பதச் சேதம் | சொற் பொருள் |
அண்டர் பதி குடி ஏற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன(ம்) மகிழ் மீற அருளாலே
| அண்டர்பதி: தேவர் தலைவனான இந்திரன்; மண்டு(தல்); செறிந்து, நிறைந்து இருத்தல்; மகிழ்மீற: மகிழ்ச்சி பொங்க; |
அந்தரி ஒடு உடன் ஆடு சங்கரனும் மகிழ் கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
| அந்தரி: காளி; கூர: (கூர்தல்) மிகுதல், பெருகுதல்; |
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண
| மண்டலம்: உலகம்; மஞ்சினன்: மஞ்சு—மேகம், மஞ்சினன்: மேகக்கூட்டங்களின் தலைவனான இந்திரன்; அயனார்: பிரமன்; |
மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
| மங்கை: (அலர்மேல்) மங்கை, இலக்குமி; அரி: திருமால்; மகிழ் கூற: மகிழ்ச்சியை எடுத்துச் சொல்ல; மைந்து: வலிமையான; |
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா
| புண்டரிக(ம்): தாமரை; அண்டர் மகள்: தேவசேனை; |
பொங்கு கடல் உடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடிவேலா
| நாகம்: மலை; இகல்: பகை; சாடு(ம்): வீசும், எறியும்; பொன்: வியாழன்—தேவகுரு; (வியாழன், தேவகுரு, வெள்ளி அசுரகுரு); பரவு: போற்றுகிற; |
தண் தரளம் அணி மார்ப செம் பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா
| தண்: குளிர்ந்த; தரளம்: முத்து; |
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவை தனில் மேவு பெருமாளே.
| சந்ததம்: எப்போதும்; |

அண்டர்பதி குடியேற ... தேவர் தலைவனான இந்திரனை மீண்டும் தேவலோகத்திலே குடியேறச் செய்து;

மண்டசுரர் உருமாற ... திரண்டு வந்த அசுரர்கள் (உயிருடனிருந்த வடிவத்திலிருந்து, வெறும் உடலாக மாறும்படி) இறக்கும்படியாக,

அண்டர்மன மகிழ்மீற அருளாலே ... தேவர்களுடைய மனங்களில் அளவற்ற மகிழ்ச்சி பொங்கும்படியாக அருள்செய்து;

அந்தரியொடு உடனாடு சங்கரனு மகிழ்கூர ... காளியம்மையோடு நடனம் செய்யும் சிவபெருமான் மகிழ்ச்சிகொள்ளும்படியும்;

ஐங்கரனும் உமையாளு மகிழ்வாக ... கணபதியும் உமாதேவியும் மகிழ்ச்சியடையும்படியும்;

மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு ... உலகிலுள்ள அனைவரும், முனிவர்களும், எட்டுத் திசைகளிலும் இருப்பவர்களும்,

மஞ்சினனும் அயனாரும் எதிர்காண ... (இவர்களோடு) இந்திரன், பிரமன் முதலானோர் எதிரிலே நின்று கண்டுகளிக்கும்படியாகவும்;

மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூர ... அலர்மேல் (தாமரையின் மேல்) வீற்றிருக்கும் மங்கையான திருகளும் திருமாலும் மனத்தில் இன்பம் கொண்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்படியும்;

மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ... வலிமை நிறைந்ததான மயிலில் ஏறிக்கொண்டு ஆடியபடி நீ என்முன்னே வரவேண்டும்.

புண்டரிக விழியாள ... தாமரை மலரைப் போன்ற விழிகளை உடையவனே!

அண்டர்மகள் மணவாளா ... தேவர்களிடத்திலே வளர்ந்த தேவானையின் மணாளனே!

புந்திநிறை யறிவாள வுயர்தோளா ... அறிவுசெறிந்த ஞானியே! உயர்ந்த தோள்களை உடையவனே!

பொங்குகடலுடன் நாகம் விண்டு ... பொங்குகின்ற கடலும்; குலகிரிகளும் பிளவுபடும்படியாக,

வரை யிகல்சாடு ... கிரெளஞ்ச மலையான பகையை வேலாலே சாடியவனே!

பொன்பரவு கதிர்வீசு வடிவேலா ... பொன்னின் ஒளியைப் பரப்பிச் சுடர்விடும் கூரிய வேலை ஏந்தியவனே!

தண் தரள மணிமார்ப ... குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பை உடையவனே!

செம்பொனெழில் செறிரூப ... செம்பொன்னாலே வடித்ததைப் போன்ற திரண்ட அழகை உடைய ரூபனே!

தண்டமிழின் மிகுநேய முருகேசா ... குளிர்ச்சியான தமிழின்மேல் மிகுந்த நேசம் கொண்டவனே! முருகேசனே!

சந்ததமும் அடியார்கள் சிந்தையது... எப்போதும் அடியார்களுடைய சிந்தையிலும்,

குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே. ... குளிர்ச்சியான சிறுவைத் தலத்திலும் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

தாமரை மலர்போன்ற விழிகளை உடையவனே! தேவர்களிடத்திலே வளர்ந்தவளான தேவானைப் பிராட்டியின் மணாளனே! உயர்த தோள்களை உடையவனே! பொங்கிய கடலும்; (குலகிரிகளான) ஏழு மலைகளும் பிளவுபடும்படியும்; பகையாய் எழுந்த கிரெளஞ்சகிரி துகளாகும்படியும் சாடியவனே! பொன்னின் ஒளியைப் பரப்பிச் சுடர்விடும் கூர்மையான வேலை ஏந்தியவனே! குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே! செம்பொன்னால் வடிக்கப்பட்டதைப் போன்ற திரட்சியான அழகே உருவாய் விளங்குபவனே! குளிர்ந்த தமிழின்மேல் மிக்க நேசம் கொண்ட முருகேசனே! அடியார்களுடைய சிந்தையிலும் குளிர்ச்சியான சிறுவைத் தலத்திலும் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே!

தேவர் தலைவனான இந்திரன் தன்னுடைய பொன்னுலகத்துக்கு மீண்டும் குடியேறும்படியும்; நெருங்கித் திரண்டு வந்த அசுரர்கள் உருவம் அழிந்து இறக்கும்படியும்; தேவர்களுடைய மனத்திலே மகிழ்ச்சி பெருகும்படியும் (அன்று செய்த அந்த) அருளோடும்;

காளியோடு ஆடும் சங்கரன் மனத்திலே மிக்க மகிழ்ச்சியை அடையும்படியும்; உலகத்தில் உள்ளவர்களும் முனிவர்களும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்களும், இவர்களோடு இந்திரனும் பிரமனும் எதிரே நின்று காணும்படியும்; தாமரையில் வீற்றிருக்கும் திருமகளும் திருமாலும் மனத்தில் இன்பம் கொண்டு தம் மகிழ்ச்சியை எடுத்துச் சொல்லும்படியும்

வலிமை நிறைந்ததாகிய அந்த மயிலோடும் நீ ஆடியபடி என்முன்னே தோன்றியருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரியில் ஏப்.15ஆம் தேதி பிரதமர் மோடி சாலை வலம்

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

பிளேயிங் லெவனில் விளையாடாத நிதீஷ் ராணாவுக்கு அபராதம்..! என்ன காரணம்?

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை