மயில் வாகனனுடைய மயிலுக்குச் சரணாலயமே இருப்பதான விராலிமலைத் திருப்புகழ் இது. திருச்சியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். தேவியர் இருவரும் இருபுறமும் நிற்க, மயில் மீது விற்றிருக்கும் கோலத்தில் முருகன் காட்சி தருகிறான்.
பாடலைப் பார்த்தால் இது முருகனுக்கான பாடலா அல்லது சிவபெருமானுக்கான பாடலா என்று ஐயமே எழுந்துவிடும். கரிபுராரி, காமாரி, திரிபுராரி, தீயாடி, கர உதாசன ஆசாரி, பரசுபாணி, பானாளி, கணமோடு ஆடி, காயோகி, சிவயோகி, பரமயோமி, மாயோகி, அரா ஜடா சூடி, பகரொணாத மாஞானி, பசுவேறி… என்று சிவ நாமார்ச்சனையே நடத்திவிடுகிறார். ‘தீயாடி, கணமோடு ஆடி, பசுவேறி’ என்பதையெல்லாம் பார்க்கும் போது,
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
என்றெல்லாம் உரிமையோடு பேசும் சம்பந்த மூர்த்தி சுவாமிகள் நினைவுக்கு வருகிறார். (நீர் பத்து ஊர்களுக்குப் போய்ப் பலவிதமாகப் பாட்டுப் பாடிக்கொண்டு பிச்சையெடுப்பவர்; பிச்சையிட வரும் பெண்களிடம் பொய்பேசிக் கள்ளத்தனமாய்த் திரிபவர்; செத்தவர்களுடைய எலும்பையெல்லாம் எடுத்து மாலையாகப் போட்டுக்கொண்டு மாட்டின் மேலே ஏறிக்கொண்டு திரிபவர்; இருக்கின்ற அத்தனை செல்வத்தையும் என் கண்ணுக்குத் தென்படாமல் ஒளித்துவைத்துக் கொள்வீர், எனக்கு மட்டும் என்றும் இரக்கம் காட்ட மாட்டீரே! — திருநாகைக் காரோணம்)
இந்தப் பாடலில் கேட்பதும் சிவபெருமானுடைய ஞான நிலைக்குள் நான் புக அருளாயோ என்றுதான்.
இன்றைய திருப்புகழைப் பார்ப்போம்.
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி ...... கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி ...... சிவயோகி
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத ...... அருளாயோ
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி ...... வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும்
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு ...... கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252291305&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

