பதச் சேதம் | சொற் பொருள் |
| கடாவின் இடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும் | கடாவினிடை: எருமைக் கடாவின் மேல்; கடாவின் நிகர்: கடாவை ஒத்த; சமனார்: யமனார்; |
| கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும் | கடாவுதல்: செலுத்துதல்; கெடாத வழி: தவறாத வழி; |
| இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும் | இடாது: யாருக்கும் கொடுக்காது; பலதேடும்: பலவற்றைத் தேடிச் சேர்த்துவைக்கும்; கிராதர்: வேடர், கொடியவர்; உயிர்கோலி: உயிரைப் பறித்து, கவர்ந்து; |
| இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய் | இருபோதும்: காலையிலும் மாலையிலும்; |
| விடாது நட நாளும் பிடாரி உடன் ஆடும் வியாகரண ஈசன் பெரு வாழ்வே | விடாது நடநாளும்: நாளும் விடாது நடம்; பிடாரி: காளி; வியாகரணம்: இலக்கணம்; பெருவாழ்வே: பெருஞ்செல்வமே, மகவே; |
| விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசம் உற வேல் அங்கு எறிவோனே | விகாரம்: துர்குணம்; பகார: அலங்காரமான; விநாசம்: அழிவு; |
| தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தான் ஐம்புலனோடும் | தொடாது: தொடமுடியாதபடிய; தடாது: தடுக்கப்படாமல்; மிக ஓடும்: அளவு கடந்து ஓடும்; |
| சுபானம் உறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமி மலை வாழும் பெருமாளே. | சுபானம்: பருகச் சுலபமான—ஆகவே ஆகுபெயராக நல்லபடி உள்ளே அடங்கிய; ஞானம் தபோதனர்கள்: ஞானத்தை உடைய தவசீலர்கள்; |

கடாவின் இடை வீரம் கெடாமல் இனிது ஏறும்… தன் வீரம் சற்றும் குறையாமல் எருமைக் கடாவின்மேல் இனிதே ஏறுகின்ற,

கடாவின் நிகர் ஆகும் சமனாரும்… (கரிய நிறத்தால்) கடாவையே ஒத்த யமன்,

கடாவி விடு தூதன் கெடாத வழி போலும்… செலுத்தி அனுப்பிய யமதூதனுடைய தவறாத பாதையைப் போலவும்;

கனாவில் விளையாடும் கதை போலும்… (கண்விழித்தால் கலைந்து போகும்) கனவிலே விளையாடிக் களிப்பது போன்றதுமான (இந்த வாழ்விலே),

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல்… பலவற்றையும் தேடிச் சேகரித்து வைத்து மற்றவர்களுக்கு எதையும் கொடுக்காத—ஈயாத—கொடியவர்வளுடைய பொருளைப்போல (கணத்தில் அழிகின்ற ஒன்றாக) இங்கே இருக்காமல்;

உயிர் கோலி இங்கு இதமாகும் இது ஆம் என… (யமன்) உயிரைப் பறித்துக்கொண்டு செல்கின்ற ஒன்றே இவ்வாழ்வில் கிடைக்கிற சுகமாகும் என்பதை உணர்ந்து,

இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய்… காலையிலும் மாலையிலும் எப்போதும் இனிய மொழிகளால் அடியேனும் உன்னுடைய திருநாமத்தை ஓதும்படி கடைக்கண்ணால் பார்த்தருள்வாய்.

விடாது நட நாளும் பிடாரி உடன் ஆடும்… (அன்வயம்: பிடாரியுடன் நாளும் விடாது நடமாடும்) என்றென்றும் காளியோடு—விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து—நடனமாடுகின்ற,

வியாகரண ஈசன் பெரு வாழ்வே… (நடன) இலக்கணத்தின் வடிவமான ஈசனாருடைய பெரும்செல்வமே (மகனே!

விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும்… துர்க்குணம் கொண்ட சூரனுடைய அலங்காரமான (ஆடம்பரமான) வாழ்க்கையும்,

விநாசம் உற வேல் அங்கு எறிவோனே… அழியும்படியாக அன்று வேலை விடுத்தவனே!

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தான் ஐம்புலனோடும்… தொடமுடியாத எல்லைக்கெல்லாம் நீண்ட தொலைவுக்குத் தடையில்லாமல் அளவு கடந்து ஓடுகின்ற மூச்சையும், ஐம்புலன்களையும்,

சுபானம் உறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமி மலை வாழும் பெருமாளே… எளிதில் பருகுகின்ற பானத்தைப்போலக் குடித்து ஞானத்தால் அவற்றை உள்ளே அடக்கிய ஞானத் தவசீலர்கள் ஒன்றுகூடி இருப்பதான சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

காளியோடு என்றென்றும் விட்டுக்கொடுக்காமல் (போட்டிபோட்டுக் கொண்டு) நடமிடுபவரும், நடன இலக்கணத்தின் வடிவே ஆனவருமான ஈசனாருடைய மகனே! துர்க்குணம் கொண்டவனாகிய சூரனுடைய படாடோபமான வாழ்வு அழியும்படி வேலை எறிந்தவனே! தொடமுடியாத எல்லைக்கெல்லாம் நீண்டதூரத்துக்குத் தடையில்லாமல் ஓடுபவையான மூச்சுக் காற்றையும் ஐம்புலன்களையும், எளிதில் பருகுகின்ற பானத்தைப்போலக் குடித்து ஞானத்தால் அவற்றை உள்ளுக்குள்ளே அடக்கி வைத்துள்ள தவசீலர்கள் கூடியிருப்பதான சுவாமிமலையிலே வீற்றிருக்கும் பெருமாளே!

விழித்தால் கலைந்துபோகின்ற கனவில் நடத்துகின்ற களியாட்டத்தைப் போன்றதுமான இந்த வாழ்வில்; என்னதான் யாருக்கும் கொடுக்காமல் சேர்த்து வைத்த செல்வமென்றாலும் அது கணப்போதிலே மறைந்து போவதைப் போல இங்கே வாழாமல்; கடா எருமையின் மீது ஏறுகின்ற, நிறத்தால் கடாவையே ஒத்த கரிய யமனால் செலுத்தப்பட்ட யமதூதர்களுடைய தவறாத பாதையைப் போல (சர்வநிச்சயமாக); உயிரை யமன் பறித்துக்கொண்டு போகும் ஒன்றுதான் இவ்வாழ்வில் கிடைக்கும் சுகம் என்பதை உணர்ந்து இரவு பகல் தவறாமல் நான் எப்போதும் உன்னுடைய திருநாமத்தையே ஓதுகின்ற நல்லறிவைப் பெறும்படி கடைக்கண் பார்த்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை