சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 141

நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும்; திருநடனம் புரிபவருமான சிவபிரானாகிய பெரியோன் உன்னைத் தியானிக்க, அவருடைய மனத்திலே பொருந்தி விளங்குவதான திருவடிகளைக் கொண்ட வீரனே!

Updated On :4 பிப்ரவரி 2016, 9:53 am

பதச் சேதம்

சொற் பொருள்

வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே செய: செய்ய; உற்ற: அமைந்த; கழை: கரும்பு; குதை: வில்லின் மையப் பகுதி, அம்பைப் பொருத்திக் கையால் பற்றும் இடம்; விசையால்: வேகத்தால்;
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே வட்ட பணை: வட்டமாக உள்ள பறை வாத்தியம்;
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே தத்தையர்: கிளிபோலப் பேசும் பெண்கள்; திகிரி: மூங்கில், புல்லாங்குழல்;
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வர வேணும்
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா மனமொத்த: மனத்தில் பொருந்திய;
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சை உற நித்தம் இறுக தழுவும் மார்பா நெய்: (இந்த இடத்தில்) தேன்;  குறவி: குறத்தி;
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே எற்றிய: மோதுகிற; சலதி: கடல்;
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்டு அசுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே. அசலம்: மலை; எட்ட: எட்டும்படியாக; நிலம் முட்ட: பூமி முழுவதும்; முடிநெட்டு: முடியை நட்டு, நாட்டி—அரசாட்சியை நிலைநிறுத்தி;

வெற்றி செயவுற்ற கழை விற்குதை வளைத்து ... வெற்றியையே தரவல்லதாக அமைந்துள்ள கரும்பு வில்லின் குதை(யில் அம்பைப் பொருத்தி, வில்லை) வளைத்து,

மதன் விட்டகணை பட்ட விசையாலே ... மன்மதன் எய்த மலர்க்களைகள் வந்து மேனியெல்லாம் தைத்த வேகத்தாலும்;

வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில் ... வெட்டவெளியான ஆகாயத்திலும், தெருக்களிலும் (ஒன்றே போல) வட்டமாக இருக்கும் பறை வாத்தியத்தைப் போலே விளங்கி,

கனல்விரித்தொளி பரப்பு மதியாலே ... (நிலா என்ற பேரில்) நெருப்பைப் பரப்பி விரிக்கின்ற சந்திரனாலும்;

பற்றி வசை கற்றபல தத்தையர் தமக்கும் ... கேலிப் பேச்சுகளை விடாமல் பற்றிக் கொள்வதைக் கற்றவர்களான மற்ற பெண்களுடைய பேச்சுகளாலும்;

இசை பட்ட திகிரிக்கும் அழியாதே ... இசையை எழுப்புகின்ற புல்லாங்குழலின் (வசீகரமான இசையாலும் நான்) அழிந்துபடாமல் —மெலிவுறாமல்;

பத்தியை யெனக்கருளி முத்தியை யளித்து ... எனக்கு பக்தி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்காகவும் (அதன்மூலமாக அடையும்) முக்தியையும் கொடுப்பதற்காகவும்

வளர் பச்சைமயிலுற்று வரவேணும் ... உயர்ந்த பச்சை மயில் மீது நீ அமர்ந்தபடி வரவேண்டும்.

நெற்றிவிழி பட்டெரிய ... நெற்றியிலுள்ள விழியாலே (மன்மதன்) தீப்பட்டு எரிந்து போக;

நட்டமிடும் உத்தமர் நினைக்குமனமொத்த கழல்வீரா ... நடனம் செய்கின்ற சிவபெருமான் — உன்னை தியானிக்கவும் அவருடைய —மனத்தில் பொருந்தி நிற்கும் திருவடிகளைக் கொண்ட வீரனே!

நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற ... தேன் ததும்புகின்ற தாமரை மொக்குகளைப் போன்ற மார்பகங்களை உடையவளும்; மெய்மை நிலையில் அமைந்தவளுமான குறத்தி வள்ளி - அன்புகொண்டு

நித்தம் இறுகத் தழுவு மார்பா ... தினந்தோறும் இறுகக் கட்டி அணைக்கின்ற மார்பனே!

எற்றியதிருச்சலதி சுற்றிய திருத்தணியில் ... அலை மோதுவதான கடல் சூழ்ந்து கொண்டிருக்கும் (உலகத்திலுள்ள) திருத்தணியிலே

எப்பொழுது நிற்கு முருகோனே ... எப்போதும் வீற்றிருக்கின்ற முருகப் பெருமானே!

எட்டு அசலம் எட்ட நிலமுட்டமுடி நெட்டு அசுரர் ... எட்டு குலபர்வதங்களை எட்டும்படியா (பூமியின் எட்டு திசை விளிம்புகளையும் எட்டும்படியாக) நிலம் முழுக்க, தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள்,

இட்டசிறை விட்ட பெருமாளே. ... அடைத்து வைத்திருந்த சிறையிலிருந்து தேவர்களை மீட்ட பெருமாளே

சுருக்க உரை

நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும்; திருநடனம் புரிபவருமான சிவபிரானாகிய பெரியோன் உன்னைத் தியானிக்க, அவருடைய மனத்திலே பொருந்தி விளங்குவதான திருவடிகளைக் கொண்ட வீரனே!  தேன் நிறைந்த தாமரை மொக்குகளைப் போன்ற மார்பகங்களை உடையவளும், உண்மை நிலை தவறாதவளுமான குறப்பெண் வள்ளி, உன்பால் கொண்ட அன்பால் நாள்தோறும் இறுகத் தழுவிக் கொள்ளும் மார்பை உடையவனே!  நிலம் முழுவதும் ஆட்சி செலுத்திய அசுரர்கள் வைத்த சிறையிலிருந்து தேவர்களை மீட்ட பெருமாளே!

வெற்றியைத் தருவதற்காக என்றே அமைந்திருக்கின்ற கரும்பு வில்லை வளைத்து மன்மதன் எய்த மலர்க்கணைகள் மேனியெல்லாம் தைத்த வேகத்தாலும்; வானவெளியிலும், இதோ இந்த தெருவிலும் ஒன்றுபோல, நிலா என்ற பெயரால் நெருப்பை வாரி இறைக்கின்ற, வட்டமான பறையைப் போன்ற சந்திரனாலும்; பெண்கள் பேசும் கேலிப் பேச்சாலும்; இன்னிசையை எழுப்பி (மனத்தில் தாபத்தை உண்டாக்குதான) புல்லாங்குழலின் இசையாலும் நான் மெலிந்து நலிவுற்றிடாமல், பக்திநெறியைக் காட்டியருளி (அதன் மூலமாக அடையும்) முக்தியைத் தந்து எனக்கு உதவுவதற்காக பச்சை மயில்மேல் ஏறி வரவேண்டும் ஐயனே.

வெற்றிசெய உற்றகழையை உடைய மன்மதன் என்று தொடங்கி, அவனை எரித்த நடராசரையும் சொல்லியிருக்கும் நயமும், வள்ளி உன்னை இறுகத் தழுவிக் கொள்வது போலே நானும் தழுவும்படியாக என்னெதிரில் மயிலேறி தோன்றியருள வேண்டும் என்று வைத்துள்ள குறிப்பும் அனுபவிக்கத் தக்கன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.