தென்காசி ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள இலஞ்சியம்பதித் திருப்புகழ் இது. இலஞ்சியம்பதிக்கு அருகே குற்றாலத்தில் அகத்தியர் திருமால் உருவத்தை சிவலிங்கமாக மாற்றி இருவாலுகேசனாகச் சமைத்தார் என்று இலஞ்சி முருகன் உலா சொல்கிறது. இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பாடுகையில்தான் குருநாதர், ‘திருவரங்கர் மருக!’ என்று அழைக்கிறார். பாடலில் சிவனாரைப் போலவே திருமாலும் தன்னுடைய மருமகனைப் போற்றுகிறார். கங்கை நதியின் குமாரனாக முருகன் காட்சி அளிக்கிறான். தமிழ் விளங்குமாறு இலஞ்சியில் கோலம் கொள்கிறான்.
இந்தப் பாடல் வள்ளியைப் பற்றிய மிக அழகான வருணனையோடு தொடங்குகிறது. கைகள் தாமரை; உதடு பவளம்; கழுத்தோ சங்கு; விழியோ அம்பு; பாகினைப் போன்ற பேச்சு என்று தொடங்கும் வருணனையில் வள்ளியம்மை நேரில் காட்சியளிக்கிறார். வள்ளிமலையில் அம்மையின் திருவுருவைப் புடைப்புச் சிற்பமாகப் பார்த்தவர்கள் இதன் உண்மையை உணர்வார்கள். இப்போது பாடலைப் பார்ப்போம்.
பல பாடல்களில் நெடிலையே தாளத்துக்கான திருப்புமுனையாகப் பயன்படுத்துவார் என்றாலும் இப்பாடலில் முற்றிலும் குற்றெழுத்துகளே அமைந்திருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வோர் அடியிலும் ஈற்றயல் எழுத்து (penultimate letter) மட்டுமே நெடிலாக அமைந்துள்ளது. மெல்லின ஒற்றுகள் சீரான இடைவெளியில் திரும்பத் திரும்பப் பயின்று நாத இன்பத்தைக் கூட்டுகின்றன.
தனந்த தனதன தனந்த தனதன
தனந்த தனதன ...... தனதான
கரங்க மலமின தரம்ப வளம்வளை
களம்ப கழிவிழி ...... மொழிபாகு
கரும்ப முதுமுலை குரும்பை குருகுப
கரும்பி டியினடை ...... யெயின்மாதோ
டரங்க நககன தனங்கு தலையிசை
யலங்க நியமுற ...... மயில்மீதே
அமர்ந்து பவவினை களைந்து வருகொடி
யவந்த கனகல ...... வருவாயே
தரங்க முதியம கரம்பொ ருததிரை
சலந்தி நதிகும ...... ரெனவான
தலம்ப ரவமறை புலம்ப வருசிறு
சதங்கை யடிதொழு ...... பவராழி
இரங்கு தொலைதிரு வரங்கர் மருகப
னிரண்டு புயமலை ...... கிழவோனே
இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
இலஞ்சி மருவிய ...... பெருமாளே
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/247991533&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

