பதச் சேதம் | சொற் பொருள் |
புமி அதனில் ப்ரபுவான
| புமி: பூமி, குறுக்கல் விகாரம்; ப்ரபு: பிரபு—அரசன்; |
புகலியில் வித்தகர் போல
| புகலி: சீகாழி; வித்தகர்: வித்தகரான ஞான சம்பந்தர்; |
அமிர்த கவித் தொடை பாட
| கவித் தொடை: கவிமாலை; |
அடிமை தனக்கு அருள்வாயே

சமரில் எதிர்த்த சுர் மாள
| சமரில்: போரில்; சுர்: சூர், சூரன் குறுக்கல் விகாரம்; |
தனி அயில் விட்டு அருள்வோனே
| தனி: ஒப்பற்ற; அயில்: கூர்மை, அதனால் கூரிய வேல்; |
நமசிவயப் பொருளானே
| பொருளோனே: மூலப் பொருளே |
ரசத கிரி பெருமாளே.
| ரசத(ம்): வெள்ளி; ரசதகிரி: வெள்ளி அம் கிரி, கயிலாயம்; |

புமிய தனிற் ப்ரபுவான ... இந்தப் புவிமண்டலத்தின் அரசராகத்—தனிப்பெரும் தலைவராக;

புகலியில் வித்தகர்போல ... சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரைப் போல,

அமிர்தகவித் தொடைபாட ... (மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல) அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,

அடிமைதனக்கு அருள்வாயே ... அடிமையாகிய அடியேனுக்கும் அருள வேண்டும்.

சமரிலெதிர்த்த சுர் மாள ... போரில் எதிர்த்து நின்ற சூரன் இறந்துபடும்படியாக,

தனியயில்விட்டு அருள்வோனே ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவியவனே!

நமசிவயப் பொருளானே ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின் மூலப் பொருளாக விளங்குபவனே!

ரசதகிரிப் பெருமாளே. ... வெள்ளியங்கிரியான கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

போரில் எதிர்த்துவந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் மாளும்படியாக ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே! ‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலப் பொருளே! வெள்ளியங்கிரியான கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

இந்த பூமண்டலத்துக்குத் தலைவனாக சீகாழித் தலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தரைப் போல அமுதமயமான சொற்களால் கவிமாலை தொடுப்பதற்கான ஆற்றலை அடிமையாகிய எனக்கும் அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை