சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 143

போரிலே எழுந்த புழுதியானது சூரிய மண்டலத்துக்கும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஏறிக் கலந்து படரும்படியும்; தேவர்கள் உய்வடையும்படியும்;

Updated On :4 பிப்ரவரி 2016, 9:59 am

பதச் சேதம்

சொற் பொருள்

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சத தள பாதா நமோநம அபிராம சரவண: சரவணமாகிய நாணல் பொய்கையில்; ஜாதா: உதித்தவனே; நமோநம: போற்றி போற்றி; கருணை அதீதா: அளவற்ற கருணை உடையவனே; (அதீதம்: மேம்பட்டது, எட்டாதது; அளவற்றது); சததள பாதா: நூறு இதழ்களைக் கொண்ட தாமரைப் பாதனே; அபிராம: அழகனே;
தருண கதீரா நமோநம நிருப அமர் வீரா நமோநம சம(ம்) தள ஊரா நமோநம ஜகதீச தருண: இளைய; கதீரா: கதிரொளியை உடையவனே; நிருப: வேந்தன், தலைவன்; சமம்: போர்; சமதள: போர்க்களத்துக்கான; ஊரா: போரூரில் வீற்றிருப்பவனே; ஜகதீச: உலகுக்கு ஈசனே;
பரம சொரூபா நமோநம சுரர் பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம உமை காளி பரமசொரூபா: பரம ஞானத்தின் வடிவினனே; சுரர்பதி: இந்திரன்; பூபன்: அரசன்; பரிமள: நறுமண; நீபா: நீபத்தை (கடப்ப மாலையை) அணிந்தவனே
பகவதி பாலா நமோநம இக பர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம அருள் தாராய் பவுருஷ: பௌருஷ, ஆண்மையின்; சீலா: பரிசுத்தனே;
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று விரவிய: படர்ந்த, கலந்த; தூள்: புழுதி; ஈடேற: உய்வடைய;
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே பூதரம்: மலை (இமயம், மேரு என்றும் பொருளுண்டு); நிசாசரர்: இரவில் உலவுபவர், அரக்கர்; இகல்: வலிமை; மாவேக: அதிக வேகத்துடன்; நீடு; நெடிய; அயில்: வேல்;
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண ஆகார(ம்): உருவம் (இன்னொரு பொருள்); ஆயன்: இடையனாக அவதரித்த கண்ணன், திருமால்; இரணிய(ம்): பொன்; வேதன்: பிரமன்; வசு: அக்கினி;
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே. மயிலுறை: மயிலில் வீற்றுள்ள; மகீதர: மஹி: பூமி, மலை; மகீதரன்: மலைக்கு உரியவர்களான; வனசரர்: வனத்தில் திரிபவர், வேடர்.

சரவண ஜாதா நமோநம ... நாணல் பொய்கையிலே உதித்தவனே போற்றி போற்றி!

கருணை அதீதா நமோநம ... அளவற்ற கருணை உடையவனே போற்றி போற்றி!

சததள பாதா நமோநம ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்ற பாதங்களை உடையவனே போற்றி போற்றி!

அபிராம ... பேரழகனே!

தருண கதீரா நமோநம ... இளைய ஜோதி சொரூபனே போற்றி போற்றி!

நிருப அமர் வீரா நமோநம ... (தேவர்களுடைய) தலைமைச் சேனாதிபதியாக விளங்கும் வீரனே போற்றி போற்றி

சமதள வூரா நமோநம ... சமர்தள—போர்க்களத்துக்கு உரிய—(சேனைகள் நிறைந்த) திருப்போரூரில் கொலுவீற்றிருப்பவனே போற்றி போற்றி

ஜகதீச ... எல்லா உலகங்களுக்கும் ஈசனே!

பரம சொரூபா நமோநம ... முழுமையான ஞானத்தின் வடிவமே போற்றி போற்றி!

சுரர்பதி பூபா நமோநம ... தேவர் தலைவனான இந்திரனுக்கும் அரசனே போற்றி போற்றி!

பரிமள நீபா நமோநம ... நறுமணம் கமழும் கடப்ப மாலையை அணிந்தவனே போற்றி போற்றி!

உமைகாளி பகவதி பாலா நமோநம ... உமையென்றும் காளியென்றும் பகவதியென்றும் ஓதப்படும் பார்வதி தேவியின் மகனே போற்றி போற்றி!

இகபர மூலா நமோநம ... இம்மை மறுமைகளுக்கு மூல காரணனே போற்றி போற்றி!

பவுருஷ சீலா நமோநம ... ஆண்மையின் குணநலன்கள் நிறைந்தவனே போற்றி போற்றி!

அருள்தாராய் ... உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற ... சூரிய மண்டலத்திலும் ஆகாயத்திலும் பூமியிலும் (போரின்போது எழும்) புழுதி படர்ந்து, மேலே ஏற;

வானவர் எவர்களும் ஈடேற ... தேவர்கள் எல்லோரும் உய்வடையும்படியும்;

ஏழ்கடல் முறையோவென்று இடர்பட ... ஏழு கடல்களும் ‘இது முறையோ’ என்று கதறித் துன்பம் அடையுமாறும்;

மாமேரு பூதர மிடிபடவேதான் ... மிகப்பெரிய மேரு மலையானது இடிபட்டுத் தூளாகும்படியும்;

நிசாசரர் இகல்கெட ... இரவில் திரிபவர்களான அசுரர்களுடைய வலிமை அழியும்படியும்;

மாவேக நீ(டு) அயில் விடுவோனே ... வெகுவேகம் கொண்டதும், நெடியதுமான வேலை வீசியவனே!

மரகத ஆகார ஆயனும் ... மரகதப் பச்சை வடிவினனும், இடையனாக அவதரித்தவனான திருமாலும்,

இரணிய ஆகார வேதனும் ... பொன்னிற வடிவத்தைக் கொண்ட பிரமனும்,

வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண ... அக்கினியின் நிறத்தில் வடிவம் கொண்ட பரமசிவனும் உன் திருவடியைப் போற்றும்

மயிலுறை வாழ்வே ... மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் இறைவனே!

விநாயக மலையுறை வேலா ... விநாயக மலை எனப்படும் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளியுள்ள வேலனே!

மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே. ... மலைகளில் வாழும் வேடர்களுக்கு ஆதாரமாக விளங்கும் பெருமாளே!

சுருக்க உரை

போரிலே எழுந்த புழுதியானது சூரிய மண்டலத்துக்கும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஏறிக் கலந்து படரும்படியும்; தேவர்கள் உய்வடையும்படியும்; ஏழு கடலும் (வேல் வருகின்ற வேகத்தால் ஏற்படும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல்) ‘இது முறையோ’ என்று கதறும்படியும்; மேருமலை பொடிபட்டுத் தூளாகும்படியும் வேகம் நிறைந்த வேலைச் செலுத்தியவனே! திருமாலும் பிரமனும் ஈசனும் உன்னுடைய திருவடியைப் போற்றும்படி மயில்மீதில் அமர்ந்து விநாயக மலையான பிள்ளையார்பட்டியில் வீற்றிருப்பவனே!  மலைகளில் வாழும் வேடர்களுக்கு ஆதாரமாக விளங்குபவனே!

சரவணப் பொய்கையில் உதித்தவனே; அளவற்ற கருணையுள்ளவனே; நூறு இதழ்களை உடைய தாமரை போன்ற பாதத்தை உடையவனே; பேரழகனே; இளையதான கதிர்களை விடுக்கும் ஜோதி வடிவினனே; தேவசேனாதிபதியே; போருக்கான தளமான போரூரில் வீற்றிருப்பவனே; எல்லா உலகங்களுக்கும் ஈசனே; பரமஞானத்தின் திரண்ட வடிவமே; இந்திரனுக்குத் தலைவனே; நறுமணம் கமழும் கடப்ப மாலையை அணிந்தவனே; உமையென்றும் காளியென்றும் பகவதியென்றும் நாமங்களை உடைய பார்வதியம்மையின் மகனே; இம்மை மறுமைகளுக்கு மூல காரணனனே; ஆண்மையில் நலன்களிலெல்லாம் மேம்பட்டவனே, உன்னைப் போற்றி போற்றி என்று துதிக்கிறேன்.  உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.