திருச்சிராப்பள்ளி, திரிசிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, திருச்சி என்றெல்லாம் அறியப்படும் தலத்துக்கான பாடல் இது. ஈடேறும் வழியைக் காணாமல் அலைந்து திரியாமல் அடியேனைக் காத்தருளவேண்டும் என்று கோரும் பாடல்.
சந்த அமைப்பில் சற்று வேகமான நடையையுடையது. ஒற்றொழித்து அடிக்கு 24 எழுத்துகள்; மடக்கடியின் 13ம் எழுத்து தொடங்கி, (தொங்கல்சீர் நீங்கலாக) அனைத்து எழுத்துகளும் நெடில்; ஒற்று சேர்த்து 5, 12 ஆகிய எழுத்துகள் வல்லொற்று (‘வாய்க்கனி’ என்பதை ஒத்தய சீர்களில் இடையின ஒற்று கணக்கிலில்லை); முதல் சீரும் மூன்றாம் சீரும் எதுகையமைப்பு; மடக்கடியின் அனைத்து சீர்களின் பெரும்பான்மையும் எதுகையமைப்பை உடையவை. திருப்புகழ் சந்தத்தின் சிக்கலான அமைப்புகளில் ஒன்று இது. பாடிக் கேட்டாலும், செய்யுளாகச் சொல்லிக் கேட்டாலும் வேகமான நடையை உணரவைத்து மயக்கும் பாடல்.
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா தனதானா
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா யவரோடே
உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே யுழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவா மூவா மேவா நீவா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

