குன்றக்குடித் திருத்தலத்தின் திருப்புகழ் இது. இந்தத் தலத்தில் 144 படிகளுக்கு மேல் அமைந்திருக்கும் ஆலயத்தில் சண்முகநாதன் (ஆறுமுகன்) என்ற பெயரில் வீற்றிருக்கும் இறைவனும், வள்ளி தேவானையரும் தனித்தனி மயில் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்கள் என்பது இத்தலத்தின் தனித்தன்மை. விராலிமலையில் மூவரும் ஒரே மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சிதருகிறார்கள். இங்கே மூவருக்கும் தனித்தனியான மயில் வாகனம். பாடலைப் பார்ப்போம்.
பலவிதமான சந்த அமைப்புகளைக் கொண்ட பாடல்களை இதுவரையில் பார்த்தோம். சந்த அமைப்பில் சிக்கல்கள் நிறைந்தனவும், மிக நீளமான தாள அமைப்புகளைக் கொண்டவையுமான பாக்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் நமக்குண்டு. குன்றக்குடித் திருப்புகழ்ப் பாக்களில் ‘ககுப நிலைகுலைய’ என்ற பாடல் இப்படிப்பட்ட ஒன்று. வரும் தினங்களில் இந்தப் பாடலையும் வழங்குவோம். இந்த வகைப் பாடல்களுக்கு ஒரே நாளில் பொருள் சொல்லி முடிப்பது இயலாது என்பதால் முன்னொருமுறை தேவேந்திர சங்க வகுப்புக்குச் செய்தது போல பகுதிபகுதியாகப் பிரித்துப் பொருளை வழங்குவோம்.
இன்று காணவிருக்கும் குன்றக்குடி—மயூரகிரி, மயூராசலம், மயில் மலை, தேனாறுவீழ் சாரற்கிரி என்றெல்லாமும் வழங்கப்படும் தலம்—திருப்புகழ் மற்ற பாக்களைப் போன்ற வழக்கமான அமைப்பு கொண்டது. இந்தப் பாடலில் இத்தலம் மாயூரகிரி என்று குறிக்கப்படுகிறது. தாய் யசோதைக்குத் தெரியாமல் உரல் மீதேறி பால் திருடும் கண்ணனை இந்தப் பாடலில் காண்கிறோம்.
தானான தனதான தானான தனதான
தானான தனதான - தனதான
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
நாடோறு மதிகாயும் - வெயிலாலும்
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
நாடாசை தருமோக - வலையூடே
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
லேவாரும் விழிமாதர் - துயரூடே
ஏகாம லழியாத மேலான பதமீதி
லேகீயு னுடன்மேவ - அருள்தாராய்
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
தானேறி விளையாடு - மொருபோதில்
தாயாக வருசோதை காணாது களவாடு
தாமோத ரன்முராரி - மருகோனே
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
மாலாகி விளையாடு - புயவீரா
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழு
மாயூர கிரிமேவு - பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/248818801&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

