சுவாமிமலைக்கான திருப்புகழ் இது. இது ‘தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த மலை’ என்பது நாம் அறிந்ததே. திருத்தணியிலும் இப்படி உபதேசித்தாக ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. சிவபிரான் க்ஷண காலத்துக்கு தியானத்தில் இருக்க, முருகவேள் அவருக்குத் திருத்தணிகையில் பிரணவத்தின் பொருளை உபதேசித்தான் என்றும் அதனால் திருத்தணிக்க ‘க்ஷணிகாசலம்’ என்ற பெயர் இருப்பதாகவும் தணிகைப் புராணம் கூறுகிறது. இது குகத்திரு தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தரும் குறிப்பு. இந்தப் பாடலின் இறுதியடியில் வரும் ‘விரைய ஞான வித்தை’ என்பது இதனை உணர்த்துகிறது என்றொரு கருத்து உண்டு. ஆகவே, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிமலையைக் குறிப்பிட்ட கையோடு தொடர்ந்து இந்த சம்பிரதாயம் வழங்கிவரும் திருத்தணிகையையும் அடுத்தடுத்துக் குறிப்பிட்டிருக்கிறார். அடிக்கு ஒற்றொழித்து இருபத்தைந்து எழுத்துகள். 7, 11, 18 ஆகியவை நெடிலெழுத்துகள். வல்லொற்று முதன்மையாகப் பயிலும் பாடல்.
பிறவித் தளையிலிருந்து விடுவித்தருள வேண்டும் என்று பாடல் கோருகிறது.
தனன தான தத்த தனன தான தத்த
தனன தான தத்த தனதான
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு நெறிசேர்வார்
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் மடமாதர்
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து விடுமாறு
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்துன்
இனிய தாள ளிப்ப தொருநாளே
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து மயில்வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி லுறைவோனே
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/269699118&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

காய்கறிகளின் சத்துகள் வீணாவதைத் தடுக்க...!

ஈரானில் 44 நாள்களாக இணைய வசதி முடக்கம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

