கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம் என்று தொடங்கிய தாயுமானவர் ஒரு நீண்ட பட்டியலுக்குப் பின்னர், ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று முடிக்கிறார். ‘சொன்னபடிக்கு நடந்திடுவாய் மனமே, தொழில் வேறிலைகாண்’ என்றும், ‘கும்பிட்டு என்னேரமும் சக்தியென்றால் உன்னைக் கும்பிடுவேன் மனமே’ என்றும் பாரதி பாடுகிறான்.
இன்றைய தீர்த்தமலைத் திருப்புகழிலும் குருநாதர் மனத்துக்கு உபதேசம் செய்கிறார். தருமபுரியிலிருந்து அரூர் வழியாகவும் திருப்பத்தூரிலிருந்து ஊத்தங்கரை வழியாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேலிருக்கும் ஆலயத்தைப் பார்த்தாலே ‘என்றுபோய்க் காண்போம்’ என்று ஏங்க வைக்கும் ஆலயம்.
மனத்துக்கு உபதேசங்களைச் செய்துமுடித்து, ‘இந்த மனம் உன்னையே நினைத்து ஏத்துமாறு நீதான் எனக்கருள வேண்டும்’ என்று பொறுப்பை முருகன் கையிலேயே ஒப்படைத்துவிடுகிறார்! பாட்டில் மகமது, முகமது என்றெல்லாம் வருகின்றன. அவையெல்லாம் தக்கயாகத்தைக் குறிப்பவை. பாடலைப் பார்ப்போம்.
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன
தாத்த தனதன தாத்த தனதன தனதான
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
கூற்று வருவழி பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம்
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் வழிபோக
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ னிதுகேளாய்
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் திருநீறாய்
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுறு வாட்டு முமையவ னருள்பாலா
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
ஈட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
ஏத்த அருளுட னோக்கி அருளுதி
தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261282997&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

