குன்றுதோறாடல் பாடல்களாக உள்ள ஐந்து பாடல்களில் மூன்றாவதாக இன்றைய பாடலைப் பார்க்கிறோம். ‘உன் பாதத் தாமரையைத் தந்தருள்வாய்’ என்று திருவடியைப் பெறுதலைக் கோருகிறது. கடைசியடியில் ‘கொந்துசேர் சோலை மேவிய குன்று’ என்பதால் இதைப் பழமுதிர்ச் சோலையாகவும் கொள்ள இடமிருக்கிறது. சோலை மேவிய குன்று என்பது இத்தலத்தையும் குறிக்கலாம். ஆனால் தெளிவாகக் ‘குன்றுதோறாடல் மேவிய பெருமாளே’ என்று முடிவதால் இது குன்றுதோறாடல் பாடல்களின் வரிசையிலே வைக்கப்படுகிறது.
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன தனதான
வஞ்சமேகோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வண்கணா ரார வாரமு மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவிச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270151608&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

