வெள்ளிகரம் என்னும் திருத்தலத்துக்கான பாடல் இது. இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிமீ தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவிலுள்ளது.
‘சும்மா இரு சொல்லற’ என்று இறைவன் சொன்னதனாலோ என்னவோ அருணகிரியாரின் பாடல்கள் பல இடங்களில் ‘சும்மா இருத்தல்’ என்னும் மௌன நிலையைக் கேட்பதாக இருக்கும்.
சொல்லுகைக் கில்லையென்று எல்லாமிழந்து சும்மா விருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல கொல்லியைச்
சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்
வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்னல் வல்லபமே.
என்பார் கந்தரலங்காரத்திலும். அந்தச் ‘சும்மா இருக்கும் எல்லை’தான் இன்றைய பாடலில் சொல்லப்படும், ‘மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே’ என்பதும். அடிக்கு இருபத்தைந்து எழுத்துகள் உள்ள பாடல். இரண்டாம் அரையடியான மடக்கடியில் தய்ய, தந்த என்னும் ஓசைகளைப் பெற்று வருகிறது. பாடலைப் பார்ப்போம்.
தனதன தனன தனதன தனன
தய்ய தனத்த தந்த தனதானா
அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவரு மொய்க்கு ரம்பை யுடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
வைவர்த மக்கு டைந்து தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
டெல்லைவி டப்ர பஞ்ச மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லைகு றிப்ப தொன்று புகல்வாயே
வடமணி முலையு மழகிய முகமும்
வள்ளை யெனத்த யங்கு மிருகாதும்
மரகத வடிவு மடலிடை யெழுதி
வள்ளிபு னத்தில் நின்ற மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
வெள்ளிம லைச்ச யம்பு குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
வெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/273298049&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

