ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 228

இன்றைய திருவண்ணாமலைத் திருப்புகழ், மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.  நாராயணனைப் பாடுவதைப் போலவே, நாராயணியைப் பாடுவதென்றாலும் அருணகிரியாருக்கு உலகம் மறந்துவிடும். 

Updated On :30 ஏப்ரல் 2016, 9:17 am

இன்றைய திருவண்ணாமலைத் திருப்புகழ், மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒன்று.  நாராயணனைப் பாடுவதைப் போலவே, நாராயணியைப் பாடுவதென்றாலும் அருணகிரியாருக்கு உலகம் மறந்துவிடும். 

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றுவன்வந் தாலென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியாம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரம கல்யாணிதன் பாலகனே.

என்று அபிராம பட்டரே பாடாத விதத்தில் கந்தரலங்காரத்தில் பாடியவர் அவர்.  இறைவன் இறைவியைத் தன் இடப்பாகத்தில் வைத்ததாகத்தான் அனைவரும் பாடுவார்கள்.  இதில் இறையவன் உடையவன்; இறைவி உடைமைப் பொருள் என்ற பாவம்தான் தென்படும்.  மிகமிக அரிதிலும் அரிதாய்ப் பாடுகிறார் அருணகிரியார்: ‘த்யாகப் பொருப்பை… பாகத்தில் வைக்கும் பரம கல்யாணி’.  இறைவி உடையவளாகிறாள், இறைவன் உடைமையாகிறான்!  இந்தப் பாடலில் வந்துவிழும் அம்பிகையின் திருநாமங்களையும் குணங்களையும் பாருங்கள். 

தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன         தனதான


அமுத மூறுசொ லாகிய தோகையர்
         பொருளு ளாரையெ னாணையு னாணையெ
         னருகு வீடிது தானதில் வாருமெ        னுரைகூறும்
      அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்

         தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
         அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி  னருள்தாராய்
         குமரி காளிவ ராகிம கேசுரி    
         கவுரி மோடிசு ராரிநி ராபரி

         கொடிய சூலிசு டாரணி யாமளி            மகமாயி
       குறளு ரூபமு ராரிச கோதரி
         யுலக தாரிஉ தாரிப  ராபரி
         குருப ராரிவி காரிந மோகரி               அபிராமி

         சமர நீலிபு ராரித னாயகி
         மலைகு மாரிக பாலிந னாரிணி
         சலில மாரிசி வாயம னோகரி           பரையோகி
      சவுரி வீரிமு நீர்விட போஜனி

         திகிரி மேவுகை யாளிசெ யாளொரு
         சகல வேதமு மாயின தாயுமை         யருள்பாலா
         திமித மாடுசு ராரிநி சாசரர்
         முடிக டோறுக டாவியி டேயொரு

         சிலப சாசுகு ணாலிநி ணாமுண        விடும்வேலா
      திருவு லாவுசொ ணேசர ணாமலை
         முகிலு லாவுவி மானந வோநிலை
         சிகர மீதுகு லாவியு லாவிய            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/261630441&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.