தனித்தனித் தலங்களுக்கும், தனித்தனிப் படைவீடுகளுக்கும் திருப்புகழ்ப் பாடல்கள் இருப்பதை அறிவோம். குன்றுதோறாடல் என்று ஐந்து பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். ஆறுபடை வீடுகளையும் சேர்த்து, ‘அறுபதி’ என்றும் ‘ஆறு திருப்பதி’ என்றும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் முதலாவதை இன்று பார்ப்போம். அடுத்ததை, இதன் பொருளைப் பார்த்தபிறகு எடுத்துக் கொள்வோம்.
திருவடியைப் பெறுவதை வேண்டுதலாக வைக்கும் இந்தப் பாடலின் அமைப்பு, அடிக்கு 31 எழுத்துகள்; ஏழு, பதினாறு, இருபத்தைந்தாம் எழுத்துகள் நெடில்; மற்ற அனைத்து எழுத்துகளும் குறில்; இடையின மெய்யொற்றுகள் விரவி வந்தாலும் வல்லின மெல்லின ஒற்றுகள் அறவே இல்லை. மற்ற பாடல்களைப் போலவே மிக இறுக்கமான தாளப் பின்னலையும் சொற்கட்டையும் கொண்ட பாடல்.
தனதன தனதானன தனதன தனதானன
தனதன தனதானன தனதான
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு மதிசூரா
தலைய யனறியா வொருசிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமாளே.
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272415367&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

