பதச் சேதம் | சொற் பொருள் |
சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத
| சேமம்: பாதுகாவல்; கோமள: அழகிய; |
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே
| அதீத்தே: கடந்த நிலையில்; அவிரோதத்தே: விரோதமற்ற நிலையில்; குணசீலத்தே: நற்குணங்களும் சீலங்களும்; |
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா
| உலோப: கஞ்சத்தனம்; பூதவிகாரம்: ஐம்பூதங்களால் ஏற்படும் மாறுபாடுகள்; |
காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான்
| காயம்: உடல்; பசு பாசம்: உலக இச்சைகள்; ஏயும்: இயையும், இசையும்; |
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால
| நேமி: கடல்; சூர்: சூரபத்மன்; காள: நஞ்சு; புயங்க கால: பாம்பை காலிலே பற்றியுள்ள; |
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே
| க்ரீப(ம்): கழுத்து; கலாபம்: தோகை; நீபச் சேவக: கடப்ப மாலையை அணிந்த வீரா; |
ஓமத் தீ வழுவார்கட்கு ஊர் சிவ லோகத்தே தரு மங்கை பாலா
| ஓமத்தீ: வேள்வித் தீ; வழுவார்கள்: தவறாது வளர்ப்பவர்கள்; ஊர்: ஊரை, இருப்பிடத்தை; மங்கை: உமை; |
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே.
| ஆறு: வழி; தேசிக: குருமணியே; |

சேமக் கோமள பாதத் தாமரை ... பாதுகாவலாய் விளங்குபவையும், அழகானவையுமான உன்னுடை திருவடித் தாமரைகளை,

சேர்தற்கு ஓதும் அநந்தவேத அதீதத்தே ... சேர்வதற்கான வழிகளைச் சொல்கின்ற எண்ணற்ற வேதங்களைக் கடந்த நிலையின் மேலும்;

அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்புறாதே ... விரோதமற்ற சாந்தமான நிலையின் மேலும்; நற்குண நன்னெறிகளின் மேலும் அன்பைச் செலுத்தாமல்;

காம க்ரோத உலோபப் பூதவிகாரத்தே அழிகின்ற மாயா காயத்தே... காமம், கோபம், கருமித்தனம் ஆகிய இவற்றாலும்; ஐம்பூதங்களின் மாறுபாடுகளால் அழியும் மாயை நிறைந்த இந்த உடலின் மேலும்;

பசு பாசத்தே ... உலகப் பற்றுகளின் மேலும்,

சிலர் காமுற்றேயும் அது என்கொலோதான் ... சிலர் மோகங்கொண்டு நிற்கும் நிலை எதனால் நேர்கிறது?

நேமிச் சூரொடு மேருத் தூளெழ ... கடலும் சூரபத்மனும் கலங்கும்படியும்; மேருமலை தூளாகும்படியும்;

நீளக் காள புயங்க கால ... விஷமுள்ள பெரிய பாம்பைக் காலிலே பற்றிக் கொண்டதும்;

நீலக்ரீப கலாபத் தேர்விடு ... நீலமான கழுததை உடையதும்; தோகையைக் கொண்டதுமான மயிலைத் தேர்போல நடத்துகின்ற,

நீபச் சேவக செந்தில்வாழ்வே ... கடப்ப மாலை அணிந்த வீரனே! திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே!

ஓமத்தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே தரு மங்கைபாலா... என்றும் தவறாமல் வேள்வித் தீயை வளர்ப்பவர்களுக்கு சிவலோகத்திலே இருப்பிடத்தைத் தருகின்ற உமாதேவியாரின் பாலனே!

யோகத்து ஆறு உபதேசத் தேசிக ... யோகவழிகளை உபதேசிக்கும் குருமூர்த்தியே,

ஊமைத் தேவர்கள் தம்பிரானே. ... (வல்லவர்களாக இருந்தாலும் எல்லாம் வல்ல உன்முன்னே) வாய்பேச முடியாமல் நிற்கும் தன்மையையுடைய தேவர்களுடைய தலைவனே.

சுருக்க உரை

கடலும் சூரனும் கலங்கவும்; மேருமலை தூளாகவும் (சிறகுவீசிப் பறப்பதும்); விஷமுள்ள நெடிய பாம்பைக் காலிலே பற்றியதும்; நீலக் கழுத்தையும் தோகையையும் உடையதான மயிலைத் தேராக நடத்திச் செல்பவனே! கடப்ப மாலையை அணிந்த வீரனே! தவறாமல் வேள்வித் தீயை வளர்ப்பவர்களுக்குச் சிவலோகத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தித் தரும் உமையம்மையின் பாலனே! யோக வழிகளை உபதேசித்து அருளும் குருமூர்த்தியே!

உன்னுடைய திருப்பாதங்களை அடைவதற்கான வழிகளைச் சொல்கின்ற கணக்கற்ற வேதங்களைக் கடந்த நிலை; பகையற்ற நற்குண நற்சீலங்கள் என்று அன்பை வைக்க இத்தனை இடங்கள் இருக்கும்போது, இவற்றை விட்டு,

காமத்தின்மேலும்; கோபத்தின்மேலும்; கருமித்தனத்தின்மேலும்; பஞ்சபூதங்களின் மாறுபாடுகளால் ஏற்பட்டுச் சிதைகின்ற இந்த உடலின்மேலும் சிலர் அன்பைவைத்து மயங்கித் திரிகிறார்களே, இது ஏன்? (அவர்களை இந்த நிலையிலிருந்து விடுவித்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை