பதச் சேதம் | சொற் பொருள் |
| கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார் தம் | கனத்த: கனமான; அறப் பணைத்த: முற்றிலும் பருத்த; பொன்: அழகிய; கழை: மூங்கில்; கனத்தை: மேகத்தை; |
| கறுத்த மை க(ண்)ணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே | ஒருத்த: ஒப்பற்றவனே; அடுத்திடற்கு: அணுகுதற்கு, சேர்வதற்கு |
| இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால் | இனப்பிணி: தொகுதிகளான நோய், நோய்க்கூட்டம்; துருத்தி: உலையை ஊதும் கருவி—bellows; இசைத்து: ஒலிசெய்து; அசைத்து: கட்டப்பட்டு; சுக்கிலம்: இந்திரியம்; |
| எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இப் பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும் | கடம், கடத்தினை: உடல், உடலினை; பொறுக்கும்: சுமக்கும்; |
| பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா | பனைக்கரம்: பனைமரம் போன்ற துதிக்கை; இபத்தன்: (வெள்ளை) யானையை உடையவன்—இந்திரன்; அரக்கனை: சூர பத்மனை; பயத்தினில்: நீரில், கடலில்; பயப்பட: அஞ்சும்படி; |
| பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா | பருப்பதம்: பர்வதம், மலை; முள்பதம்: முள் உள்ள கால்களை உடைய; குக்குடம்: சேவல்; |
| தினைப் புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்கு உற திரு புயத்து அணைவோனே | தினைப்புனப் பருப்பதம்: தினைப்புனத்தைக் கொண்ட பர்வதமான வள்ளிமலை; செருக்குற: பெருமிதத்துடன்; அணைவோனே: தழுவியவனே; |
| திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே. | திருப்புரம்: அழகிய ஊர்; புறத்து: வெளிப்பக்கத்தில்; திருத்தகு: இலக்குமிகரமான; து: தூய்மையான; நித்திலம்: முத்து; திருத்திசை: புண்ணிய திசையான வடக்கில்; |

கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி… திண்மையும் மிகப் பருமையும் உடைய அழகிய தோள்களும் மார்பகமான மலைகளும்;

கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார் தம்… மேகத்தை ஒத்த கரிய கூந்தலும் உடைய பெண்களுடைய,

கறுத்த மை க(ண்)ணில் கருத்து வைத்து… மைதீட்டிய கரிய கண்களில் எண்ணத்தைச் செலுத்தி,

ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே… ஒப்பற்றவனே! உன் கழலணிந்த பாதத்தைத் தேடிவருவதை அறியாமல்,

இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து… நோய்க்கூட்டத்துக்கு இருப்பிடம் எனவும்; கொல்லர் உலைத் துருத்தியைப் போலவும்,

இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால்… (பெருமூச்சால் வரும்) ஒலியை எழுப்பிக் கொண்டு, விந்து, மாமிசம் தோல் இவற்றாலே கட்டப்பட்டு,

எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இப்பிறப்பு அறுத்து… எடுக்கப்பட்ட, நிலையற்ற உடலைச் சுமந்து திரிகின்ற இந்தப் பிறவியை ஒழித்து,

எனக்கு நித்த முத்தியை தரவேணும்… எனக்கு அழியாத முக்தியைத் தரவேண்டும்.

பனைக்கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை… பனைமரம் போன்ற துதிக்கையையும் கோபத்தையும் உடைய ஐராவதமாகிய யானைக்கு உரியவனான இந்திரனை விரட்டிய அரக்கனான சூரபத்மனை,

பயத்தினில் பயப்பட பொரும் வேலா… (பயம்—payam—நீர், கடல்) கடலுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும் வண்ணம் அஞ்சவைத்துப் போரிடுகின்ற வேலனே!

பருப்பத செருக்கு அற துகைக்கும்… கிரெளஞ்ச பர்வதத்தின் செருக்கு கெடுமாறு மிதித்துத் துகைக்கின்ற,

முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா… முள்ளை உடைய காலைக் கொண்ட சேவலைக் கொடியாக உயர்த்தியுள்ள குமரேசனே!

தினைப்புன பருப்பதத்தினில்… தினைப்புனங்கள் நிறைந்த பர்வதமான வள்ளிமலையைக்,

குடிக் குறத்தியை செருக்கு உற திரு புயத்து அணைவோனே… குடிகொண்டவளான வள்ளிப் பெருமாட்டியைப் பெருமிதம் தோன்ற அழகிய புயங்களால் தழுவிக்கொள்பவனே!

திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில… அழகிய ஊரின் வெளிப்புறத்திலே லட்சுமிகரம் பொருந்தியதும் தூயதுமான முத்துக்கள் இறைந்திருக்கும்,

திரு திசை திருத்தணி பெருமாளே… (தமிழகத்தின் வட எல்லையான) புண்ணிய திசையில் அமைந்துள்ள திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

பனை மரம் போன்ற துதிக்கையை உடைய ஐராவதத்துக்கு உரியவனான இந்திரனைத் துரத்திய அரக்கனான சூரபத்மன், அஞ்சிப்போய் நீருக்கடியில் ஒளிந்துகொள்ளும் வண்ணமாகப் போர்புரிந்தவனே! கிரெளஞ்ச மலையின் செருக்கு அழியுமாறு மிதித்த முள்காலை உடைய சேவலைக் கொடியாகப் பிடித்திருப்பவனே! தினைப்புனங்கள் நிறைந்ததான வள்ளிமலையில் குடிகொண்டவளான வள்ளியை அழகிய புயங்களால் தழுவிக்கொண்டவனே! அழகு பொருந்தி ஊருக்கு வெளிப்புறத்திலே மங்களகரமானதும் தூயதுமான முத்துக்கள் இறைந்துள்ள (தமிழகத்தின்) வடதிசைப் பதியான திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!

திண்மையும் பருமையும் கொண்ட மலைபோன்ற மார்பகங்களையும், மூங்கிலைப் போன்ற தோள்களையும், மேகத்தைப் போல கரிய கூந்தலையும், மை தீட்டிய கண்களையும் உடைய பெண்களிடம் என் கருத்தை வைத்து, ஒப்பற்ற உன் திருவடிகளை நாடும் எண்ணம் இல்லாமல்; கொல்லர் உலைத் துருத்தி போன்றதும், பெருமூச்சின் ஒலியைக் கொண்டதும், விந்து, மாமிசம், தோல் ஆகியவற்றால் கட்டப்பட்டதுமான நிலையற்ற உடலைச் சுமந்து திரியும் இந்தப் பிறப்பை ஒழித்து எனக்கு அழியாத முத்தியைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை