பகுதி - 283

வானுலகும் அடியேனும் தழைத்து ஓங்கவும்; பிரமனும் மாலும் பிழைக்கவும் கடலில் எழுந்த ஆலகால விஷத்தைப் பருகுவதற்காக வாரியெடுக்கும் கரத்தை உடையவரும்;

Updated On :21 ஜூன் 2016, 9:54 am

பதச் சேதம்

சொற் பொருள்

தேன் உந்து(ம்) முக்கனிகள் பால் செம்கருப்பு இளநிர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற

தேன்உந்தும்: தேன் பெருக்கும்; இளநிர்: இளநீர் (குறுக்கல் விகாரம்); சீர்: (சுவையின்) சிறப்பை; பழித்த: பழிக்கும் (விஞ்சும் என்பது பெறப்படும் பொருள்);

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி

பொடித்து விழ: பொடிபட்டு விழ; சிவச்சொரூபம் என்பது சிவசொருபம் என்றானது—முறையே மெலித்தல், குறுக்கல் விகாரங்கள்; எனதேறி: எனத்தேறி, மெலித்தல் விகாரம்;

நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே

ஊன்: மாமிசம் பொதிந்ததான உடல்; வெளி: பரவெளி; வெளிநாத: பரவெளியிலே உண்டாகும் நாதம்; ஒளிமீதே: ஒளியிடத்திலே;

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே

வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் மாள

வானம்: வானலோகம்; அயன்: பிரமன்; மால்: திருமால்; அலை விடம்: கடலிலே எழுந்த ஆலகால விஷம்; மாள: அதன் சக்தி அழிய;

வாரும் கரத்தன்  எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே

வாரும்: வாரி எடுக்கின்ற; மழு: கோடரி;

தானந் தனத்தனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா

தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலைமலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே.

தானம்: ஸ்தானம், நிலைமை;

தேன் உந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளனிர் ... தேன் சிந்துகின்ற மா, பலா வாழை ஆகிய முக்கனிகளும் பாலும் செங்கரும்பும் இளநீரும் ஆகிய இவற்றின்,

சீரும் பழித்த சிவம்... (சுவைச்) சிறப்பைத் தாழ்த்துவதான (விஞ்சுவதான) சிவத்தின்,

அருள் ஊற ... அருள் ஊற்றெடுத்துப் பொங்கவும்;

தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ.... (அடியேனுடைய) தீவினையும் தொடர்கின்ற மற்ற வினைகள் எதுவாயினும் அவை ஒன்றாகப் தூள்பட்டு ஒழியவும்;

சீவன் சிவச்சொருபம் என தேறி ...... இந்த ஜீவனே சிவடிவமாக விளங்குகிறது என்பதைத் தெளிந்துகொண்டு,

நானென்ப தற்று உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று ... நான் என்ற உணர்வின் மீதும், உயிரின் மீதும் உடலின் மீதும் வைத்துள்ள பற்றுகள் முற்றிலும் இல்லாமல் போய்,

வெளிநாதம் பரப்பிரம ஒளிமீதே ... (சித் ஆகாசம்=சிதாகாசம் எனப்படும்) பரவெளியில், உன்னுடைய அருளாகிற நாதப் பிரம்மம் என்னும்

ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியொடு ... சிவஞானம் ஊற்றெடுக்கவும்; மகிழ்ச்சி பெருகும் சிவானந்த மோட்சத்தில்,

எநாளும் களிக்க பதம் அருள்வாயே... அடியேன் என்றென்றும் மகிழ்ந்திருக்குமாறு உன்னுடைய திருவடியைத் தந்தருள வேண்டும்.

வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க ... தேவலோகம்—தேவர்கள்—தழைத்து ஓங்குவதற்காகவும்; அடியேனும் சிவானந்த நலத்தில் செழிப்பதற்காகவும்; பிரமனும் திருமாலும் பிழைப்பதற்காகவும்,

அலை விட(ம்) மாள ... பாற்கடலிலே தோன்றிய ஆலகால விஷத்தின் வலிமை அழியும்படி,

வாருங் கரத்தன் எமை யாளும் தகப்பன் ... (அதைப் பருகுவதற்காக) வாரி எடுக்கும் கரத்தை உடையவனும்; எம்மை ஆண்டுகொள்ளும் தகப்பனும்;

மழு மானின் கரத்தன் அருள் முருகோனே ... கோடரி (பரசு), மான் ஆகியவற்றை ஏந்திய கரத்தை உடையவனுமான சிவபிரான் அருளிய முருகனே!

தானந் தனத்ததனனா வண்டு சுற்றி ... தானம் தனத்தனனா என்ற ரீங்காரத்துடன் வட்டமிடும் வண்டு,

மது தானுண் கடப்பமலர் அணிமார்பா ... தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணியும் மார்பனே!

தானங் குறித்து ... எம்முடைய நிலைமையைப் பார்த்து,

எமை யாளும்  திருக்கயிலை சாலும் ... எம்மை ஆட்கொள்வதற்காகவே திருக்கயிலாய மலையின்மேல் எழுந்தருளியிருப்பவனே!

குறத்திமகிழ் பெருமாளே. ... வள்ளியம்மை விரும்பும் பெருமாளே!

சுருக்க உரை

வானுலகும் அடியேனும் தழைத்து ஓங்கவும்; பிரமனும் மாலும் பிழைக்கவும் கடலில் எழுந்த ஆலகால விஷத்தைப் பருகுவதற்காக வாரியெடுக்கும் கரத்தை உடையவரும்; மானையும் கோடரியையும் ஏந்திய கரத்தருமான சிவபிரான் அருளிய பாலனே!  தேனைப் பருகுவதற்காக வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றி மொய்க்கும் கடப்ப மாலையை அணிந்தவனே!  எம்முடைய நிலைமையைக் கண்டு (இரங்கி) எமை ஆண்டுகொள்வதற்காகக் கயிலையில் எழுந்தருளியிருப்பவனே!  வள்ளியம்மையின் மனத்தை மகிழ்விக்கும் பெருமாளே!

தேனூறும் முக்கனிகள், பால், செங்கரும்பு இவை எல்லாவற்றின் சுவையையும் விஞ்சும் சுவையான சிவத்தின் அருள் பெருக; அதனாலே எம்முடைய தீவினைகளும் எமைத் தொடரும் மற்ற எல்லா வினைகளும் பொடிபட்டு அழியவும்; இந்த சீவன் (ஜீவாத்மா) சிவஸ்வரூபமே (பரமாத்மாவின் வடிவமே) என்பதை உணர்ந்து; நான் என்ற உணர்வின்மீதும், இந்த உயிர்மீதும் உடல்மீதும் உள்ளதான பற்று அழிபட்டு, பரஒளியில் ஞானம் பெருகி, மகிழ்ச்சி தரும் சித்தியை அடியேன் அடைந்து என்றென்றும் மகிழ்ந்திருக்குமாறு உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.