பதச் சேதம் | சொற் பொருள் |
தேது என வாசம் உற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே
| தேது: தேசு, ஒளி; தேதுஎன: ஒளி உடையதாய்; அளி: வண்டு; |
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே
| அரா: அரவு, பாம்பு; எயிறு: பல்; காளம்: விஷம்; சீதநிலா: சந்திரனின் குளிர்ந்த ஒளி; எறிக்கும்: எறிகின்ற, வீசுகின்ற; |
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே
| போதனை: போதன்—தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்—போதனை: பிரமனை; நீதியற்ற வேதனை: நீதியற்றவனும், வேதங்களில் தேர்ந்தவனுமான பிரமன்; வாளி: அம்பு; |
போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வர வேணும்
| விடாய்: தாகம்; |
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா
| மாதினை: கங்கையை; வேணி: சடையில்; ஆதரிக்கும்: விரும்புகின்ற; |
வானவர் சேனை முற்றும் வாழ அமரா பதிக்குள் வாரணமான தத்தை மணவாளா
| வாரணமான தத்தை: கிளிபோன்றவரான தேவானை; |
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே

மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே.

தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே ... தேசு நிறைந்ததாயும்; மணம் மிகுந்ததாயும்; மெச்சத் தகுந்த பல விநோத கீதங்களை எழுப்பித் தேன் உண்ணும் வண்டுகளால் சூழப்பட்ட மலர்களாலும்;

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே... குளிர்ந்த நிலாவானது, சீறுகின்ற பாம்பின் பற்களில் ஊறுகின்ற விஷத்தைக் கக்கி அனல் வீசுவதாலும்;

போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே ... (போது=மலர்) தாமரைப் பூவில் வீற்றிருப்பவனும்; நீதிமுறை தவறியவனும்; வேத நாயகனுமான பிரமன்மீது தன் மலர்க்கணைகளை ஏவிய மன்மத ராஜனால் அழிவுறாதபடி,

(பிரமன், தான் படைத்தவளான திலோத்தமையின் மீது மோகம் கொண்டு, அவளைப் பார்ப்பதற்காக ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டதால் அவன் நீதியற்றவன்; பிரமனும் மன்மதனும் திருமாலிடம் தோன்றியவர்கள் என்பதனால், மன்மத ராஜன் தன் சொந்த சகோதரன் மேலேயே மலர்க்கணையை வீசியவனாகிறான். இப்படிப்பட்டவனுக்கு முன்னால் இந்தப் பெண் எம்மாத்திரம் என்பது தொனிப்பொருள்.)

போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வர வேணும் ... எல்லா வகையான இன்பங்களையும் தன்னுள் நிறைத்து வைத்து, உன்மேல் மோகத்தால் தாகம் கொண்டுள்ள இந்தப் பெண்ணை அணைப்பதற்காக நீ வரவேண்டும்.

மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் அயில் வீரா ... சடாமுடியில் கங்கையைத் தரித்துள்ள நாதனாகிய சிவபெருமானும்; போற்றப்படும் ‘பச்சைமா மலைபோல் மேனிய’னாகிய திருமாலும் நேசிக்கின்றவனே! வேல் ஏந்திய வீரனே!

வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா ... தேவர்களுடைய சேனைகள் எல்லாம் சூழ்ந்திருக்கின்ற இந்திரலோகமான அமராவதியில், (ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட) தேவசேனை அம்மையின் கணவனே!

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கு(ம்) முருகோனே ... உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் தழைத்து வாழும்படியாக திருவண்ணாமலையின் வீதியில் வீற்றிருக்கும் முருகனே!

மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே. ... மேருமலையைப் பொடியாக்கி, வேலைக்கொண்டு பிரமனுடைய காலில் விலங்கு பூட்டிய பெருமாளே!

சுருக்க உரை

கங்கையைச் சடாமுடியில் தரித்தவரான சிவபிரானும், பச்சை நிற மேனி படைத்த திருமாலும் நேசிக்கின்ற மயில் வீரனே! தேவர்களுடைய சேனைகள் சூழ்ந்திருக்கின்ற இந்திரலோகத்தில், யானை வளர்த்தவரான தேவசேனையம்மையின் கணவனே! உலகத்தவர்கள் எல்லோரும் செழிப்புற்று வாழும்படி, திருவண்ணாமலைத் தலத்தின் வீதியில் வீற்றிருப்பவனே! மேருவைத் தூளடித்தவனே! வேல்கொண்டு, பிரமனுடைய காலில் விலங்கைப் பூட்டிய பெருமாளே!

ஒளி நிறைந்ததும்; நறுமணம் கொண்டதும்; பலவிதமான இன்னிசைகளை எழுப்பும் வண்டுகளால் சூழப்பட்டதுமான மலர்களாலும்; குளிர்ந்த நிலவொளியானது, சீறுகின்ற பாம்பின் பல்லிலிருந்து வெளிப்படுகிற விஷத்தைப் போல சுட்டெரித்து வீசுகின்ற அனலாலும்; பூவில் வீற்றிருப்பவனான பிரமன் மேலேயே மலர்க்கணைகளைச் செலுத்தியவனான மன்மதனாலும் இந்தப் பேதைப் பெண் துன்பமடையாதவண்ணம்

எல்லா வகையான இன்பங்களையும் தன்னுள் நிறைத்து வைத்து, உன்மீது மோகம் கொண்டு வாடும் இந்தப் பெண்ணை அணைப்பதற்காக நீ வந்தருள வேண்டும். (உன்மீது கொண்ட அன்பினால் வேகம் கொண்ட அடியார்கள் அனைவரும் தவிப்படங்குமாறு அவர்களை நீ ஆண்டருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை