வேப்பஞ்சந்தி என்ற திருத்தலத்துக்கான பாடல் இது. ‘இது வேப்பூரோ அல்லது வேறு தலமோ விளங்கவில்லை’ என்று உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார். சேலம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை வெளியிட்ட பதிப்பில் “சென்னை—திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்குத் தெற்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ள வேப்பூர், அருணகிரியார் பரவிய வேப்பஞ்சந்தி என்னும் தலமாகக் கருதலாம். இத்தலத்தில் ஞானஸ்கந்தமூர்த்தி காட்சி அளிக்கிறார்” என்ற குறிப்பு காணப்படுகிறது. Kaumaram.com தளத்தில், “இக்கோயில் இருக்குமிடம் - விருதாச்சலத்திலிருந்து 22 கிமீ மேற்கில், உளுந்தூர் பேட்டையிலிருந்து 24 கிமீ தெற்கில், தொளுதூரிலிருந்து 19 கிமீ வடக்கில். (இணைய பார்வையாளர் திரு. ஷண்முகம் நாகராஜன் அவர்களின் குறிப்பு)” என்று குறித்திருக்கிறார்கள். இனி பாடல்.
தாத்தந் தந்தத் தந்தத் தனனத் தனதான
நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக் கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே
கூற்றின் பந்திச் சிந்தைக் குணமொத் தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/263754574&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

