இது தில்லைத் திருப்புகழ். உலகிலே தாய் தந்தையர் தேடிவைத்த செல்வம், உறவினர், ஏதோ ஓரளவுக்குக் கற்ற கல்வி இவ்வாறெல்லாம் என்னதான் இருந்தாலும் போதாமை, உள்ளம் நலிதல், நைதல் என்றெல்லாம் வாடும் நிலைமை மாறவேண்டும் என்று இந்தப் பாடலில் கோருகிறார். இந்தப் பாடலில் உள்ள தாளக் கலவை மிக அழகானது. தத்த என்பது வல்லோசை; தன்ன என்பது மெல்லோசை; தய்ய என்பது இடையோசை—இடையின ஓசை. இப்படி மூன்றுவகையான ஓசைகளும் கலந்து அமைந்துள்ள சந்தம் இது. பல பாடல்களில் இருப்பதைப் போல, கடைசிச் சீரின் மூன்றாவது எழுத்தைத் தவிர மற்ற எல்லாம் குற்றெழுத்துகள். அடிக்கு—ஒற்றொழித்து—22 எழுத்துகள்.
இப்பாடலில் உள்ள பல சொற்கள் இன்றைக்கு அன்றாட வழக்கிலிருந்தாலும், குறிப்பிட்ட சில contextல் மட்டும் வேறுவடிவங்களில் பயன்படுத்தப்படுவதால், சொற்பொருள் தெரியாததைப் போன்ற ஒரு மயக்கத்தைத் தந்தாலும் வழக்கிலுள்ள அந்தந்தச் சொற்களோடு தொடர்புபடுத்திக் கொண்டால் பொருள் எளிதில் விளங்கும். அதை நாளைக்குச் செய்வோம். இப்போது பாடல்.
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/265811793&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலை சேதம்: மக்கள் போராட்டம்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

