பிறவிப் பிணியற என்று பல பாடல்கள் வேண்டுகின்றன. இந்தத் திருத்தணித் திருப்புகழோ, பிணியான பிறவியில் ஏற்படும் பல வரிசைவரிசையான நோய்களைப் பட்டியலிட்டு இத்தனை நோய்களும் எத்தனைப் பிறவியெடுத்தாலும் பாதிக்காதபடி இறையருளைக் கோருகிறது. ‘நோய்தீர்க்கும் திருமந்திரம்’ என்ற சிறப்பைப் பெற்ற இந்தப் பாடல் நித்திய பாராயணத்துக்குரியது என்று உரையாசிரியர் குகத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்.
பாடலின் அமைப்பு முறையில் ஒவ்வோரடிக்கும் ஒற்றொழித்து 22 எழுத்துகள்; தொங்கல் சீரை விட்டுவிட்டு, ஒற்று சேர்த்து ஒவ்வொரு 5, 11, 17 ஆகிய எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்தும் குறில். அவ்வப்போது இடம்பெறும் இடையின ஒற்றுகளைத் தவிர்த்து, வல்லொற்றோ மெல்லொற்றோ அமையாத பாடல். நீரிழிவு—சர்க்கரை வியாதி, விடாத தலைவலி (hyper-tension உட்பட பல நோய்களின் அறிகுறி), கழுத்தைச் சுற்றி தைராய்டு பிரச்சினையால் ஏற்படும் goiter முதலான பலவகையான நோய்களிலிருந்து பாதுகாப்பும் குணமும் பெற முருகனைத் துதிக்க ஏற்ற பாடல். மனப்பாடமாகவே செய்து பாராயணம் செய்வது நல்லது.
தனதன தான தனதன தான
தனதன தான தனதான
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

