ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 344

திருத்தணித் தலத்துக்கான இப்பாடலிலும் பலநோய்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்படுகின்றன. 

Updated On :25 ஆகஸ்ட் 2016, 6:30 pm


திருத்தணித் தலத்துக்கான இப்பாடலிலும் பலநோய்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.  ‘இருமலு ரோக முயலகன் வாத’ பாடலில் நோய் நீக்கமே முதன்மை பெறுகிறது.  இப்பாடலில் ‘இத்தனை நோய்களால் நான் வருந்தி அழியாமல்’ காக்க வேண்டும் என்று கோரினாலும் இது முக்தி பெறுவதை முதன்மையாகக் கோரும் பாடல்.
அடிக்கு 28 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டும் நெடிலெழுத்து இடம்பெறுகிறது.  மற்ற அனைத்தும் குறில்.  ஒற்று உட்பட 5, 13, 21 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று; 8, 16, 24 ஆகிய எழுத்துகள் வல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.
தனன தந்த தத்த தனன தந்த தத்த
      தனன தந்த தத்த                    தனதான

எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
         மெரிவ ழங்கு வெப்பு             வலிபேசா
      இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
         டிரும லென்று ரைக்கு            மிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
         மதிம யங்கி விட்டு              மடியாதே
      மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
         மயிலில் வந்து முத்தி            தரவேணும்
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
         நெறியில் நின்ற வெற்றி          முனைவேலா
      நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
         நெடிய குன்றில் நிற்கு            முருகோனே
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
         செயல றிந்த ணைக்கு            மணிமார்பா
      திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
         சிறைதி றந்து விட்ட             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.