சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 142

விநாயகமலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள முருகன் மேல் பாடப்பட்டுள்ள ஒரே திருப்புகழ் இது.  நாமறிந்துள்ள பிள்ளையார்பட்டிதான் இத்தலம் என்று தோன்றினாலும்,

Updated On :4 பிப்ரவரி 2016, 9:58 am

விநாயகமலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள முருகன் மேல் பாடப்பட்டுள்ள ஒரே திருப்புகழ் இது.  நாமறிந்துள்ள பிள்ளையார்பட்டிதான் இத்தலம் என்று தோன்றினாலும், கதிர்காமத்திலும் ஒரு விநாயகமலை இருப்பதாகத் தெரிகிறது என்று தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை குறிப்பெழுதுகிறார். 

சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் வெளியிட்டுள்ள பதிப்பில், “விநாயகமலை: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்பெறும் இத்தலம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கிலோ மீட்டரில் உள்ளது.

வாடாமலர் மங்கையுடன் மருதீசர் அருள்பாலிக்கிறார்.  கற்பகவிநாயகர் வடக்கு நோக்கி இரண்டு கரங்களுடன், வலதுகையில் சிறிய லிங்கத்தைக் கொண்டுள்ளார்.  குடவரைக் கோயில்.  இத்தலத்துக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திவீங்கைக்குடி, கணேசபுரி என்றும் பெயர்கள் உண்டு.  அருணகிரியார் போற்றும் விநாயகமலையாக இதனைக் கருதலாம் என்னும் குறிப்பு இருக்கிறது.

‘நாதபிந்து கலாதி’ பாடலைப் போலவே இதிலும் ‘நமோநம’ கோஷம் ஓங்கியொலித்தாலும் இரண்டும் வேறுவேறு சந்த அமைப்பை உடையவை. 

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
       தனதன தானா தனாதன - தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
  சததள பாதா நமோநம - அபிராம

தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
  சமதள வூரா நமோநம - ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
  பரிமள நீபா நமோநம - உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
  பவுருஷ சீலா நமோநம - அருள்தாராய்

இரவியு மாகாச பூமகியும் விரவிய தூளேற வானவ
  ரெவர்களு மீடேற ஏழ்கடல் - முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
  ரிகல்கெட மாவேக நீடயில் - விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
  வசுவெனு மாகார ஈசனு - மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
  வனசர ராதார மாகிய - பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/245384417&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.