பதச் சேதம் | சொற் பொருள் |
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன்
| கோளர்: கொண்டவர் (கொள்வது>கொள்கை என்பதுபோல்); |
நண்பு உக பாதம் அதில் அன்பு உற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல்
| நண்பு: நட்பு>அதிலிருந்து அன்பு>அதிலிருந்து பக்தி; நங்கள்: நம்முடைய; |
உன் செவிக்கு ஏறலை கொல் பெண்கள் மெல் பார்வையை கொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர்
| பெண்கள்மெல்: பெண்கள் மேல்—வள்ளி தேவானையரின் மீது; பார்வையை கொல்: பார்வையைக் கொண்டிருக்கிறாயா; (பார்வை பெயர்ச்சொல்; பார்வையை என்னும்போது இரண்டாம் வேற்றுமையாகாது, வினைச்சொல்லாகிறது); தாழ்வு செய்து: குறைத்து, தாமதித்து; மிஞ்சுவார்: வரம்பு மீறுவார்; |
உன் தனக்கே பரமும் என் தனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய்
| பரமும்: பாரமும் (விளக்கத்தில் காண்க); ஆவதினின்: உம்பர்: தேவர்; ஆவதைப் போல்; தோணாய்: தோன்றாய்; |
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே
| கஞ்சன்: கஞ்சம்—தாமரை—எனவே கஞ்சன் தாமரையில் வீற்றுள்ள பிரமன்; |
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய்
| கண் கயல்: மீன் போன்ற கண்; கஞ்சுகம்: சட்டை(யைப் போல இறுக்கமாக); |
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே
| வெற்பு: மலை; நிட்டூரர்: நிஷ்டூரர், கொடிய, இரக்கமற்றோம்; அந்தரத்து ஏற: (இறந்து) விண்ணில் ஏற; |
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே.
| அண்டம் முன்: அண்டம் முதலான; பொற்பு: அழகு; புலிசை: சிதம்பரம்; அம்பலம்: பொன்னம்பலம்; தம்பிரான்: அரசன், தலைவன்; |

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை ... (மனத்திலே) விஷம்போன்றதான வஞ்சத்தைக் கொண்டவர்களை,

நம்புதல் தீதெனநினைந்து நாயேன் ... நம்புவது தீயது என்று நினைத்த அடியேன்,

நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடி யுனை ... உன்னுடைய திருவடிகளின்மேல் நேசம் பெருக; அன்புகொண்டு உன்னைநோக்கி,

நங்களப்பா சரணமென்றுகூறல் ... எங்களுடைய அப்பனே சரணம் என்று கதறி முறையிடுகிறேனே, இது

உன்செவிக்கு ஏறலைகொல் ... உன்னுடைய (பன்னிரண்டு) காதுகளில் விழவே இல்லையோ?

பெண்கள்மெற் பார்வையைகொல் ... (அப்படி விழாதபடி நீ) உன் தேவியரான வள்ளி தேவானையரை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாயோ?

உன்சொலைத் தாழ்வுசெய்து மிஞ்சுவாரார் ... உன்னுடைய உபதேசத்தை, ஆணையை அலட்சியம் செய்து—தாமதித்து—வரம்பு மீறுபவர்களும் உள்ளனரோ?

உன்றனக்கே பரமும் ... என் பாரமெல்லாம் உனக்கே!

(மனிதனுக்கு உடல் ஒருபாரம் என்றால், அவனுடைய குடும்பம், அலுவல், இதர பொறுப்புகள், அற்பக் கவலைகள் எல்லாமே பாரந்தானே. அவையாவும் உன்னுடைய பாரமாகும். எல்லாப் பொறுப்பும் உன்னுடையதே.)

என்றனக்கு ஆர்துணைவர் ... நீயில்லாவிட்டால் எனக்குத் துணையென்று யாரிருக்கிறார்கள்?

உம்பருக்கு ஆவதினின்வந்து தோணாய் ... தேவர்களுக்கு எப்படித் துணையானாயோ அப்படியே என்முன்னாலும் துணையாக வந்து தோன்றவேண்டும்.

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய ... (எட்டித்) தாவி பிரமனை அவனுடைய முடியில் இயையும்படி—பொருந்தும்படி, அழுந்தும்படிக்—குட்டிவிட்டு,

மிகுகண்களிப்பாக விடு செங்கையோனே ... கண்களில் களிப்பு மின்ன (அவ்வாறு குட்டிய பிரமனை, ‘போகிறது’) என்று விட்டுவிட்ட சிவந்த கையை உடையவனே!

கண்கயற் பாவை குற மங்கைபொற்றோள்... கயற்கண்ணை உடைய குறப்பெண்ணான வள்ளியின் அழகிய தோளை,

தழுவு கஞ்சுகப் பான்மைபுனைபொன்செய்தோளாய் ... சட்டை தழுவுவதுபோல இறுகத் தழுவிய, பொன்போன்ற தோள்களை உடையவனே!

அஞ்சவெற்பு ஏழு கடல் மங்க ...கிரெளஞ்சம் முதலான அனைத்து மலைகளும் நடுநடுங்கும்படியும்; ஏழு கடல்களிலும் நீர் வற்றும்படியும்

நிட்டூரர்குலம் அந்தரத்து ஏறவிடு கந்தவேளே ... துட்டர்களான அசுரர்களைக் கொன்று வானத்துக்கு அனுப்பிவைத்த கந்தவேளே!

அண்டமுற் பார்புகழும் எந்தை ... அண்டகோளம் முதலிய எல்லா உலகங்களும் போற்றுகின்ற எம் தந்தையும்;

பொற்பூர்புலிசை அம்பலத் தாடுமவர் தம்பிரானே. ... அழகு பொலியும் சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் ஆடுபவருமான சிவபெருமான் தந்த தம்பிரானே.

அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே.

சுருக்க உரை

பிரமன் தலைமீது தாவி, எட்டி, அழுந்தக் குட்டிச் சிவந்த கையையும், மகிழ்ந்த கண்ணையும் உடையவனே! கயற்கண்ணியான வள்ளியை, சட்டையைப் போல இறுகத் தழுவிக்கொள்பவனே! கிரெளஞ்சம் முதலான மலைகள் நடுங்கும்படியும்; ஏழு கடல்களும் வற்றும்படியும்; அசுரர் கூட்டம் இறந்து விண்ணை அடையும்படியும் வேலை வீசிய கந்தவேளே! அண்டம் முதலான எல்லா உலகங்களும் போற்றுகின்றவரும்; அழகிய சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் நடமிடுபவருமான சிவபெருமான் அருளிய தம்பிரானே!

விஷம் போன்ற வஞ்சகத்தை உள்ளத்தில் கொண்டிருப்பவர்களை நம்புவது து என்பதை உணர்ந்து; உன்மீது அன்பு பெருக; ‘எங்களப்பனே! உன் திருவடியே சரணம்’ என்று இங்கே கூவிக்கொண்டிருக்கிறேனே, அது உன் காதில் விழவில்லையா? உன் தேவியரை நீ வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நிற்பதால்தான் அப்படி என்குரல் உன் காதில் விழாமல் போனதா? உன் உபதேசத்தை யாரால் குறைத்து மதிப்பிட்டு காலம் தாழ்த்தமுடியும்? எனக்கு உன்னைவிட்டால் துணையென்று வேறுயார் இருக்கிறார்கள்? தேவர்களுக்கு எப்படி உற்ற துணையாய் ஆனாயோ, அதுபோலவே என் முன்னாலும் துணையாகத் தோன்றியருள வேண்டுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை