பதச் சேதம் | சொற் பொருள் |
பனி போலத் துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலை கீழாய்
| சலவாயுள்: ஜல வாய், நீர் போகும் வழி; பதின் மாதம்: பத்து மாதத்தில்; |
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய்
| படி: பூமி; மேவி: வந்து, பொருந்தி; தத்து அடி பயில்வார்: தளர்நடை பயின்று; உத்தி: பேச்சு; |
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதி கார சமன் வரு நாளில்
| குழி வீழ்வார்: காமக் குழியிலே வீழ்வார்; தத்துவார்: தள்ளாடுவார்; சமன்: யமன்; |
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ
| தறியார்: நிலைக்க முடியாதவராய்; இல்: வீடாகிய; சடம்: உடலை; |
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா
| வினைமாயக் கிரி: மாயவினையிலே—தொழிலிலே—வல்ல கிரெளஞ்ச பர்வதம்; விகடார்: செருக்கு நிறைந்த அசுரர்கள்; உக்கிட: அழிந்திட; |
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா
| விதியோன்: ஒவ்வொருவருடைய விதியையும் தீர்மானிப்போன், பிரமன்; சதுமுடி: நான்கு தலைகள்; நால்: நால, தொங்க; பொட்டெழ: தெறித்துவிடும்படி; |
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா
| நினைவோர்: நினைத்து தியானிப்பவர்கள்; சித்தமோடு: உள்ளத்திலிருந்து; அகலாமல்: விலகாமல்; புகும்: பொருந்தும்; நிழலாள்: ஒளியுடையாள்; பத்தினி: வள்ளி; |
நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே.
| நிதி: செல்வம், பொன்; புலியூர்: சிதம்பரம்; நிறைவே: பூரணமே; |

பனி போலத் துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலை கீழாய்ப் படி மேவிட்டு ... பனிபோன்ற வெண்மையான துளியொன்று, நீர் வெளியேறும் பாதைவழியாகச் சென்று, கருவாகிப் பத்து மாதங்களில் தலைகீழாகக் கருவிலிருந்து வெளிப்பட்டு,

உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய் ... ஒரு உடலை எடுத்து, தரையில் தவழ்ந்தும், தளர்நடையிட்டும் மழலை பேசியும் சில நாட்கள் கழிந்ததன் பின்னர்,

தன மாதர்க் குழி வீழ்வார் தத்துவர் ... மார்பகங்களை உடைய பெண் என்னும் காமக்குழியில் விழுந்து தள்ளாடுவார்கள்.

சதிகாரச் சமன் வரு நாளில் தறியார் இல் சடம் விடுவார்... சதிகாரனாகிய யமன் வரும்காலத்தில் அதற்குமேல் நிலைத்திருக்க முடியாதவர்களாக, தம்முடைய வீடாக விளங்கும் இந்த உடலை விடுவார்கள்.

இப்படி தளர் மாயத் துயர் ஒழியாதோ ... இந்தவகையிலே (தொடர்ந்து) தளர்ச்சியடைகின்ற மாயை நிறைந்ததான துயரம் நீங்கித் தொலையாதோ?

வினை மாயக் கிரி பொடியாகக் கடல் விகடார் உக்கிட விடும் வேலா ... மாயை என்னும் தொழிலிலே வல்லதாகிய கிரெளஞ்ச பர்வதம் பொடியாகும்படியும்; கடலில் இருப்பவர்களான செருக்கு நிறைந்த் அசுரர்கள் அழியும்படியும் வேலை விடுத்தவனே!

விதியோனைச் சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா ... பிரமனுடைய நான்கு முடிகளும் தொங்கிக் கவிழும்படியும் தெறித்துப் போகும்படியும் அழுந்தக் குட்டிய குருநாதா!

நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா ... நினைப்பவர்கள், தியானிப்பவர்களுடைய உள்ளங்களிலிருந்து அகலாமல் குடிபுகுந்திருப்பவளும், ஒளிவீசுபவளுமான வள்ளியம்மையின் மணவாளனே!

நிதியாம் இப்புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே. ... இந்தப் புவிக்குப் பொன்போல விளங்கும் புலியூரான சிதம்பரத்தில் நிறைவாக வீற்றிருப்பவனே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே!

சுருக்க உரை

மாயை புரிவதில் வல்லதான கிரெளஞ்ச மலையைத் தூளடிக்கும்படியும்; கடலில் உள்ள அசுரர்கள் மடியும்படியும் வேலை எறிந்தவனே! பிரமனுடைய நான்கு தலைகளும் தொங்கும்படியாகவும், தெறித்துப் போகும்படியும் அழுந்தக் குட்டிய குருநாதனே! எண்ணி தியானிப்பவர்களுடைய மனங்களில் நீங்காமல் குடிபுகுபவளான வள்ளியின் மணாளனே! இந்த பூமிக்கே ஒரு செல்வம் போல விளங்கும் சிதம்பரத்தில் நிறைவாக வீற்றிருப்பவனே!

மனிதர்கள் ஒற்றைச்சிறு பனித்திவலையாய் நீர் வெளியேறும் பாதையில் விழுந்து கர்ப்பப்பையை அடைந்து, கருவாகி, பத்து மாதத்தில் உடல்பெற்று, பூமியில் தலைகீழாக விழுந்து, தவழ்ந்து, தத்தி நடந்து, மழலைபேசி, வளர்ந்து, காமத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைச் செலவிட்டு, சதிகாரனாகிய யமன்வரும் நாளில் அதற்குமேல் வாழமுடியாதவர்களாக தாம் குடியிருக்கும் வீடாகிய உடலை விட்டு நீங்குவார்கள். (இப்படி மறுபடி மறுபடிப் பிறந்திறக்கும்) மாயமான துன்பமானது எம்மை விட்டு விலகாதோ! (இனிப் பிறவாமையும், பிறந்த இப்பிறவியில் உனை மறவாமையும் தந்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை