பதச் சேதம் | சொற் பொருள் |
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும் | இராவின்: இரவின்; பராவும்: பரவியுள்ள; குழல்: கூந்தல்; |
இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு | இராக மொழி: இசையைப் போன்ற இனிய மொழி; பொறாத: பாரத்தைத் தாங்க முடியாத; இராத: இல்லாத; |
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் | அராவி: அரத்தால் அறுப்பது போல; இருபோதும்: இரண்டு வேளையிலும்; அடாத விலை கூறும்: அதிகப் பணம் கேட்கும்; |
அன்பு அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே | அன்பு: ஆசை; அடாமல்: பீடிக்கப்படாமல் (அடுதல்: போரிடுதல்> தோல்வியடைதல்> பீடிக்கப்படுதல்); அநாதி மொழி ஞானம்: தொடக்கமற்றதான ; |
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே |

குணாலம் இடு சூரன் பணா முடிகள் தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே | குணாலம் இடும்: கொக்கரிக்கும்; பணாமுடி: பருத்த தலை; குடாவி: துளைபட்டு, வளைந்து; |
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும் | துரால்: செத்தை; நூறும், நூறுதல்: வெட்டுதல், பொடியாக்குதல், அழித்தல்; |
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமி மலை வாழும் பெருமாளே. | சுபானம்: பருகச் சுலபமான—ஆகவே ஆகுபெயராக நல்லபடி உள்ளே அடங்கிய; ஞானம் தபோதனர்கள்: ஞானத்தை உடைய தவசீலர்கள்; |

இராவினிருள் போலும் பராவுகுழலாலும் ... இரவின் இருளைப் போல கரியதும் பரவியதுமான கூந்தலாலும்;

இராமசர மாகும் விழியாலும் ... இராமபாணத்தைப் போன்ற கூர்மையான கண்களாலும்;

இராகமொழியாலும் ... ராகத்தோடு கலந்து இசையைப்போல ஒலிக்கின்ற பேச்சாலும்;

பொறாதமுலையாலும் ... பொறுக்கமுடியாத பாரத்தை உடைய மார்பகங்களாலும்;

பாரமான மார்பகங்களாலும்,

இராத இடையாலும் ... இல்லவே இல்லையோ என்று நினைக்க வைக்கும் மெல்லிய இடையாலும்;

இளைஞோர்நெஞ்சராவி ... இளைஞர்களுடைய மனத்தை அரம்கொண்டு அராவுவதுபோல அறுத்து,

இரு போதும் பராவிவிழ வேவந்து ... காலையும் மாலையும் தங்களிடம் மயங்கித் தங்களையே போற்றும் வண்ணமாக (எதிரில்) வந்து,

அடாதவிலை கூறும் மடவார் ... அளவுக்கதிகமாகப் பணம் கேட்கும் பெண்களின்மேல்,

அன்பு அடாமல் அடியேனுஞ் சுவாமியடி தேடும் ... ஏற்படும் ஆசையின் பிடியில் அடியேன் அகப்பட்டுக் கொள்ளாமல், சுவாமி! உன்னுடைய திருவடிகளையே நாடுவதானதும்;

அநாதிமொழி ஞானந் தருவாயே ... தொடக்கமும் (ஆகவே முடிவும்) அற்றதாகிய ஞானமொழியை எனக்குத் தந்தருள வேண்டும்.

குராவின் நிழல் மேவுங் குமாரனென ... (திருவிடைக்கழியில்)
குரா மரத்தினடியிலே நிழலில் வீற்றுள்ள குமார மூர்த்தியே என்று

நாளுங் குலாவியினிது ஓது அன்பினர்வாழ்வே ... அன்புகொண்டு நாள்தோறும் உன் நாமத்தை ஓதும் அடியவர்களுடைய செல்வமே!

குணாலமிடு சூரன் பணாமுடிகள் தோறும் ... கொக்கரித்து ஆர்பரித்த சூரனுடைய பருத்த மகுடங்கள் ஒவ்வொன்றையும்,

குடாவியிட வேல் அங்கு எறிவோனே ... குடைந்து, வளைந்து சிதறும்படியாக அங்கெல்லாம் வேலை வீசியவனே!

துராலும் மிகு தீமுன்பு இராதவகை போலும் ... உலர்ந்த செத்தையானது தீயின் முன்னாலே ஏதுமில்லாமல் சாம்பலாகிப் போவதைப்போல,

தொடாமல்வினை யோடும் படிநூறும் ... வினையானது அடியாரைத் தொடுவதற்கு முன்னரே அதைப் பொடிப்பொடியாகச் செய்பவனே!

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும் ... (நற்குணங்கள் யாவற்றையும்) எளிதில் பருகுகின்ற பானத்தைப்போலக் குடித்து ஞானத்தால் அவற்றை உள்ளே அடக்கிய ஞானத் தவசீலர்கள் ஒன்றுகூடி இருப்பதான சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுவாமிமலை வாழும் பெருமாளே. ... சுவாமிமலையில் கொலுவிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

(திருவிடைக்கழியில்) குரா மரத்தின் நிழலில் வீற்றிருக்கும் குமாரப் பெருமானே என்று உன் திருநாமத்தை எப்போதும் ஓதுகின்ற அடியவர்களுடைய செல்வமே! கொக்கரித்தவனான சூரபதுமனுடைய மகுடங்கள் தொளைபட்டு வளைந்து சிதையும்படி வேலை வீசியவனே! உலர்ந்த செத்தையெல்லாம் தீயிலே சாம்பலாவதைப் போல, வினைகள் என்னை அணுகுவதன் முன்பே அவற்றைப் பொடிப்பொடியாக்குபவனே! ஞானத்தைப் பருகி உள்ளே அடக்கியுள்ள தவமுனிவர்கள் இருப்பதான சுவாமிமலையில் வீற்றிருப்பவனே!

இருட்டைப் போல கரிய கூந்தலையும்; இராம சரம் போன்ற விழியம்புகளையும்; இசைபோன்ற இனிய சொற்களையும்; பருத்த தனங்களையும் கொண்டு, இளைஞர்கள் மனத்தை வாள்கொண்டு அறுப்பதைப்போல அறுத்து, அவர்கள் தம்மையே போற்றிநிற்கும்படிச் செய்து, அளவுக்கதிகமான பணத்தைக் கொள்ளும் விலைமாதர்கள்மேல் ஏற்படும் ஆசை என்னைப் பீடிக்காதபடி; உன் திருவடிகளையே நாடுவதும், அநாதியானதுமான ஞானமொழியை எனக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை