பதச் சேதம் | சொற் பொருள் |
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர்காம தரங்கம் அலை வீரா
| கடகட கருவிகள்: கடகடவென ஒலிக்கும் பறை முதலான வாத்தியங்கள்; தப: கெடுக்கும்படி, குறையும்படி (கீழே விளக்கக் குறிப்பில் காணவும்); தரங்கம்: அலை, கடல்; அலைவீரா: அலைத்த, வருத்திய வீரனே; |
கன கத நக(ம்) குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட
| கனம்: பெருமை வாய்ந்த; கதம்: சினம்; நகம்: நாகம், யானை; குலி: குலத்தைச் சேர்ந்த; நககுலி: குலயானையான ஐராவதம் வளர்த்த தேவானை; புணர்: தழுவும்; காம அத்தன்: மன்மதனுடைய தந்தையான திருமால்; அம்புயன்: பிரமன்; |
வட சிகரி தவிடு பட நடம் இடும் மாவில் புகும் கந்த வழாது
| வடசிகரி: மேருமலை; மா: குதிரை—மயிலுக்கு ஆகுபெயர்; மாவில் புகும்: மயில்மீது ஏறும்; வழாது: தவறுதல் இல்லாமல்; |
வழி வழி தமர் என வழி படுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான்
| வழிவழி: பல தலைமுறைகளாக; தமர் என: தம்முடையவன், உறவினன், அன்பன் என்னும்படியாக; வழிபடுகிலன்: உன்னை வழிபடவில்லை; அவா: ஆசை—மண் பெண் பொன்னாசையும்; விக்கினம்: (மற்ற) தடைகளும்; பொன்றிடுமோ: அழிந்திடுமோ; |
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே
| அடவி: காடு; இருடி: ரிஷி, முனிவர்; அபிநவ: புதிய, புதுமையான, அற்புத; அயர்வோனே: (சென்று சென்று) தளர்ந்தவனே |
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே
| அவசமுடன்: வசமிழந்து, மயங்கிய நிலையில்; அ: அந்த; ததி திரிதரு கவி: வெஞ்சுரம் (பாலையில்) திரிந்துகொண்டிருந்த சிவகவியை; ஆள: ஆண்டருள; புயம்கொண்டு: வேலைத் தோளில் வைத்து; |
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே
| இடம்: இடது பாகத்தில்; ஒரு: ஒப்பற்ற; மரகத மயில்: பச்சை மயிலுக்கு; மிசை: விட; வடிவுள: அழகுள்ள; ஏழைக்கு: உமாதேவிக்கு; இடங்கண்டவர்: உமா மகேசுரர்; வாழ்வே: செல்வமே; |
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே.
| இதமொழி: இனிய வணக்கமான மொழி; மதமொழி: ஆணவம் நிறைந்த பேச்சு; ஏழை: அடியேன்; |

கருவிகள் தப—தப, தபு என்ற சொற்களுக்கு அழிக்கின்ற, ஒன்றை அழித்துத் தான் மேல்எழுகின்ற என்று பொருள். பகைகடிதலில் பாம்பன் சுவாமிகள்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே

அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே

இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே

குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே.

என்பதைக் காண்க. இருள்தபும் = இருளை அழித்து மேம்படும்; ஒளியுருவே: ஒளிபடைத்த உருவே.

கடகட கருவிகள் தப… கடகட என்று ஒலி எழுப்பும் பறை முதலான வாத்தியங்களின் (ஓசையைக்) கெடுக்கும்படி, (அழிக்கும்படி, அவற்றுக்கும் மேலாக ஒலிக்கும்படி)

வகிர் அதிர் கதிர்காம தரங்கம் அலை வீரா… வரிகளால் வகிரப்பட்ட புலிகளின் உறுமல் உரத்து ஒலிக்கும் கதிர்காமனே! கடலை அலைத்து வருத்திய வீரனே!

கன கத நக(ம்) குலி புணர் இத குண குக… பெருமை பொருந்தியதும் கோபத்தை உடையதுமான சிறந்த யானையான ஐராவதம் (வளர்த்த தேவானையைத்) தழுவுகின்ற இனிமையான குணத்தையுடையவனே! குகனே!

காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட… மன்மதனுக்குத் தந்தையான திருமால் அஞ்சும்படியும், பிரமன் ஓடும்படியும்;

வட சிகரி தவிடு பட நடம் இடும்… மேருமலை தவிடுபொடிபடும்படியாக ஆடுகின்ற;

மாவில் புகும் கந்த … (ஆடும்பரியான) மயில்மீது ஏறுகின்ற கந்தா!

வழாது வழி வழி தமர் என வழிபடுகிலன்… வழுவாமல் (தவறாமல்) பரம்பரை பரம்பரையாக அன்பன் என்று சொல்லும்படியாக நான் உன்னை வழிபடவில்லை;

என் அவா விக்கினம் பொன்றிடுமோதான்… என்னுடைய மண், பெண் பொன் என்ற மூவாசைகளும், மற்ற தடைகளும் என்றானும் ஒருநாள் அழிந்திடுமோ?

அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய்… காட்டில் தவம் செய்தவரான சிவமுனிவருடைய குமாரத்தியான வள்ளிக்கு அடிமையாகி,

அப்புனம் சென்று அயர்வோனே… அவள் இருக்கும் தினைப்புனத்துக்குச் சென்று சென்று திரும்பித் தளர்ச்சியடைந்தவனே!

(அன்பின் மிகுதியால் சொல்லப்படும் கேலி மொழி)

அவசமுடன் அ ததி திரிதரு கவி… தன்வசமிழந்து மயங்கிய நிலையில் அன்றொருநாள் பாலைவனத்திலே திரிந்த சிவகவியை

(சிவகவி, ‘கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்’ என்று சொன்னவர். இவரை ஆட்கொள்வதற்காக முருகன் அவரெதிரில் தோன்றி, முட்டையைப் பாடச் செய்தான். இதை 19, 20 ஆகிய தவணைகளில் விவரித்துள்ளோம்.)

ஆள புயம் கொண்டு அருள்வோனே… ஆண்டருள்வதற்காக வேலைத் தோளில் ஏந்திச்சென்று அருளியவனே!

இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள… இடது பாகத்திலே, பச்சைமயிலை விடவும் அழகு நிறைந்தவளான,

ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே… உமைக்கு இடம் கொடுத்த உமாமகேஸ்வரனுடைய செல்வமே!

இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும்… (நான் உன்னை) கனிவான, இதமான மொழிகளாலே துதித்தாலும், (என்னை மறந்துபோய்) ஆணவப் பேச்சுகளாலேயே உன்னைப் பேசினாலும்*

ஏழைக்கு இரங்கும் பெருமாளே… ஏழை (பலவீனனான) அடியேனுக்கு இரங்கி அருள்கின்ற பெருமாளே!

* மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்

வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்

கைதா னிருப துடையான் தலைப்பத்துங் கத்தரிக்க

எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே

என்பது கந்தரலங்காரம். முத்தமிழால் வைதாலும் வாழ வைப்பவன்.

சுருக்க உரை

காட்டிலே தவமிருந்த சிவமுனிவரின் குமாரியான வள்ளியம்மைக்கு அடிமையாகி அவளிருந்த தினைப்புனத்துக்குப் போய்ப்போய்த் தளர்ச்சியடைந்தவனே! உன்னைப் பாட மறுத்த சிவகவி என்னும் பொய்யாமொழிப் புலவர் ஒருமுறை பாலைவனத்திலே தளர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற சமயத்திலே அவரை ஆட்கொள்வதற்காக, தோளில் சாத்திய வேலோடு காட்சி தந்தவனே! மரகதமயிலை விஞ்சும் மயிலான உமாதேவியை இடதுபாகத்தில் வைத்தவருடைய செல்வமே! முத்தமிழாலே வைதாலும் வாழ்த்தினாலும் எளியேன்பால் நீங்காத அன்புகொண்ட பெருமாளே!

பறை முதலான கருவிகளின் முழக்கங்களையும் மீறிக்கொண்டு எழுவதான உறுமலோசையை உடைய வரிப்புலிகள் திரியும் கதிர்காமத்தில் கடலை வருத்திய வீரனே! மிகச் சிறந்த யானையான ஐராவதம் வளர்த்த தேவசேனையம்மையைத் தழுவிய இனிய குணத்தை உடையவனே! திருமால் அஞ்சும்படியும்; பிரமன் ஓடும்படியும்; மேருமலை தவிடுபொடி படும்படியும் நடனமாடும் மயில் மீது ஏறிவருகின்ற கந்தனே!

அடியேன் உனக்கு வழிவழியாக — தலைமுறை தலைமுறையாக — அன்பன் என்று சொல்லத்தக்க அளவிலே வழிபட்டவன் அல்லன். (அப்படியே இருந்தாலும்) என்னுடைய மூவாசைகளையும் மற்றும் உள்ள தடைகளையும் நீக்கி அழித்து ஆட்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை