பதச் சேதம் | சொற் பொருள் |
| கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு | மின்: ஒளி பொருந்திய; அதரம்: இதழ்கள்; வளை: சங்கு; களம்: கழுத்து; பகழி: அம்பு; |
| கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின மாது(ஓடு) | குரும்பை: முற்றாத இளநீர்; குருகு: இளமை; பிடி: பெண்யானை; எயின மாதோடு: குறப்பெண்ணோடு; |
| அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நிய(ம)ம் உற மயில் மீதே | அரங்க: உராய—அணைக்க; நக: நாக—மலை; குதலை: மழலை; அலங்க: அசைவுபெற; நியமம் உற: முறைப்பட, நிச்சயமாக; |
| அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே | பவவினை: பிறவியாகிய நோய்; அந்தகன்: யமன்; |
| தரங்கம் முதிய மகரம் பொருத திரை சல(ந்)தி நதி குமரன் என வான | தரங்கம்: அலை; முதிய மகரம்: முதிர்ந்த, பெரிய மீன்கள்; சலந்தி: சலதி என்பதன் விகாரம்; சலதி: கடல்; சலதிநதி: கடல்போன்ற கங்கை; |
| தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி | ஆழி: கடல்; |
| இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே | இரங்கு: கருணையோடு (அறிதுயிலில்) இருக்கும்; திருவரங்கர்: ஸ்ரீரங்கநாதரின்; மலை கிழவோனே: மலைகளுக்கு உரியவனே; |
| இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே. | இலங்கு தர தமிழ்: தமிழ் இலங்குமாறு, விளங்கித் தோன்றுமாறு; வரு: திருஞானசம்பந்தராக அவதரித்த; |

கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி ... தாமரையை ஒத்த கைகளும்; ஒளிபொருந்திய பவளத்தை ஒத்த இதழ்களும்; சங்கை ஒத்த கழுத்தும்; அம்பை ஒத்த விழியும்;

மொழி பாகு கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை ... சர்க்கரைப் பாகையும், கரும்பையும் அமுதையும் ஒத்த பேச்சையும்; தென்னங் குரும்பையை (முற்றாத இளநீரை) ஒத்த மார்பகத்தையும்; பெண்யானையை ஒத்த நடையையும் கொண்ட—

(மதங்கொண்ட பெண்யானையின் நடை என்ற மதர்த்த நடை ‘மதகஜ காமினி என்று கொண்டாடப்படும் ஒன்று.)

எயின் மாதோடு அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க ... வேடர் குலப்பெண்ணான வள்ளியோடு நீ அணைத்தபடி வருவதால் அம்மையின் மலையை ஒத்த கனமான மார்பகங்கள் அழுந்தப்பெறும்படியும், அம்மையின் மழலைமொழியின் ஒலியானது எல்லா இடங்களிலும் அசைந்து ஒலிக்கவும்;

நிய(ம)ம் உற மயில் மீதே அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே ... நீ முறைப்படி மயிலின் மேலே அமர்ந்து பிறப்பாகிய வினையை ஒழிப்பதற்காக, என்னைப் பற்ற வருகின்றவனான கொடிய யமன் என் அருகில் வராமல் இருப்பதற்காக என்னிடத்திலே வர வேண்டும்.

தரங்கம் முதிய மகரம் பொருத திரை சல(ந்)தி நதி குமரன் என ... அலைகள் நிறைந்ததும்; பெரிய மகரமீன்கள் சண்டையிட்டு விளையாடுவதுமான கடல்போன்ற கங்கை நதிக்குக்குக் குமாரனாக —காங்கேயனாக —

(கங்கையின் புத்திரன் என்பதால் காங்கேயன் என்று அழைக்கப்படுபவர்கள் இருவர். ஒருவர் பீஷ்மர்; மற்றவர் முருகன்)

வான தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ... வானத்திலுள்ளோர்—தேவர்கள்—போற்றவும்; வேதம் ஒலிக்கப்பெற்று வாழ்த்தவும்; கிண்கிணிச் சதங்கைகளை அணிந்துள்ள உன் சிற்றடிகளைத் தொழுபவரான—

ஆழி இரங்கு தொ(ல்)லை திரு அரங்கர் மருக ... பாற்கடலின் நடுவில் கருணையோடு அறிதுயிலில் விளங்கும் தொன்மையானவரான ஸ்ரீரங்கத்துப் பெருமாளுடைய மருமகனே!

பனிரண்டு புய மலை கிழவோனே ... பன்னிரண்டு தோள் மலைகளை உடைய; குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் என்று மலைகளுக்கு உரியவனாகத் திகழ்பவனே!

இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே. ... தமிழ் மொழியானது பொலிவுற்று இலங்கும்படியாக திருஞானசம்பந்தராக அவதரித்து வந்தவனே! திருஇலஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

தேவர்கள் போற்றவும்; வேதகோஷங்கள் முழங்கி வாழ்த்தவும்; கிண்கிணிச் சதங்கைகளை அணிந்துள்ள உன் சிறிய பாதங்களை வணங்கி மகிழ்பவரான; கருணையோடு பாற்கடலில் பள்ளிகொண்டவரும் ஸ்ரீரங்கநாதருமான திருமால் மருகனே! பன்னிரண்டு தோள்மலைகளை உடையவனே! குன்றங்கள் எல்லாவற்றிலும் நின்றாடும் மூர்த்தியே! தமிழ்மொழி பொலிவுபெறுமாறு திருஞான சம்பந்தராக அவதரித்தவனே! திரு இலஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே!

தாமரையை ஒத்த கைகளையும்; ஒளிபொருந்திய பவளத்தை ஒத்த இதழ்களையும்; சங்கை ஒத்த கழுத்தையும்; அம்பை ஒத்த விழியையும்; சர்க்கரைப் பாகையும், கரும்பையும் அமுதையும் ஒத்த பேச்சையும்; முற்றாத இளநீனை ஒத்த மார்பகத்தையும்; மதங்கொண்ட பெண்யானையை ஒத்த நடையையும் கொண்டவளான வேடர் மகளான வள்ளியம்மையை நீ அணைத்தபடி வருவதால் அவளுடைய மார்பகம் அழுந்தப்பெறும்படியும்; அம்மையின் மழலையொலி எல்லா இடங்களிலும் ஒலிக்கும்படியும்; நீ முறைப்படி மயிலின் மீது அமர்ந்தவண்ணமாக, என்னைப் பற்றவரும் யமனை என்னருகில் வரவிடாதபடி செய்து, என் பிறவித் துன்பத்தை அறுப்பதற்காக என்னிடத்திலே வந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை