| பதச் சேதம் | சொற் பொருள் |
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய
| விறல்: வீரம், வெற்றி இரண்டு பொருள்; இந்து: சந்திரன்; |
மித வாடை வந்து தழல் போல ஒன்ற வினை மாதர் தம் தம் வசை கூற
| மிதவாடை: மிதமான காற்று—தென்றல்; வினை மாதர்: பணிப்பெண்கள், சேடிப் பெண்கள்; வசைகூற: கேலி பேச; |
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர
| மயல்: மயக்கம்; மையல்; |
குளிர் மாலையின் கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ
| குளிர்மாலை: குளிர்ச்சி பொருந்திய மாலை நேரத்தில்; அணிமாலை: அணிந்துள்ள மாலை; |
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
| மறிமான்: மான்குட்டி; உகந்த இறையோன்: சிவன்; மதியாளா: அறிஞனே; |
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடிவேல் எறிந்த அதி தீரா
| மலை: கிரெளஞ்ச மலை; மாவும்: மாமரமாக நின்ற சூரனும்; வேலை: கடல்; |
அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே

அழகான செம் பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே.

விறல்மாரன் ... வெற்றியையே உடையவனான மன்மதன்,

ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்க் கணைகளை எய்ய;

மிக வானி லிந்து வெயில் காய ... வானில் இந்து மிகவும் வெயில்காய—வானத்திலே நிலவு சூரியனைப்போல சுட்டெரிக்க;

மிதவாடை வந்து தழல்போல வொன்ற ...தென்றலானது மென்மையாக வந்து அனல்போல வீசியபடி மேனியோடு பொருந்த;

வினைமாதர் தந்தம் வசைகூற ... வினைகளைச் செய்ய அமர்த்தப்பட்டுள்ள பணிப்பெண்கள்—சேடிப்பெண்கள்—அவரவருக்குத் தோன்றிய விதமாக கேலி பேச;

குறவாணர் குன்றி லுறை பேதை கொண்ட ...குறவர்கள் வாழ்கின்ற குன்றத்தில் இருப்பவளான பேதைப் பெண்(ணாகிய நான்) அடைந்த—

கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்பத்தைத் தரும் மையல் நோயைத் தீர்க்கும்படியாக

(ஐம்புலன்களாகிய வேடர்கள்; கர்மங்களாகிய மலை; இப்படிப்பட்ட மலையில் உறையும் ஜீவ ஆன்மா பரமான்மா மேலே கொண்ட மையல் நோய்—வாரியார் சுவாமிகளுடைய விளக்கம்)

குளிர் மாலையின் கண் ... குளிர்ந்ததாகிய (இந்த) மாலைப் பொழுதிலே (கண்: ஏழாம் வேற்றுமை)

அணிமாலை தந்து ... நீ அணிந்திருப்பதான கடப்ப மாலையைத் தந்து

குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்ப்பதற்காக என்னை அணுகி வர மாட்டாயோ?

மறிமா னுகந்த இறையோன் ... மான்குட்டியைத் திருக்கரத்திலே ஏந்தியிருக்கும் சிவன்

(தாருகா வனத்து இருடியர் அனுப்பிய மானை ஈசன் கரத்தில் ஏந்தியுள்ளான்)

மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன்னிடம் உபதேசத்தைப் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்தவனான அறிஞனே

மலைமாவு சிந்த ... (மலையும் மாவும் சிந்த) கிரெளஞ்ச மலையும், மாமரமாக நின்ற சூரபத்மனும் விழுந்துபடும்படியாகவும்;

அலைவேலை யஞ்ச ... (வற்ற அடித்த சமயத்திலே) அலைகடலானது கொந்தளிந்து நடுங்கவும்;

வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசினவனான அதி தீரனே,

அறிவால் அறிந்து ... தன் அறிவைக் கொண்டு உன்னை அறிந்துகொண்டு,

(பாச அறிவும் பசு அறிவும் நீங்கிய மெய்யறிவு—வாரியார் சுவாமிகளுடைய விளக்கம்)

உன்னிருதாள் இறைஞ்சும் ... உன்னுடைய இரண்டு பாதங்களையும் தொழுகின்ற

அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியவர்களுடைய துயரங்களை நீக்குபவனே!

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே... அழகிய செம்பொன் மயில்மேல் அமர்ந்தபடி திருச்செந்தூரை உகந்து வந்து வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

மான்குட்டியைக் கரத்தில் ஏந்தும் சிவபெருமான், உன்னிடத்திலே உபதேசம் பெற்று உன்னை வழிபாடு செய்பவனான அறிஞனே! கிரெளஞ்ச மலையையும் மாமரமாக நின்ற சூரனையும் அழிக்கும்படி வேல் விடுத்த தீரனே! தம்முடைய அறிவாலே உன்னை அறிந்துகொண்டு உன்னுடைய இரண்டு பாதங்களையும் தொழுபவர்களான அன்பர்களுடைய துன்பங்களைக் களைபவனே! அழகிய மயில்மேல் அமர்ந்து, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிக்கும் பெருமாளே!

வெற்றியையே உடையவனான மன்மதன் ஐந்து மலர்க் கணைகளை எய்யவும்; வானத்திலே நிலாவானது சூரியனைப் போலே சுட்டெரிக்கவும்; தென்றல் காற்று வந்து தீண்டுகையில் அது தீப்பிழம்பாக எரிக்கவும்; (இந்த மயக்க நிலையைப் பார்த்து) சேடிப்பெண்கள் கேலிமொழிகளைப் பேசவும், குறவர்கள் வாழும் குன்றத்தில், உன்மீது அடைந்த மையலாலே வாடுபவளான (இந்த வள்ளியைப் போன்றவளான) நான் கொண்டிருக்கும் மயக்கத்தைத் தணிக்குமாறு வந்து என்னை அணுகி, எனக்கு உன் மார்பில் அணிவதான கடப்ப மாலையைத் தந்தருள வேண்டும்.

(வள்ளியை முன்னிட்டுப் பாடுவதாக அமைந்திருந்தாலும், இந்த வள்ளி, சீவான்மா என்ற வாரியார் சுவாமிகளுடைய விளக்கம் அழகுறப் பொருந்துவதைக் காண்க..)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை