பதச் சேதம் | சொற் பொருள் |
| கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரி சூலன் | கடவு: கடவுகின்ற, செலுத்துகின்ற; திரிசூலன்: திரிசூலத்தை ஏந்தும் யமன்; |
| கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம் | கறுவி: சினந்து; உயிர்கள் கழிய: உயிர் நீங்குமாறு; முடுகி: விரைவாக; எழுகாலம்: எழுந்து வரும் காலம்; |
| திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே | திரியும் நரியும்: சுடுகாட்டில் திரிகின்ற நரியும்; எரியும்: தீயும்; உரிமை தெரிய: உரிமை பாராட்டி; விரவி: கலந்து, நெருங்கி; |
| செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும் | செறிவு: திணிந்து, நிறைந்து; |
| பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே | பரிய: பெரிய (பரியது கூர்ங்கோட்டது—குறள் 599); வரையின் அரிவை: மலைமகள்; |
| பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே | பழனம்: வயல்; கொழு: ஏர்க்கால்; எழுது: அழுந்தப் பதியுமாறு உழும்; |
| அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே | அரியும் அயனும்: திருமாலும் பிரமனும்; வெருவ: அஞ்ச; அரிய கிரியை: அரியதான கிரெளஞ்ச மலையை; எறிவோனே: வேல் கொண்டு வீசுவோனே; |
| அயிலும் மயிலும் மறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே. | அயில்: வேல்; மறம்: வீரம்; நிறம்: ஒளி; |

கரிய பெரிய எருமை கடவு ... கரிய நிறமுடைய பெரிய எருமைக் கடாவைச் செலுத்துகின்ற,

கடிய கொடிய திரிசூலன் ... கடுமையையும் கொடுமையையும் கொண்ட திரிசூலத்தை ஏந்திய யமன்,

கறுவி யிறுகு கயிறொடு ... சினம்கொண்டு, இறுக்குவதான பாசக் கயிற்றோடு,

உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம் ... பல உயிர்கள் நீங்கும்படியாக விரைவோடு எழுந்து வருகின்ற சமயத்தில்,

திரியு நரியு மெரியு முரிமை தெரிய ... சுடுகாட்டில் திரிகின்ற நரியும், தீயும் உரிமை பாராட்டிக்கொண்டு,

விரவி யணுகாதே ... என்னை நெருக்கமாக அணுகி வராமல்,

செறிவு மறிவு முறவு மனைய ... நிறைவு கொண்டதும், அறிவைத் தரக்கூடியதும், எனக்கு நெருக்கமான உறவினர்களைப் போன்றவையுமான,

திகழு மடிகள் தரவேணும் ... விளங்குகின்ற உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்

பரிய வரையி னரிவை ... பெரிய மலையான இமகிரியின் மகளான உமாதேவியை,

மருவ பரம ரருளு முருகோனே ... மணந்தவனான பரமசிவன் அருளிய முருகனே!

பழன முழவர் ... வயல்களில் உழவர்கள்,

கொழுவி லெழுது ... ஏர்க்காலால் அழுந்த உழுகின்ற,

பழைய பழநி யமர்வோனே ... பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே,

அரியு மயனும் வெருவ ... திருமாலும் பிரமனும் அஞ்சும்படியாக,

உருவ அரிய கிரியை எறிவோனே … அரியதான கிரெளஞ்ச மலையின்மேல் உருவிச் செல்லுமாறு வேலை வீசியவனே!

அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய பெருமாளே... வேலையும் மயிலையும் வீரத்தையும் ஒளியையும் அழகையும் உடைய பெருமாளே

சுருக்க உரை

மிகப்பெரிய மலையான இமகிரியின் மகளான உமாதேவியை மணந்த சிவபெருமானுடைய பாலனே! ஏர்க்காலைக் கொண்டு வயல்களில் அழுந்த உழும் உழவர்கள் நிறைந்த பழனி மலையில் வீற்றிருப்பவனே! திருமாலும் பிரமனும்(கூட) அஞ்சும்படியாக அரிய மலையான கிரெளஞ்ச பர்வதத்தின்மேல் வேலை வீசியவனே!

கரியதும் பெரியதுமான எருமையைச் செலுத்திக்கொண்டும் திரிசூலத்தை ஏந்திக்கொண்டும் யமனானவன் என் மீது பாசக்கயிற்றை வீசி இறுக்குகின்ற சமயத்தில், சுடுகாட்டில் திரியக்கூடிய நரியும் நெருப்பும் என்னை உறவு பாராட்டிக்கொண்டு நெருங்கிவிடாமல், எனக்கு அறிவையும் நிறைவையும் தரக்கூடியதும், என்னுடைய நெருங்கிய உறவினர்களைப் போன்றதுமான உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை