பதச் சேதம் | சொற் பொருள் |
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா
| அனல்: தீ; அப்பு: நீர்; அரி: வாயு; புக்க: புகுந்த; குணத்ரயம்: மூன்று குணங்கள்—தாமசம் ராஜசம் சத்துவம்; அடர் பொய்: அடர்த்தியான, நிரம்பிய பொய்—நிலையற்ற; குருதிக் குடில்: ரத்தத்தோடு கூடிய குடிசை; |
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே
| அவலம்: துன்பம்; சவலை: குழப்பம் (குழந்தை, இளமை என்றெல்லாம் பலபொருள் உண்டு); |
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார் தம்
| குனகி: கொஞ்சி; தனகி: மகிழ்வூட்டி; கொடியார்: கொடியைப் போன்ற (அல்லது) கொடிய; |
கொடுமை கடுமை குவளை கடையில் குலை பட்டு அலைய கடவேனோ
| குவளை: குவளை மலர்போன்ற கண்; |
தினை வித்தின நல் புனம் உற்ற குறத் திருவை புணர் பொன் புய வீரா
| வித்தின: விதைத்த; புனம்: மலைப் பகுதியைத் திருத்தி அமைக்கப்பட்ட வயல்; |
தெளியத் தெளியப் பவளச் சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே
| பவள: சிவந்த; சடில: சடாமுடி—சிவந்த சடாமுடி; |
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொருகை கதிர் வேலா
| குலவெற்பு: கிரெளஞ்சம்; கறுவி: சினந்து; பொருகை: போரிட்ட; |
கழியைக் கிழிய கயல் தத்தும் இடைக்கழியில் குமர பெருமாளே.
| கழியை: உப்பங்கழி, உப்புநீர்ப் பரப்பு, கடல்; |

அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து ... தீ, நீர், காறு முதலான பஞ்சபூதங்களின் கலவை புகுந்ததும், தாமசம், ராஜசம், சத்துவம் என்ற முக்குணங்களால் ஆனதும்;

அடர் பொய்க் குருதிக் குடில் பேணா ... முற்றிலும் பொய்யானதுமான (நிலையற்றதுமான) குருதி நிரம்பிய குடிசையான இந்த உடலைப் போற்றி;

அவலக் கவலைச் சவலைக் கலை கற்று ... துன்பங்களுக்கு இடமானதும் (பயனற்றதும்), கவலைகளுக்கு இடம்தருவதும், குழப்பங்களை ஏற்படுத்துவதுமான பல கலைகளைக் கற்றுக்கொண்டு;

அதனில் பொருள் சற்று அறியாதே ... அப்படிக் கற்ற கலைகளின் பொருளைக் கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல்;

குனகித் தனகிக் கனல் ஒத்து உருகிக் குலவிக் கலவி ... கொஞ்சிப் பேசியும், மனத்தை மகிழ்வித்தும், தீயில் பட்ட மெழுகைப் போல மனத்தை உருக்கியும், நெருங்கி உறவாடியும் கூடியும் செய்யும்

கொடியார் தம் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையில் குலை பட்டு அலையக் கடவேனோ ... கொடிபோன்ற பெண்களுடைய கொடுமையிலும் கடுமையிலும் குவளைமலர் போன்ற கண்களின் கடைவிழி—ஓரப்—பார்வையிலும் மனம் குலைந்து தடுமாறி நான் வீணில் அலைந்து திரிந்துதான் கொண்டிருப்பேனா?

தினை வித்தின நல் புனம் உற்ற குறத் திருவைப் புணர் பொற் புய வீரா ... தினை விதைக்கப்பட்ட காட்டு வயலில் இருந்த குறலட்சுமியான வள்ளியை மணம்புரிந்த அழகிய தோள்களை உடையவனே!

தெளியத் தெளியப் பவளச் சடிலச் சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே ... சிவந்த சடாபாரத்தை உடைய சிவபெருமானுக்குத் தெள்ளத் தெளிவாகப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே!

கனகச் சிகரக் குல வெற்பு உருவக் கறுவிப் பொரு கைக் கதிர் வேலா ... பொன்மயமான சிகரங்களை உடைய குலபர்வதமான கிரெளஞ்சமலையை உருவிச் செலும்படி, சினந்து வீசிய வேலைக் கையில் தரித்தவனே!

கழியைக் கிழியக் கயல் தத்தும் இடைக்கழியில் குமரப் பெருமாளே. ... உப்புநீர்ப் பரப்பான கடல்* அதிர்ந்து கிழியும்படி மீன்கள் துள்ளுகின்ற திருவிடைக்கழித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

(* திருவிடைக்கழிக்கு அருகில் உப்பனாறு என்ற ஆறு ஓடுகிறது. அருகில் தரங்கம்பாடியும் கடலும் இருக்கின்றன.)

சுருக்க உரை

தினை விதைக்கப்பட்ட மலைச்சரிவின் வயல்களிலே இருந்த குறலட்சுமியான வள்ளியை அணைத்த பொற்றோளனே! சிவந்த சடாமுடியை உடைய சிவபெருமானுக்குத் பிரணவத்தின் பொருளைத் தெள்ளத் தெளிவாக உபதேசித்தவனே! பொன்மயமான சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை உருவிச் செல்லும்படி சினத்தோடு வீசிய வேலைக் கையில் ஏந்தியவனே! உப்புநீர்ப் பரப்பான கடல் அதிரும்படியாக மீன் துள்ளும் திருவிடைக்கழித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

பஞ்சபூதச் சேர்க்கையாலும், முக்குணங்களாலும் ஆனதும், நிலையற்றதும், குருதி நிரம்பியதுமான உடலென்னும் இந்தக் குடிசையைப் போற்றிப் பாதுகாத்து, சற்றும் பயனற்றதும், குழப்பங்களைத் தரக்கூடியதுமான நூல்களைப் படித்து, அவற்றின் பொருளைக்கூட அறிந்துகொள்ளாமல்; கொடிபோன்ற பெண்களை நாடிச் சென்று அவர்களோடு கொஞ்சிப் பேசியும், உள்ளம் மகிழ்ந்தும், தணல்பட்ட மெழுகாய் உருகியும் நெருங்கி உறவாடியும் அவர்களுடைய குவளை மலர்போன்ற விழிகளின் கடைக்கண் பார்வையால் நிலைகுலைந்து திரிந்தே என் வாழ்நாள் கழியலாமோ? (அவ்விதம் கழியாமல் என்னை ஆண்டுகொள்வாயாக.)

(அருணகிரியார் இப்படிப்பட்ட பாடல்களைப் பாடும் சமயத்தில் இந்த ஆசைகளால் அலைக்கழிக்கப்படவில்லை. அதைக் கடந்த நிலையை அடைந்திருந்தார். எனவே இது அவர் தனக்காகக் கேட்டுக்கொண்ட ஒன்றன்று.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை