திருப்போரூரில் சூரனோடு பொருது, சூரசம்ஹாரத்துக்குப் பிறகு சினம் தணிந்து அமர்ந்த மலை என்பதால் திருத்-தணிகை என்று வழங்கப்படும் தலத்துக்கான பாடல் இது. முற்றிலும் வல்லொற்றுகளாலும் குறில் இணையால் அமைந்த நிரையசையாலும் நடக்கும் இந்தப் பாடலில், ஒவ்வோர் அடியிலும் ஈற்றுச்சீரில் மூன்றாவது எழுத்து நெடிலாகவும், கடைசி எழுத்து (மடக்கி இருக்கும் அடிகள் நீங்கலாக — எளிதாகச் சொல்ல வேண்டுமானால் — ஒன்றுவிட்டு ஒன்று பயிலும் அடிகளில்) மெல்லொற்றாகவும், மடக்கடிகளில் மூன்று நான்கு ஆகிய இரண்டெழுத்துகளும் (கடைசிச் சீரில் மட்டும்) நெடிலாகப் பயிலும் நேர்த்தியைப் பார்க்கலாம்.
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் - தனதான
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத் துமொய்த்தமைக் - குழலார்தங்
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற்
கழற்பதத் தடுத்திடற் - கறியாதே
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத்
திசைத்தசைத் தசுக்கிலத் - தசைதோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத்
தெனக்குநித் தமுத்தியைத் - தரவேணும்
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப்
பயத்தினிற் பயப்படப் - பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப்
படைத்தகுக் குடக்கொடிக் - குமரேசா
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப்புயத் - தணைவோனே
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் - பெருமாளே.
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/249443134&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






