ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 336

கடலினிடத்திலே செலுத்தப்படுகிற, உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பச்சை வண்ணக் குதிரைகளால் இழுக்கப்படும்

Updated On :17 ஆகஸ்ட் 2016, 6:30 pm

‘உததியிடை கடவுமர கதவருண குலதுரக உபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயம்’ என்று இறைவனுடைய திருப்பாதத்தை ‘சீர்பாத வகுப்’பில் வருணித்தார்.  ‘கடலினிடத்திலே செலுத்தப்படுகிற, உயர்ந்த இனத்தைச் சேர்ந்த பச்சை வண்ணக் குதிரைகளால் இழுக்கப்படும் பொன்மயமான தேரிலே நூறுகோடி சூரியர்கள் ஒரே சமயத்தில் உதித்தைப்போல்’ என்று பொருள். 

குறிப்பிட்ட தலத்துக்கென்றில்லாத பொதுப்பாடல்கள் வரிசையில் வரும் இந்தப் பாடலிலோ, ‘பலகோடி வெண்ணிலவுகளின் திரண்ட ஒளி ஒன்றாக எழுந்ததைப்போல் எழுந்தருள வேண்டும்’ என வேண்டுகிறார்.  முருகனைத் தமிழ்க் கடவுள் என்று பல பாடல்களில் வலியுறுத்துவதைப் போலவே இந்தப் பாடலிலும் செய்திருக்கிறார்.  பொதுவாக ‘தேவர் பெருமாளே, அமரர் பெருமாளே’ என்றெல்லாம் முடியும் இறுதிச் சீர்கள் இதில் ‘தமிழ் பெருமாளே’ என்று முடிகின்றன.

மற்ற பாடல்களைப்போல ஒவ்வோரடியின் முடிவிலும் சற்று நிறுத்தி, மடக்கடியைத் (மடக்கிய அடி.  உதாரணத்துக்கு இப்பாடலில் ‘வடிவாயுடல் நடமாடுக முடியாதேன்’ என்பது முதல் மடக்கடி) தனியாகத் தொடர்வது போலில்லாமல், மடக்கடியையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும்.  அந்த வகையில் இது சற்றே நீளமான தாள அமைப்பு.  (இதைவிட மிக நீளமான தாள அமைப்புக் கொண்ட பாடல்கள் இருக்கின்றன.)  இப்பாடலில் அடிக்கு 34 எழுத்துகள்.  இடையின மெய்களை ஒழித்து, வல்லின மெல்லின மெய்கள் எதுவும் இல்லாத பாடல்.  ஒவ்வொரு சீரிலும் மூன்றாவது எழுத்து நெடில்.  பாடலைப் பார்ப்போம்.

தனதானன தனதானன தனதானன தனதானன 

      தனதானன தனதானன              தனதான

மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்

         வடிவாயுடல் நடமாடுக           முடியாதேன்

      மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை

         மகிழ்ஞானக அநுபூதியி           னருள்மேவிப்

பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ

         பரிபூரண கிருபாகர               முடன்ஞான

      பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை  யடிமேல்விட

         பலகோடிவெண் மதிபோலவெ    வருவாயே

சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு

         சசிசூரியர் சுடராமென            வொருகோடிச்

      சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக

         சதிநாடக மருள்வேணிய          னருள்பாலா

விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி

         வெகுமாலுற தனமேலணை      முருகோனே

      வெளியாசையொ டடைபூவளர் மருகாமணி

         வெயில்வீசிய அழகாதமிழ்        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.