இன்றைய திருப்புகழ் மிகவும் பிரபலமான ஒன்று. திருவாவினன்குடித் திருப்புகழ் இது. முருகனுடைய அருளைப் பெறப் பாடியது. ‘ஆதரம் பயில் ஆரூரர் தோழமை’ என்ற கடைசி அடியில் உள்ளதன் வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலேறிக்கொண்டு சுந்தரர் கயிலைக்குச் செல்லும்போது தன் நண்பரான சேரமான் பெருமாள் என்ற சேர அரசனை நினைக்கிறார். அவ்வாறு நினைப்பதை அறிந்த சேரமான் பெருமாள் ஒரு குதிரையிலேறிக்கொண்டு, சுந்தரரை அடைந்து அவருடைய யானையை வலம் செய்து, அவருக்கு முன்னால் கயிலையை அடைந்தார். ஆனால், இறைவனுடைய ஆணையின்றி வந்த காரணத்தால் அவருக்குக் கதவு திறக்கவில்லை; சுந்தரருக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருக்கும் சமயத்தில் ‘திருக்கயிலாய ஞான உலா’ என்ற நூலை அங்கேயே ஆசுகவியாக இயற்றினார். பிறகு சுந்தரர் வந்ததும், அவரோடு சேர்ந்துகொண்டு கயிலையில் பிரவேசித்து, இறைவன் முன்னிலையில் நூலை அரங்கேற்றினார். இதைத்தான் அருணகிரியார், ‘ஆதி அந்த உலா ஆசு’ என்று குறிப்பிடுகிறார். தமிழிலுள்ள எல்லா உலா நூற்களுக்கும் முதலாவது என்பதால் இதற்கு ‘ஆதி உலா’ என்றும் பெயர். பாடலைப் பார்ப்போம்.
தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன தனதான
நாத விந்துக லாதீந மோநம
வேத மந்த்ரசொ ரூபாந மோநம
ஞான பண்டித சாமீந மோநம வெகுகோடி
நாம சம்புகு மாராந மோநம
போக அந்தரி பாலாந மோநம
நாக பந்தம யூராந மோநம பரசூரர்
சேத தண்டவி நோதாந மோநம
கீத கிண்கிணி பாதாந மோநம
தீர சம்ப்ரம வீராந மோநம கிரிராஜ
தீப மங்கள ஜோதீந மோநம
தூய அம்பல லீலாந மோநம
தேவ குஞ்சரி பாகாந மோநம அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
ஓத லுங்குண ஆசார நீதியும்
ஈர முங்குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ் தலம்புகழ் காவேரி யால்விளை
சோழ மண்டல மீதேம நோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயி லையிலேகி
ஆதி யந்தவு லாவாசு பாடிய
சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262599114&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

