ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 322

இது திருச்செந்தூர் தலத்துக்கான பாடல்.  ‘மனக் கவலை கொண்டு அறிவு மயங்கும் என்னை அன்புடன் ஆண்டருள்வாள்’ என்று வேண்டுகிறது. 

Updated On :3 ஆகஸ்ட் 2016, 12:34 pm

இது திருச்செந்தூர் தலத்துக்கான பாடல்.  ‘மனக் கவலை கொண்டு அறிவு மயங்கும் என்னை அன்புடன் ஆண்டருள்வாள்’ என்று வேண்டுகிறது. 

அமைப்பு முறையிலே மிக எளிமையானது என்றாலும் இந்தப் பாடலிலே அடிக்கு ஒற்றொழித்து முப்பத்திரண்டு எழுத்துகளும், 15, 16, 31, 32 ஆகிய எழுத்துகள் மட்டுமே நெடிலாகவும் மற்ற அனைத்து எழுத்துகளும் குறிலாகவும் அமைந்துள்ளன.  (ஒற்று உட்பட) 10, 14, 26, 30 ஆகிய எழுத்துகள் மெல்லின மெய்; 12, 16, 28, 32 ஆகிய எழுத்துகள் வல்லின மெய்.  கடைசியாகப் பயிலும் தொங்கல் சீரை விட்டுவிட்டால் மற்ற எந்த இடத்திலும் இடையின மெய் பயிலவே இல்லை என்பதைப் பார்க்கலாம்.  (இதைத்தான் மிக எளிய அமைப்பு என்கிறோம்!)  பாடலைப் பார்ப்போம்.

தனதன தனதன தந்தத் தந்தத்                   தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத்              தனதானா

பரிமள களபசு கந்தச் சந்தத்                      தனமானார்
      படையம படையென அந்திக் குங்கட்       கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற்           குழலாலே
      மறுகிடு மருளனை யின்புற் றன்புற்        றருள்வாயே
அரிதிரு மருகக டம்பத் தொங்கற்                றிருமார்பா
      அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் தெறிவேலா
திரிபுர தகனமு வந்திக் குஞ்சற்                  குருநாதா
      ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப்        பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/276630185&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.