நிம்பபுரம் என்ற தலத்துக்கான பாடலாக இன்றைய பாடலின் இறுதியடியில் ‘நிம்பபுர வாண’ என்பதால் குறிக்கிறார். இந்த நிம்பபுரம் எது என்பது பற்றி அபிப்பிராயங்கள் வேறுபடுகின்றன. இது வேப்பூராக இருக்கலாம் என்று குகத்திரு தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் அபிப்பிராயப்படுகிறார். ‘நிம்பம்’ என்ற சொல்லுக்கு வேம்பு என்ற பொருளிருப்பதால் இது வேப்பூராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேப்பூர் தென்னாற்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் ஆற்காட்டுக்கு அருகே உள்ளது என்று kaumaram.com குறிப்பிடுகிறது. ஆனால், ‘நிம்பபுரம்’ என்ற பெயரிலேயே ஹம்பிக்கு அருகில் ஓர் ஊர் இருப்பதாக தணிகைமணியவர்கள் தெரிவிக்கிறார். தலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு ஒருபுறம்; தாளத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு இன்னொருறம். இந்தத் தாளத்தை, தந்ததன தான என்றும் தந்த தனதான என்றும் இரண்டு வேறுவிதங்களில் பிரித்திருக்கிறார்கள். இப்படி வண்ணக் குழிப்பை மாற்றிப் பிரிப்பதால் படிக்கின்ற முறையும் தாளக்கட்டும் மாறி ஒலிக்கும். இரண்டு முறைகளிலும் பொருத்தமான முறை என்று படுவதை நாம் மேற்கொண்டிருக்கிறோம். (தணிகைமணியவர்களும் இதையே பின்பற்றியுள்ளார்.) பாடலைப் பார்ப்போம்.
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான தனதான
அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/272872772&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

