இன்று நாம் பார்ப்பது திருத்தணிகைத் திருப்புகழ். ‘நெற்றிக் கண்ணின் நெருப்பாலே காமனைச் சுட்டெரித்த பரமன் மனத்திலே நினைத்து—தியானித்த—கழல்வீரனாக முருகனை இப்பாட்டிலே பாடுகிறார். நேற்றைய பாடலைப் போலவே இதுவும் அகத்துறைப் பாடல். இதிலும் தோழியருடைய கேலிமொழியும், அனலாய் எரிக்கும் நிலவும் தொடர்கின்றன. ஒரு வேறுபாடு. ‘விறல் மாரன் ஐந்து மலர்வாளி சிந்த’ என்று முந்தைய பாடல், மன்மதனை வெற்றிவீரனாகச் சித்திரித்தது. இந்தப் பாடலும், ‘வெற்றிசெய உற்ற கழைவில்’ என்று மன்மதனுடைய வில்லின் பெருமையைச் சொல்லியபடி தொடங்குகிறது. ஆனான் மூன்றாமடியிலேயே—நெற்றிவிழி பட்டெரிய—‘வெற்றியைத் தரும் வில்லை ஏந்தியவனான’ மன்மதன் நெற்றிக்கண்ணால் நீறுபட்டு வீழ்கிறான். ‘மான், அயன், இந்திரன், சந்திரன், தேவர் முதலானோரைத் தன் வில்லினால் வென்றவன்’ எனச் சொல்லி, ‘கரும்பும் சுரும்பும் அரும்பும் கொண்டு காமர் வில்வேள் இரும்பும் உருகச் செய்வான்’ என்ற மேற்கோளையும் தருகிறார் வாரியார் சுவாமிகள்.
இப்பாடலும் பரமான்மாவை நாடும் ஜீவான்மா, அதன்மீது கொண்ட காதலால் வாடுவதை நாயகி பாவத்தில் பாடுகிறது.
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
விட்டகணை பட்ட விசையாலே
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
ரித்தொளிப ரப்பு மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
பட்டதிகி ரிக்கு மழியாதே
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
பச்சைமயி லுற்று வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
னைக்குமன மொத்த கழல்வீரா
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
நித்தமிறு கத்த ழுவுமார்பா
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
எப்பொழுது நிற்கு முருகோனே
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட பெருமாளே.
</p><p align="justify"> </p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/244853930&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
திரைக்கதிர்
சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

