இது சிறுவை என்னும் தலத்துக்கான பாடல். இத்தலத்துக்கான இன்னொரு பாடலை நம்முடைய 236ம் தவணையில் குறித்திருக்கிறோம். சிறுவர்களான குச-லவர் அம்பு எடுத்துப் போர்புரிந்த தலமாதலால் சிறுவர் அம்பெடுத்த ஊர்—சிறுவரம்பேடு என்றும் பெயரிருக்கிறது.
இனிய நாதத்துக்கு அவசியமாகக் கருதப்படும் டகர, ணகர, ரகரங்கள் (ட, ண, ர வர்க்க எழுத்துகள்) இந்தப் பாடலில் விரவி நடைபயில்வதைக் காணலாம். எல்லா எழுத்துகளும் குறிலாய் அமைய, நெடிலெழுத்து (ஒற்று நீக்கி) 7, 15, 23, 27ம் எழுத்துகளாக வரிசையாக அமைவதைப் பார்க்கலாம். ஜலதரங்கம் ஒலிக்கும் நாதத்தை இந்தச் சந்த அமைப்பு ஏற்படுத்துகிறது.
‘தண்தமிழின் மிகு நேயா’ என்று முருகனை அழைக்கும் இந்தப் பாடல் இறைவனை நேரில் தரிசிக்கும் வரத்தை வேண்டுகிறது.
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூர
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/264363103&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

