ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

பகுதி - 191

முருகா!  பசுமைப் பொலிவுள்ள கடற்கரையில் இருக்கும் குன்று முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிரம்பிக் கிடப்பதான அழகிய திருச்செந்தூரில்

Updated On :24 மார்ச் 2016, 7:07 am

பதச் சேதம்

சொற் பொருள்

துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற  நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளிஅற: முற்றிலும்; ஒளி: (உடலின்) ஒளி, தேசு, தேஜஸ்;
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே துஞ்சும்: மங்கி; பெண் சஞ்சலம்: பெண்களிடத்திலே மயங்கி;
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி இன்பம் தந்து: இன்பத்தைத் தந்து (தரவல்ல); உம்பர்: தேவர்; பத கஞ்சம்: திருவடித் தாமரை;
என்றென்றும் தொண்டு செ(ய்)யும்படி அருள்வாயே
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி  நின் பங்கு: உன் அருகில்; ஒன்றும்: பொருந்தி நிற்கும்; குறமின்: குறக்குல மின்னல்—வள்ளி; சரணம் கண்டு: திருவடிகளைக் கண்டு;
நின்று அன்பின்தன் படி கும்பிடும் இளையோனே அன்பின்தன் படி: அன்பின் முறைப்படி;
பைம் பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி பைம்பொன்: பசுமைப் பொலிவு; சிந்து: கடல்; சிந்தின் துறை: கடற்கரை;
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே. பம்பும்: நெருங்கிக் கிடக்கும், நிறைந்திருக்கும்; தென்: அழகிய;

துன்பங்கொண்டு அங்கம் மெலிந்து ... (பெண்களிடம் ஏற்படும் மயக்கத்தாலே) மனத்தில் துன்பம் கொண்டு, உடல் இளைத்து,

அற நொந்து ... முற்றிலும் மனம் நொந்துபோய்,

அன்பும் பண்பும் மறந்து ... அன்பு, நல்ல குணங்கள் எல்லாவற்றையும் மறந்துபோய்,

ஒளி துஞ்சும் ... உடலின் ஒளி மங்கிப் போகச் செய்கின்ற

பெண் சஞ்சல மென்பதில் ... பெண்களிடத்திலே ஏற்படும் மயக்கம் என்பதை,

அணுகாதே ... நான் நெருங்கி அதிலே சிக்கிக் கொள்ளாமல்,

இன்பந்தந்து ... (என்றும்) இன்பத்தைத் தருவதும்,

உம்பர் தொழும்பத கஞ்சம் ... தேவர்கள் தொழுவதுமான உன் பாதத் தாமரையையே

தம் தஞ்ச மெனும்படி ... தனக்குத் தஞ்சம், புகலிடம் என்று உள்ளத்தில் கொண்டு,

என்றென்றுந் தொண்டு செயும்படி அருள்வாயே ... எப்போதும் உன் பாதமலர்களைப் பணிந்து சேவை செய்யும்படியாக எனக்கு அருள்புரிய வேண்டும்.

நின்பங்கு ஒன்றும் ... உன் அருகிலே நெருங்கி உன்னோடு ஒன்றி நிற்கின்ற,

குற மின்சரணங் கண்டு ... குறமகளும், மின்னல் போன்றவளுமான வள்ளியம்மையின் திருவடிகளைக் கண்டு,

உன் தஞ்ச மெனும்படி நின்று ... உனக்குப் புகலிடம் அவையே என்று கொண்டு

அன்பின் தன்படி ... அன்புடைய இயற்கையின்படி,

கும்பிடு மிளையோனே ... அம்மையின் பாதத்தைத் தொழுகின்ற இளையவனே!

பைம்பொன் சிந்தின் ... பசுமைப் பொலிவை உடைய கடலின்

துறை தங்கிய ... கரையிலே இருப்பதான

குன்றெங்குஞ் சங்கு வலம்புரி பம்பும் ... குன்றில் எல்லா இடங்களிலும் சங்கு, வலம்புரிச் சங்கு எல்லாமும் நிரம்பிக் கிடக்கின்ற

தென் செந்திலில் வந்தருள் பெருமாளே. ... அழகிய* திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

(* தென் என்ற சொல்லுக்கு, தெற்கு என்பதோடு, அழகு, கற்பு, இசை, இசைப்பாட்டு, இனிமை என்றெல்லாம் பொருளுண்டு).

சுருக்க உரை

முருகா!  பசுமைப் பொலிவுள்ள கடற்கரையில் இருக்கும் குன்று முழுவதிலும் சங்கும் வலம்புரியும் நிரம்பிக் கிடப்பதான அழகிய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமாளே!  உன் அருகிலே நெருங்கி நிற்பவளான குறக்குல மின்னல் போன்ற வள்ளியின் பாதங்களையே உன்னுடைய புகலிடமாக — தஞ்சமாகக் — கொண்டு அன்பின் மிகுதியாலே அந்தப் பாதகமலங்களைத் தொழுதவனே!

பெண்களால் ஏற்படும் மயக்கத்தில் சிக்கிக் கொண்டு அதனாலே துன்பமடைந்து, உடல் மெலிந்து, முற்றிலும் வருத்தமடைந்து; அன்பு, நல்ல குணங்கள் எல்லாவற்றையும் இழந்துபோகும்படி அந்த மயக்கத்தால் நான் வாடாமல்,

நிலையான இன்பத்தைத் தருவதும், தேவர்கள் வந்து வணங்குவதுமான உன்னுடைய பாதகமலங்களையே எம்முடைய தஞ்சம் என்று கொண்டு என்றென்றும் உன் திருவடிகளுக்கே தொண்டாற்றும்படி அருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.