திருவண்ணாமலைத் தலத்துக்கான இந்தப் பாடல் அகப் பொருளில் ‘நற்றாய் இரங்கல்’ என்ற துறையைச் சேர்ந்தது. இப்படிப்பட்ட பாடல்களை இதற்கு முன்னரும் பார்த்திருக்கிறோம். ‘உன்மீது மோகம் கொண்டுள்ள இந்தப் பெண்ணை நீ ஏற்றருள வேண்டும்’ என்ற தொனியில் பாடப்படும் இவ்வகைப் பாடல்களெல்லாமே—திருப்புகழில் இடம்பெறும்போது—அடியார்களை மோகங் கொண்ட பெண்ணாக உருவகித்து, அடியாரை ஆண்டருள வேண்டும் என்ற பொருளில் பாடப்பட்டவை.
அடிக்கு ஒற்று நீக்கி இருபத்தைந்து எழுத்துகளாகவும்; ஒற்றைச் சேர்த்து 7, 15, 23 ஆகிய எழுத்துகள் வல்லொற்றாகவும் சீரான இடைவெளிகளில் நெடிலோசையும் பயிலும் பாடல்.
தானன தானதத்த தானன தானதத்த
தானன தானதத்த தனதான
தேதென வாசமுற்ற கீதவி நோதமெச்சு
தேனளி சூழமொய்த்த மலராலே
சீறும ராவெயிற்றி லூறிய காளம்விட்ட
சீதநி லாவெறிக்கு மனலாலே
போதனை நீதியற்ற வேதனை வாரிதொட்ட
போர்மத ராஜனுக்கு மழியாதே
போகமெ லாநிறைத்து மோகவி டாய்மிகுத்த
பூவையை நீயணைக்க வரவேணும்
மாதினை வேணிவைத்த நாதனு மோதுபச்சை
மாயனு மாதரிக்கு மயில்வீரா
வானவர் சேனைமுற்றும் வாழப ராபதிக்குள்
வாரண மானதத்தை மணவாளா
மேதினி யோர்தழைக்க வேயரு ணாசலத்து
வீதியின் மேவிநிற்கு முருகோனே
மேருவை நீறெழுப்பி நான்முக னார்பதத்தில்
வேலடை யாளமிட்ட பெருமாளே.
</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/274842291&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

