ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 334

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ்.  ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி

Updated On :15 ஆகஸ்ட் 2016, 6:30 pm

இது பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த திருப்புகழ்.  ‘சும்மா இரு சொல்லற’ என்ற வாக்கின்படி ‘சும்மா இருக்கும் மௌன ஞான நிலையில் வாழும்படியான பாக்கிய வகையை உனது திருவடிகள் (எனக்கு) அருளாதோ’ என்று சிவயோகத்தைக் கூடும் பேற்றைக் கேட்கிறது. 

அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள்; ஒற்றொழித்து 1, 4//8. 11//15. 18 ஆகிய எழுத்துகள் நெடில்.  தொங்கல் சீரில் 24, 25 ஆகி இரண்டெழுத்துகளும் நெடிலாக இருக்கலாம் அல்லது 24ம் எழுத்து மட்டுமே நெடிலாக இருக்கலாம்.  ஒற்றையும் சேர்த்து 2, 9, 16 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று.  இந்தப் பாடலில் வல்லொற்று கிடையாது.

தாந்தன தானதன தாந்தன தானதன

      தாந்தன தானதன                   தனதான

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக

         தாண்டவ மாடியவர்              வடிவான

      சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்

         தாங்களு ஞானமுற              வடியேனுந்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு

         தோன்றிய சோதியொடு          சிவயோகந்

      தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு

         சோம்பினில் வாழும்வகை        அருளாதோ

வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்

         வான்பொழில் சூழும்வய         லயலேறி

      மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்

         மாந்திய வாரணிய               மலைமீதிற்

பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி

         பூண்பன பாரியன                 தனபாரப்

      பூங்குற மாதினுட னாங்குற வாடியிருள்

         பூம்பொழில் மேவிவளர்          பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.