ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

பகுதி - 225

வடக்கேயுள்ள மேருமலையை ஆட்டியசைத்துப் பெயர்த்து, அது வருந்தும்படியாக அதை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை அதற்கு நாணாகப் பூட்டி திரிபுரத்தை எரித்தவரும்;

Updated On :29 ஏப்ரல் 2016, 5:16 am

பதச் சேதம்

சொற் பொருள்

பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்

உருகிலை: உருகினாய் இல்லை; பாட்டை: பாடு, கஷ்டம்; தினமானம்: தினந்தோறும்;

பா(ம்)பு அணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொ(ண்)டு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக

பாப்பு: பாம்பு—வலித்தல் விகாரம்; அணியன்: அணிந்தவன்; வீட்டை: வீடுபேற்றை; பாழ்த்த: பாழ்பட்ட;

மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை

பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்

மாட்டம்: மாட்டேன்; எனுகிறை: என்கிறாய்—இரண்டும் பேச்சு வழக்கு;

வாக்கும் உனது உள்ள(ம்) நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை

வாழ்த்த இரு வினை நீக்கு முருகனை மருவாயோ

வாக்கும்: வாக்கு வன்மையையும்; உள்ள நோக்கும்: உள்ளத்தினுள்ளே காணக்கூடிய தரிசன அனுபவமும்; இருவினை: பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை; மருவாயோ: சேராயோ;

ஆட்டி வட வரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்

நாட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திரு நீறாய் ஆக்கி

ஆட்டி வடவரை: மேரு மலையை அசைத்தெடுத்து; அரவொடு பூட்டி: பாம்பை நாணாகக் கட்டி; மறலி: எமன்; நாட்டம் அற: நாடியது அழிய; சரண் நீட்டி: பாதத்தை நீட்டி; திருநீறாய்: சாம்பலாய்;

மகம் அதை வீட்டி ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகள்

ஆர்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் அருள் பாலா

மகம்: வேள்வி; ஒருவனை: தட்சனை; மறைமகள்: வாணி; வடுவுற: காயத்தால் வடு ஏற்படும்படி; வாட்டி: துன்பம் விளைவித்து; உமையவன்: உமையின் கணவன், உமாமகேசுரன்;

சீட்டை எழுதி

வையாற்றில் எதிர் உற ஓட்டி அழல்  பசை காட்டி சமணரை

சீற்றமொடு கழு ஏற்ற அருளிய குருநாதா

சீட்டு: ஓலைத் துணுக்கு; வையாறு: வைகையாறு; பசை: பசுமை (மாறாது);

தீர்த்த எனது அக மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி

தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே.

தீர்த்த: பரிசுத்தனே; அகம் ஏட்டை: மன ஆசை; (ஏட்டை: விருப்பம்); சசி: இந்திரன் மனைவி, இந்திராணி; சசிமகள்: தேவானை;

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை.. என்னுடைய மனமே!  நீ பாட்டைக் கேட்டும் உருகுவதில்லை; அதன் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுவதில்லை;

கூற்று வருவழி பார்த்து முருகிலை ... (தவறாமல்) யமன் வந்தே தீரப்போகிறான் என்ற அந்த வழியை நினைத்தும் உருகி இறைவனை நினைப்பாயில்லை;

பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை ... தினந்தோறும் பாடுகளைப் பட்டபின்பும் (இதை) உணர்வதில்லை;

தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை ... பாம்பு அணிபவனான சிவபெருமான் ஒவ்வொருநாளும் அருளும் மோட்ச கதியை விரும்புவதில்லை;

நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை ... (மனமுருகாவிட்டாலும், குறைந்தது) நுனிநாக்காலாவது இறைவனைப் போற்றுவதை அறியவில்லை;

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது ... பாழ்பட்டதான பிறப்புகளைத் திரும்பத் திரும்ப ஏற்று அவதியும் மனமே!

நல் வழிபோக மாட்டம் எனுகிறை ... நல்லவழியில் போகமாட்டேன் என்று சொல்கிறாய்;

கூட்டை விடுகிலை ... வெறும் கூடாக இருக்கும் இந்த உடலின்மேலுள்ள பற்றை நீ விடுவதாக இல்லை;

ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை ... ஏட்டிலே, ‘இன்னபடி’ என்று உனக்காக எழுதிவைக்கப்பட்டுள்ள தலைவிதி போகின்ற திசையை அறியவில்லை;

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் ... நீ இப்படியெல்லாம் இருப்பதைப் பார்த்தும் (சகித்துக்கொள்ள முடியாமல் உனக்கு) ஒரு நல்வார்த்தை சொல்கிறேன், கேட்பாயாக.

வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் ... (புகழ் ஏத்த, வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன்)—முருகனைப் போற்றிப் புகழ்ந்து—திருப்புகழை ஓதித்—துதித்தால் அவன் உனக்கு நல்ல வாக்கு பலத்தையும், உன் உள்ளத்திலே நல்ல நோக்கத்தையும் அருள்வான்;

அடியார்க்கும் எளியனை வாழ்த்த ... அடியார்களுக்கு மிக எளியவனான அவனை வாழ்த்தினாயானால்,

இருவினை நீக்கு முருகனை மருவாயோ ... (பிறப்பு இறப்பு, நல்வினை தீவினைப் பயன்களாகிய) இரண்டு வினைகளையும் நீக்குவான்.  அப்படிப்பட்ட முருகனை நீ சேராயோ?  (சேர்வது மனம் என்பதால், ‘மருவாயோ’ என்பதற்கு சிந்திக்க மாட்டாயோ என்பது நேர்ப் பொருள்)

ஆட்டி வடவரை வாட்டி ... வடக்கே உள்ள மலையான மேருவை ஆட்டி அசைத்துப் பெயர்த்து, அதை வருத்தி வளைத்து வில்லாக்கிக் கொண்டு,

அரவொடு பூட்டி திரிபுர மூட்டி ... வாசுகிப் பாம்பை அந்த வில்லில் நாணாகக் கட்டி, திரிபுரத்தை எரிசெய்தும்;

மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி ... யமனுடைய கொட்டம் அழியும்படித் தன்பாதத்தை நீட்டி, அவனை உதைத்துத் தள்ளியும்;

மதனுடல் திருநீறாய் ஆக்கி ... மன்மதனின் உடல் சாம்பலாகும்படி எரித்தும்;

(சிவனாருடைய நெற்றிவிழியால் எரிக்கப்படும் வரையில் மன்மதன் உடலோடுதான் இருந்தான்; எரிக்கப்பட்டபிறகு உடலற்றவனாக—அநங்கனாக—ஆனான்.)

மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி ... (தட்சன் நடத்திய) மகம் அதை—யாகத்தை—அழித்தும்; தட்சன் எனப்படும் ஒருவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தியும்;

மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும் ... மறைமகளான சரஸ்வதிக்குக்கூட காயம்பட்டு அதனால் வடு ஏற்படும்படி வாட்டியும்*; (அடிக்குறிப்பைக் காண்க)

உமையவன் அருள்பாலா ... (செய்தவரும்) உமாதேவியின் கணவருமான உமையவன்—உமாமகேசுரன்—அருளிய பாலனே!

சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி ... திருப்பாசுரத்தை ஓலைச்சுவடியிலே எழுதி அதை வைகையாற்றில், வெள்ளத்தை எதிர்த்துச்—எதிர்ப்பக்கமாகச்—செல்லும்படி விட்டவரும்;

அழல்பசை காட்டி... (அவ்வாறு பாசுரம் எழுதிய சுவடியை) நெருப்பிலே இட்ட போதும் அது பசுமை மாறாமல் இருப்பதைக் காட்டியவரும்;

சமணரை சீற்ற மொடுகழு வேற்ற அருளிய... (வாதிலே தோற்ற) சமணர்களைக் கோபித்து, அவர்கள் கழுவேற வைத்தவருமான--

குருநாதா ... (திருஞானசம்பந்தராக வந்த) குருநாதனே!

தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ஏத்த அருளுட னோக்கி அருளுதி... பரிசுத்தனே!  என்னுடைய மனம் விருப்பத்துடன் உன்னைத் துதிக்கும்படி நீ அருட்பார்வை புரிந்தருளவேண்டும்.

தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே. ... தீர்த்தமலைத் தலத்திலே வீற்றிருப்பவனே!  இந்திராணியின் குமாரியான தேவானையின் நாயகனே!

* சரஸ்வதிக்குக் காயம்பட்டது முதலானவை: உமையின் தகப்பனான தட்சனை தட்சயாகத்தில் தலையை வெட்டினார்; பின்னர் அவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிர்கொடுத்தார்.  அந்த யாகத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.  பிரமனுக்கு ஏற்பட்டதனால், அவன் நாவில் வீற்றிருக்கும் கலைமகளுக்கும் ஏற்பட்டது.  இதைக் கந்தபுராணம்:

தாக்குத லோடும் ஐயன் சரணிடைப் பணிவான் போல
மேக்குறு சென்னி சோர விரிஞ்சனும் வீழ அன்னான்
வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால்
மூக்கொடு குயமுங் கொய்தான் இறுதிநாள் முதல்வன் போல்வான்.

—என்று பாடுகிறது [கந்தபுராணம், தட்ச காண்டம், யாக சங்காரப் படலம்.] ‘பிரமனை வீரபத்திரர் குட்டியதும், வீரபத்திரர் பாதத்தில் விழுவதைப் போல பிரமனுடைய தலை, தரையில் மோதியது.  அவனுடைய நாவில் இருப்பவளான கலைமகளையும் மற்றவர்களையும், சம்ஹாரகால மூர்த்தியைப் போல மூக்கையும் மார்பையும் வீரபத்திரர் வாளால் கொய்தார்.

சுருக்க உரை

வடக்கேயுள்ள மேருமலையை ஆட்டியசைத்துப் பெயர்த்து, அது வருந்தும்படியாக அதை வில்லாக வளைத்து, வாசுகிப் பாம்பை அதற்கு நாணாகப் பூட்டி திரிபுரத்தை எரித்தவரும்; யமனுடைய கொட்டம் அடங்கும்படியாக அவனைக் காலால் உதைத்தவரும்; மன்மதனைத் தன் நெற்றிவிழியாலே எரித்தவரும்; தக்கயாகத்தின்போது அந்த யாகத்தை அழித்து, அந்த யாகத்தை நடத்திய தக்கனுடைய தலையை அறுத்து, அவனுக்கு ஆட்டின் தலையைப் பொருத்தி மீண்டும் உயிர்கொடுத்தவரும்; வேதவல்லியான கலைமகளுக்கும் காயம் ஏற்படும்படி வாட்டியவருமான உமாபதியின் பாலனே!  ‘வாழ்க அந்தணர்’ என்னும் திருப்பாசுரம் எழுதப்பட்ட ஓலைச் சீட்டை வைகையாற்றிலே, வெள்ளத்தை எதிர்த்து—எதிர்திசையில் சென்று—கரையேறுமாறு செய்தவரும்; பாசுரம் எழுதிய ஓலைச் சீட்டைத் தீயிலே இட்டபோதும் அது பசுமை மாறாமல் இருப்பதைச் செய்து காட்டியவரும்; வாதிலே தோற்ற சமணர் கழுவிலே ஏறுவதற்குக் காரணமாக இருந்தவருமான திருஞானசம்பந்தராக அவதரித்த குருநாதனே!  பரிசுத்தனே! தீர்த்தமலையில் வீற்றிருப்பவனே!  இந்திராணியின் குமாரியான தேவசேனைக்குத் தலைவனே! என் மனம் விருப்பத்தோடு உன்னை ஏத்தும்படி அடியேன்மீது திருவருளைப் பாலித்து, கடைக்கண் பார்த்தருள வேண்டும்.

என் மனமே! நீயோ பாடல்களில் உருகுவதில்லை; அவற்றின் பொருளைக் கூறுகையில் அதைக் கேட்டும் உருகுவதில்லை; ஒருநாள் யமன் வந்துதான் தீரப்போகிறான் என்ற அந்த வழியை நினைத்து—அஞ்சியேனும்—இறைவனை நினைத்து உருகுவதில்லை.  எத்தனையோ பாடுகளைப் பட்டபோதிலும் உண்மைகளை உணர்கிறாயில்லை. பாம்பை அணிந்துள்ள சிவபெருமான் நாள்தோறும் அருளுவதான வீடாகிய பதத்தை விரும்புகின்றாயில்லை; நாவின் நுனியாலும் இறைவனைப் போற்றுகின்றாயில்லை; எழுதிவைக்கப்பட்டுள்ள தலைவிதியின் போக்கை அறிகின்றாயில்லை; பாழ்பட்டதான இந்தப் பிறவிப்பிணியிலேயே சிக்கிக் கொள்கின்ற மனமே நீ நல்லவழியில் நடக்கின்றாயில்லை; வெறும்கூடான இந்த உடலின்மீது கொண்ட பற்றை விடுகின்றாயில்லை. இப்படியெல்லாம் நீ கிடக்கும் நிலையைச் சகிக்க முடியாமல் உனக்கு ஒன்று சொல்வேன், கேட்பாயாக.

முருகனை நீ போற்றிப் பாடித் துதித்தாயானால் அவன் உனக்கு வாக்கின் வலிமையும், உன்னிடத்திலே நல்ல நோக்கமும் ஏற்படும்படி அருள்வான்.  அடியார்க்கு எளியானான அவனை வாழ்த்துபவர்களுக்கு இருவினையும் கெடுமாறு செய்வான்.  அவனை நீ சிந்திப்பாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.