/

பகுதி - 286

திருமலை எனவும் திருப்பருப்பதம் எனவும் வழங்கப்படும் ஸ்ரீசைலம் தலத்துக்கான திருப்புகழ் இது.  ஆந்திராவில் கர்நூல்—நந்தியாலுக்குச் சற்றுத் தொலைவிருக்கும் தலம். 

Updated On :21 ஜூன் 2016, 10:09 am

திருமலை எனவும் திருப்பருப்பதம் எனவும் வழங்கப்படும் ஸ்ரீசைலம் தலத்துக்கான திருப்புகழ் இது.  ஆந்திராவில் கர்நூல்—நந்தியாலுக்குச் சற்றுத் தொலைவிருக்கும் தலம்.  பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இங்குள் மல்லிகார்ச்சுனரும் ஒருவர்.  எனவே இத்தலத்துக்கு மல்லிகார்ச்சுனபுரம் என்றும் பெயர்.

அடிக்கு இருபத்தெட்டு எழுத்துகளும்; 27ம் எழுத்து நீங்கலாக எல்லா எழுத்துகளும் குறிலாகவும், 27ம் எழுத்து மட்டும் நெடிலாகவும் அமைந்த பாடல். 

இறைவனுடைய தரிசனத்தைப் பெறும் பேற்றைக் கோருகிறது இப்பாடல்.

தனதன தனதன தனதன தனதன
      தனதன தனதன                      தனதான

ஒருபது மிருபது மறுபது முடனறு
         முணர்வுற இருபது               முளநாடி
      உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
         வெளியொடு வொளிபெற         விரவாதே
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
         திரிதொழி லவமது               புரியாதே
      திருமகள் மருவிய திரள்புய அறுமுக
         தெரிசனை பெறஅருள்            புரிவாயே
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
         பயறொடு சிலவகை              பணியாரம்
      பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
         எழுதிய கணபதி                 யிளையோனே
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
         பிணிகெட அருள்தரு             குமரேசா
      பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
         பிணையமர் திருமலை           பெருமாளே.

</p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270150885&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.