மனிதன் பிறக்கிறான். வளர்கிறான். ஆனால் வளர்ச்சி என்பது எதைக் குறிக்கிறது என்ற ஆதாரமான கேள்வியை எழுப்புகிறார் அருணகிரியார். ‘ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி’ என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலுக்குள் இன்றை திருப்புகழ் பேசும் கருத்தும் ஒளிந்திருக்கிறது.
‘நான் கருவில் உருவானேன்; வளர்ந்தேன்’ என்று சொல்லும் குருநாதர், ‘வயதளவிலே’ என்று அந்த வளர்ச்சியின் தன்மையைச் சொல்கிறார். ‘இறைவா நான் வளர்ந்தது வயதளவிலேதான்’ என்றால், எந்தவிதமான மனித முயற்சியும் தேவைப்படாதது ‘வயதளவிலே வளர்வது’. இன்று தூங்கி நாளை விழித்தால் ஒரு நாள் கழிந்தது. இப்படி 365 நாள் தொடர்ந்தால் தானாக ஒரு வருட வளர்ச்சி வந்துவிட்டுப் போகிறது. உயிரைத்தக்கவைத்துக் கொள்ளும் அடிப்படைப் போராட்டத்தைத் தவிர அதற்கென்ன தனிப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது? இந்தச் சிந்தனையைத்தான் இப்பாடலின் முதலடியிலே முன்வைக்கிறார் இந்தப் பழனித் திருப்புகழில். இந்தக் கருத்தை அப்படியே ஒட்டி நடக்கும் திருப்புகழ் ஒன்றைத்தான்—அண்மைக் காலத்தில் கிடைத்தது—நம்முடைய 212ம் தவணையில் பேசியிருந்தோம். (“கருவெனு மாயை உருவினில் மூழ்கி”).
இன்றைய பாடல் இன்னொரு வகையிலும் விசேஷமானது. திருஞான சம்பந்தரைப் பற்றிப் பல பாடல்களில் ‘முருகனுடைய அவதாரம்’ என்றே பாடிய சுவாமிகள், இந்தப் பாடலில் சம்பந்தரையும் ‘கவிராஜ சிங்கம்’ என்று குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்விலே நடந்த சம்பவத்தையும் குறிப்பிடுகிறார். சைவசமயக் குரவர்களில் இருவரை இந்த ஒரே பாடலில் குறிப்பிடுகிறார். அதைத் தவிர எப்போதும்போல திருவரங்கத்து எம்மான் புகழையும் தவறாமல் குறிப்பிடுகிறார். பாடலைப் பார்ப்போம்.
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த தனதான
கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அனுதினமும் நாண மின்றி அழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே.
</p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

