனுக்கு இப்படியொரு பெயர் உண்டு. அது, வண்டின் எச்சிலோடு சேர்ந்ததுதானே.

இப்படி எல்லாவற்றையும் பட்சிக்கும் (உண்ணும்)

விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி, வெற்ப

விக்கினங்களை அழிப்பவர் என்றும் சொல்லலாம். நினைப்பவர்களுக்கு நிர்விக்கினம், நினையாதவர்களுக்கு விக்கினம் என்று (சிவனுடைய தேர் அச்சை முறித்ததுபோல) மாற்றி மாற்றிச் செய்யவல்ல சமர்த்தன் என்றால் பொருந்தும். அருளாழி, கருணைக்கடல். வெற்பு என்றால் மலை. அருளின் கடலே, கருணை மலையே.

குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக

குடிலம் என்றால் வளைந்த, சடிலம் என்றால் சடாபார, வளைந்த சடாபாரத்தை உள்ள, (பினாகம் என்னும்) வில்லை ஏந்திய அப்பர் — சிவர் — அருளியவனான வித்தகனே! விநாயகனே!

மருப்புடைய பெருமாளே

மருப்பு என்பது கொம்பு, தந்தம். ஒற்றைக் கொம்புடைய பெருமாளே.

இது பொருள்.

மூன்றாம் பாடலோடு நாளை சந்திக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.