பதச் சேதம் | சொற் பொருள் |
அணி பட்டு அணுகி திணி பட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும்
| அணிபட்டு: வரிசையாக; அணுகி: நெருங்கி; திணிபட்ட மனத்தவர்: திண்மையான (கல்போன்ற) மனத்தினர்; |
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும்
| அரி: வண்டு; கழை: கரும்பு; தவர்: வில்; வளத்தவன்: செல்வன், சீமான்; |
பிணி பட்டு உணர்வு அற்று அவம் உற்று இயமன் பெறும் அக்குணம் உற்று உயிர் மாளும்
| அவம்: கேடு; |
பிறவி கடல் விட்டு உயர் நற் கதியை பெறுதற்கு அருளை தர வேணும்

கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை க(ண்)ணி உற்றிடுவோனே
| கணி: வேங்கை மரம்; மலைக் கனி: மலைக் கன்னி—வள்ளி; க(ண்)ணி: கருதி; |
கமலத்து அயனை ப்ரணவத்து உரையைக் கருதி சிறை வைத்திடுவோனே

பணியப் பணியப் பரமர்ப் பரவப் பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே
| பணியப் பணியப் பரமர்: பணி, அப்பு அணி அப் பரமர். பணி: பாம்பு; அப்பு: நீர்—கங்கை; |
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே.
| பவளம்: சிவந்த; தவள: வெண்மை (நிறங்கள்); புரிசை: மதில்; |

அணிபட்டு அணுகித் திணிபட்ட மனத்தவர் ... வரிசை வரிசையாகச் சேர்ந்த கல் போன்ற மனத்தைக் கொண்ட பொதுப்பெண்கள்,

விட் டவிழிக் கணையாலும் ... செலுத்துகின்ற பார்வையாகின்ற அம்பாலும்;

அரிசுற் று கழைத் தவர்பெற்ற வளத்தவன் ... வண்டுகள் சுற்றிலும் மொய்க்கும் கரும்பு வில்லை உடைய சீமானான மன்மதன்,

விட்டமலர்க் கணையாலும் ... எய்த மலர் அம்புகளினாலும்,

பிணிபட்டு உணர்வற்று அவமுற்று ... மனத்திலே நோய் பற்றிக்கொண்டு, அறிவுபோய், கேட்டை அடைந்து;

இயமற் பெறும் அக் குணமுற்று உயிர்மாளும் ... யமனை அடையச் செய்யும் அத்தகைய குணங்களை அடைந்து, உயிரைவிட்டு இறக்கின்ற—

பிறவிக் கடல்விட்டு ... பிறவிக் கடலை விட்டு நீங்கி,

உயர்நற் கதியைப் பெறுதற்கு அருளைத் தரவேணும் ... உயர்ந்த நல்ல கதியை அடியேன் அடைவதற்கு உன்னுடைய அருளைத் தரவேண்டும்.

கணிநற் சொருபத்தை யெடுத்து ... நல்ல வேங்கை மரத்தின் வடிவத்தைத் தாங்கி,

மலைக் கனியைக் கணியுற்றிடுவோனே ... மலைக் கன்னியாகிய வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றடைந்தவனே!

கமலத்து அயனைப் ப்ரணவத்து உரையைக் கருதி சிறைவைத்திடுவோனே... தாமரை மலர்ப் பீடத்திலே அமர்ந்துள்ள பிரமனை, பிரணவத்தின் பொருளைச் சொல்ல முடியாமையால் சிறையில் அடைத்தவனே!

பணி அப்பு அணி அப் பரமர்ப் பரவ ... பாம்பையும் கங்கையையும் சடாமுடியில் அணிந்தவரான சிவபெருமான் உன்னைத் துதிக்க,

பரிவுற்று ஒருசொற் பகர்வோனே ... அவரிடத்திலே பரிவு கொண்டு, பிரணவப் பொருளை உபதேசித்தவனே!

பவளத் தவளக் கனகப் புரிசை பழநிக் குமரப் பெருமாளே.... சிவந்த நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் உள்ள மதில்கள் சூழ்ந்த பழனிப்பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே!

சுருக்க உரை

நல்ல வேங்கை மரத்தின் உருவை எடுத்து, மலைக் கன்னியான வள்ளியம்மையை அடைய நினைத்து அவரிடத்தில் சென்று நின்றவனே! தாமரையில் வீற்றிருக்கும் பிரமனை, (அவன்) பிரணவத்துக்குப் பொருள் சொல்லமாட்டாமையினால் சிறையில் இட்டவனே! பாம்பையும் கங்கை நதியையும் சடையில் அணிந்துள்ள பரமனார் உன்னைத் துதிக்க, அவரிடம் பரிவுகொண்டு பிரணவப் பொருளை உபதேசித்தவனே! சிவந்த நிறத்திலும் வெள்ளை நிறத்திலுமுள்ள மதில்கள் சூழ்ந்ததான பழனியில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமானே!

வரிசை வரிசையாகச் சேர்ந்துகொள்ளும் கல்போன்ற மனத்தையுடைய பொதுமகளிர் எய்யும் பார்வையாகிய அம்பாலும்; வண்டுகள் மொய்க்கின்ற கரும்பு வில்லை உடைய மன்மதன் செலுத்தும் மலர் அம்பாலும் நான் மனநோய் அடைந்து, அறிவு கெட்டு, கேட்டை அடைந்து, யமகதியை அடையும் அந்தத் தீய குணங்களையே அடைந்து, இவ்வுயிர் மாளும்; மீண்டும் பிறக்கும். இவ்வாறு மீண்டும் மீண்டும் சுழன்று சுழன்று வருவதான பிறவிக் கடலிலிருந்து அடியேன் விடுபட்டு உயர்ந்த நற்கதியை அடைவதற்கு உனது திருவருளைத் தரவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை